உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/"இதுசத்தியம்" என்றால்!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

"இதுசத்தியம்" என்றால்! · 190 / 391

"இதுசத்தியம்" என்றால்! செ ன்னை கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்தில் மிகவேகமாக எம்.ஜி.ஆர். அவர்களைத் தாக்கிய நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் நான்கு ஆண்டுகள் கழித்துக் கழக கழக ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு கழகத்திலிருந்து விலகி "மக்கள் தி.மு.க."

என ஒரு கட்சி கண்டு, அந்தக் கட்சியுடன் எம்.ஜி.ஆர். கட்சியில் போய் இணைந்து அங்கே அமைச்சர் பதவி பெற்றுக் கொண்டார். அம்மையார் சத்தியவாணிமுத்து அவர்கள், கழக அமைச்சரவையிலிருந்து விலக்கப்பட்ட காரணத்தால் அவர்களும் சில ஆண்டுகளுக்குப் பிறகு எம்.ஜி.ஆர். கட்சிக்குச் சென்று ராஜ்யசபா பதவி பெற்றுக்கொண்டார். எனது அமைச்சரவையில் இருந்த ராஜாராம், மாதவன் ஆகியோரும் கழக ஆட்சி கலைக்கப்படும் வரையில் பதவியிலே இருந்து எம்.ஜி.ஆர்.

அவர்களைக் கடுமையாக விமரிசனம் செய்து கொண்டிருந்தார்கள். கழக ஆட்சி, மத்திய அரசினால் கலைக்கப்பட்ட பிறகு கழகம் பல சோதனைகளுக்கு ஆளாகிய நேரத்தில் கழகத்தை விட்டு விலகி நாவலருடன் இணைந்து அவர்களும் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து கொண்டனர். அவர்கள் இருவரும் எம்.ஜி.ஆர். அவர்களை விலக்கியதை நியாயப்படுத்திப் பேசியதை இப்போது நினைவுபடுத்துவது அவசியம். இதோ: இன்றைய எம்.ஜி.ஆர். கட்சியின் சபாநாயகர்-அன்றைய கழக அமைச்சர்; நண்பர் ராசாராம் அவர்கள் பேசியது:- "கழகத்தை விட்டு சம்பத் விலகியபோது மாற்றுக் கட்சிகளும் பல பத்திரிகைகளும் பெரிதுபடுத்தின.

ஆனால் அவரது கதை உங்களுக்குத் தெரியும், அரசியல் வியாபாரத்திற்காக வந்த அவர் அது நடக்காமல் இப்போது கோழி வியாபாரத்தில் இறங்கியிருக்கிறார். 1971-ல் நடந்த பொதுத் தேர்தலில் நம்மை ஒரு சாதாரண நகைச்சுவை நடிகர் "சோ" எதிர்த்தார். அவரை ஜனசங்கத்தினர் புதுடில்லிக்கே அழைத்துப் பேசச் சொன்னார்கள். என்ன நடந்தது? அவரால் ஜெயிக்கவா முடிந்தது? என்ன ஆனார் அவர்? எம்.ஜி.ஆர். இதை எல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இன்றைக்கு காமராசரின் அரவணைப்பையும் பக்தவத்சலத்தின் பாசத்தையும் சுப்பிரமணியத்தின் அன்பையும் பார்க்கிறபோது எம்.ஜி.ஆருக்கு சற்று சுறுசுறுப்பாகத்தான் இருக்கும். ஆனால் அந்தக் கிறுகிறுப்பு நீடிக்குமானால் நிச்சயம் ஆபத்தாகிவிடும். எம்.ஜி.ஆர். மீது எந்தவிதமான வெறுப்பும் எங்களுக்கு இல்லை. ஆனால் அவரைவிட கழகத்தை நாங்கள் மேலாக மதிக்கிறோம். ரோமாபுரி வரலாற்றில் ஒரு சம்பவம். நான் சீசரை நேசிக்கிறேன்; ஆனால் அதைவிட மேலாக ரோமாபுரியை நேசிக்கிறேன் என்று புரூட்டஸ் சொல்கிறான்.

அதேபோல்தான் நாங்கள் எம்.ஜி.ஆரை, நேசிக்கிறோம். ஆனால் அவரினும் மேலாக கழகத்தை நேசிக்கிறோம். எம்.ஜி.ஆர். ஒரு தனி மனிதர். கழகமோ லட்சோப லட்சம் மக்களால் உருவாக்கப்பட்டது. கழகம் அழிந்தால் தமிழகத்திற்கு வேறு வழி கிடையாது. இதை எல்லாம் மனதிற் கொண்டுதான்-கழகத்தின் நலனைக் கருதித்தான் எம்.ஜி.ஆர். மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஜனநாயக ரீதியில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த முடிவை நாடு ஏற்கும்-நல்லவர்கள் ஏற்பார்கள்.

