தொகுதி 54 · கடிதம் 4041
தமிழகச் சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு
2016-08-21
உடன்பிறப்பே,
தமிழகச் சட்டமன்றம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை ஏடுகளின் வாயிலாகத் தமிழ்நாட்டு மக்கள் தினந்தோறும் படித்தறிந்து வருத்தமும் வேதனையும் அடைந்து வருகிறார்கள். தமிழகச் சட்டமன்றத்தில் ஜனநாயகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கு ஒருசில உதாரணங்கள்:-
தி.மு.கழகத்தின் சார்பில் 89 உறுப்பினர்கள் இடம்பெற்ற காரணத்தினால் ஒவ்வொரு நாளும் மூன்று Gut பேசுவதற்கு அனுமதி கேட்டதற்குத் தர மறுத்துவிட்டாரகள்.
மானியக் கோரிக்கைகள் விவாதத்தின்போது சில முக்கிய துறைகள் மீதான விவாதம் இரண்டு நாட்கள் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு எந்த மானியத்தின் மீதும் இரண்டு நாட்களுக்கு விவாதமே கிடையாது. ஏனென்றால் எதிர்க்கட்சிகளைப் பேச விட்டால்தானே இரண்டு நாட்கள் தேவைப்படும்.
காவல் துறை போன்ற முக்கிய துறைகளுக்கு எப்போதும் இரண்டு நாள் விவாதம் என்பதை, ஒரு நாள் என்று மாற்றினார்கள். இதுதான் அ.தி.மு.க. ஆட்சி ஜனநாயகத்தின்மீ தும், சட்டமன்ற விவாதங்களின்மீதும் கொண்டிருக்கும் நம்பிக்கை.
இந்த ஆட்சிக்கு உள்ள மற்றொரு பெருமை 2011ஆம் ஆண்டு பொறுப்புக்கு வந்த பிறகு 5 முறை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றுள்ளது. இந்த ஐந்து ஆண்டுகளிலும் ஜனநாயக ரீதியான விவாதங்களுக்குச் சட்டப்பேரவையில் அனுமதி மறுக்கப்பட்டதால், தி.மு.க. “தமிழகச் சட்டமன்றத்தில்
ஜனநாயகம் படும் பாடு” என்ற தலைப்பில் மக்கள் மன்றத்தில்தான் பேசியிருக்கிறது.
ஒரே வார்த்தையை ஆளுங்கட்சித் தரப்பிலும், எதிர்க்