இது ராசாராம் பேசியது! அது மட்டுமல்ல; அண்ணாவின் மருத்துவ சிகிச்சைக்காக எம்.ஜி.ஆர். பண உதவி ராசாராம் மூலமாக அனுப்பியதாக எம்.ஜி.ஆர். பேசியதை மறுத்துப் பின்வரும் ஒரு அறிக்கையும் விடுத்தார். அந்த அறிக்கை இதுதான்:- "காஞ்சிபுரத்தில் பேசிய எம்.ஜி,ஆர். அவர்கள் அறிஞர் அண்ணா அவர்கள் மருத்துவமனையில் இருந்தபோது தான் செலவுகளைச் செய்ததாத வெளியிட்டு அதில் என் பெயரையும் ஏனோ இழுத்துள்ளார். அந்தச் செய்தியைச் சொன்ன அவர் ஓர் பயங்கரமான செய்தியைச் சொல்வது போல கூறியுள்ளார்.

அவரது வார்த்தைகள் என்னைத் திடுக்கிட வைத்தன. கோபத்திலும் ஆத்திரத்திலும் செய்யப்படும் நடவடிக்கைகள், பேசும் பேச்சுகள் அத்தனையும் நிதானம் தவறித்தான் இருக்கும் என்பதை நான் நன்கறிவேன். அறிஞர் அண்ணா அவர்கள் சொல்லிய செய்தியை அண்ணாவின் மகனே வந்து தன்னிடம் சொல்லியதாகவும் அவரைத் தான் நம்பாமல் என்னிடம் பணம் கொடுத்ததாகவும் கூறிள்ளார் எம்.ஜி.ஆர். இப்போதுதான் அவரது எண்ணம் வெளியிடப்படுகிறது. எடுத்த எடுப்பிலேயே அண்ணாவின் மகனை நம்பவில்லையாம்.

காலம் கனிந்தால் ஒருவேளை தான் அண்ணாவையே நம்பவில்லை என்று கூறுவார் போல் தெரிகிறது. அவர் புதுக்கட்சியின் தலைவர் ஆனதிலிருந்து தி.மு.க.வில் உள்ள அமைச்சர்கள் முதல் கிளைக்கழகச் செயலாளர்கள் வரை கணக்கு கேட்கிறார். அறிஞர் அண்ணா அவர்கள் மறைந்தது 1969-ஆம் ஆண்டு பெப்ரவரி 3-ஆம் தேதி. எல்லோரையும் கணக்கு கேட்கும் இவர்தான் சொல்கிறாரே, அந்தச் செலவு பற்றி 1969-ஆம் ஆண்டு வாக்கில் அண்ணாவே அப்படிச் சொன்னதில்லை.

கலைஞரால் கூட அப்படிச் சொல்ல முடியாது. கழகம் மக்களுடையதாகி விட்டது. நம்மிடம் அவர் கணக்கு கேட்கிறார். எந்தக் கட்சியிலிருந்து யார் விலகினாலும் இந்தக் இந்தக் கேள்வியைக் கேட்பது வழக்கம். காங்கிரசைவிட்டு வெளியேறியபோது பெரியாரிடம் கணக்கு கேட்கப்பட்டது. சம்பத் நம்மைவிட்டு விலகியபோதும் நாவலரைப் பார்த்து கணக்கு கேட்டார். காங்கிரசை விட்டு சுப்பிரமணியம் விலகியபோது காமராசரிடம் கணக்கு கேட்டார். இப்போது நம்மைப் பார்த்து எம்.ஜி.ஆர்.

கணக்கு கேட்கிறார். 24 மணி நேரமும் கழகத்திற்காகவே பணியாற்றுகிறார் கலைஞர்.-அதனால்தான் நாங்கள் எல்லாம் அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கிறோம். அவரது படத்தை உடைக்கிறார்கள் அவரது சீடர்கள் - கழகக் கொடியை வெட்டுகிறார்கள். அவர்கள் எல்லாம் கழகத் தோழர்கள் தானாம் அவர் சொல்கிறார். யாராவது நம்புவார்களா?"

அடுத்து நண்பர் மதுரை முத்து அவர்கள் பேசியபிறகு, நான் உரையாற்றினேன். எனது உரையை அடுத்த அத்தியாயத்தில் வெளியிடுகிறேன். அதற்கு முன்பு, தமிழரசுக் கழகத் தலைவர், சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் அவரது "செங்கோல்" பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் சில பகுதிகளை இங்கே குறிப்பிடுகிறேன். கொள்கை சம்பந்தமில்லாத ஒரு விஷயத்தில் தி.மு.க.வுடன் பூசல் ஏற்படுத்திக் கொண்டுள்ளார் எம்.ஜி.ஆர். இதற்கான காரணத்தைப் புரிந்துகொள்வது கஷ்டமாக இருக்கின்றது.

எம்.ஜி.ஆர். தமது தொகுதியில் நடந்த கூட்டமொன்றில் எம்.ஜி.ஆர்.மன்றங்கள் மு. க. முத்து ரசிகர் மன்றங்களாக மாற்றப்பட்டு வருகின்றன என்று மிகுந்த வேதனையோடு கூறினார். அவருடைய வேதனையைப் புரிந்துகொண்ட முதல்வர். மு.க.முத்து மன்றங்கள் கலைக்கப்பட வேண்டும்.'

என்று அறிக்கை விட்டார். அத்துடன் பூசல் முடிந்துவிடுமென நம்பினோம். ஆனால் முடியவில்லை. மற்றொரு கூட்டத்தில், வட்டச் செயலாளரிலிருந்து எல்லோரும் கணக்கு காட்ட வேண்டுமென்றார். உண்மையில் முதல்வர் கூறியது போன்று, எம்.ஜி.ஆர். கோருவது இதுவரை உலகில் எந்தக் கட்சியும் கடைப்பிடிக்காததாகும். சட்டமன்றத்தில் ஆண்டுதோறும் கணக்கு கொடுக்கும் கடமையை எம்.ஜி.ஆர். நிறைவேற்றவில்லை என்றும், 13 முறை நினைவூட்டுக் கடிதம் அனுப்பியும் பயனில்லை என்றும் சொல்லப்படுகிறது.

நிலைமை இதுவாக, திடீரென்று வட்டச் செயலாளர்களிடமும் அவர்கள் உறவினர்களிடமும் சொத்துக் கணக்கு கேட்க வேண்டுமென்று எம்.ஜி.ஆர். கோரியதில் நியாயம் இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை. எம்.ஜி.ஆரின் இந்தக் கோரிக்கை கட்சி முழுவதையுமே புண்புடுத்தியதாகுமென்று கூறுவதில் நியாயம் இருக்கிறது. மதுவிலக்கை தி.மு.க. அரசு கைவிட்டது பற்றியும் இப்போது எம்.ஜி.ஆர். குற்றம் சொல்லுகிறார். இதிலும் அவரது வாதத்தில் வலிமை இல்லை.

மதுவிலக்கு எடுபடுவதை முதலில் ஆதரித்துவிட்டு, இப்போது எதிர்ப்பது என்பது பொதுவாழ்வில் நேர்மையைக் கடைப்பிடிப்பது ஆகாது. ஆனால் எம்.ஜி.ஆர். சொத்துக் கணக்கு கேட்பது தன் கழகத்திற்கு எதிர்க் கட்சியாக உள்ள இந்திரா காங்கிரசிடமல்ல; தான் எந்தக் கழகத்தின் பொருளாளராக இருக்கிறாரோ அந்தக் கழகத்தாரிடம் தான் கேட்கிறார். கட்சிக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு கட்சியின் பொதுக்குழுவிலே அதைக் கேட்க வேண்டும்.

மேல்மட்டத் தலைவர்களில் ஒருவரான அவரே இந்தக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கத் தவறியது சாதாரண விஷயமல்ல. பொதுக்குழு கூடும் தேதி தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையிலே அன்பர் எம்.ஜி.ஆர். தெருவில் நின்றா கணக்கு கேட்பது? "எனது தீர்மானம் பொதுக்குழுவில் ஏற்கப்படாவிட்டால் நான் மக்களை அணுகுவேன்" என்று எம்.ஜி.ஆர்.

பேசியது தி.மு.க. மட்டுமல்லாமல் கட்சிக் கட்டுப்பாட்டையும், ஒழுங்கையும் விரும்பும் எந்தக் கட்சியும் பாராட்ட முடியாததாகும். தி.மு.க. கழகம் மிகுந்த துணிவோடு தனிப்பட்ட விருப்பு வெறுப்பை மறுத்து கட்சியின், நாட்டின் நலன் கருதி அன்பர் எம்.ஜி.ஆர். மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது. இதனை தனி நபர்களைவிடவும் கட்சிதான் பெரிது என்ற சிந்தாத்தத்தில் நம்பிக்கை உடைய கட்சிகள் அனைத்துமே ஆதரிக்கக் கடமைப்பட்டிருக்கின்றன.

தி.மு.க. அரசு, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தமிழினத்தின் தனி நலன்களுக்கும் பாடுபட்டு வருகின்றது. தமிழின்-தமிழினத்தின் பகைவர்கள் இந்த அரசை ஒழித்துக்கட்ட முயன்று வருகின்றனர். அவர்கள் வெற்றிக்கு தெரிந்தோ தெரியாமலோ உதவுவோர் தமிழின் - தமிழினத்தின் வருங்காலத்திற்கு கேடு செய்வோராவார். இந்தக் கோணத்தில் நின்று பார்த்தும் நாம் தி.மு.க. பொதுக்குழுவின் முடிவு தவிர்க்க முடியாதென்று கருதுகின்றோம்.

எம்.ஜி.ஆர். எதிர்காலத்தில் எப்படி நடந்துகொண்டாலும் சரி; தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க. அரசுக்குப் தொடர்ந்து தங்கள் ஆதரவை அளித்து வரவேண்டும். வேறுவிதமான நடப்பவர்களை வருங்காலத் தலைமுறை வாழ்த்தாது. இது சத்தியம்." இப்படி எழுதினார் சிவம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்தான் இன்றைய எம்.ஜி.ஆர். ஆட்சியில் சட்டமன்ற மேலவைத் தலைவராகப் பணியாற்றுகிறார்!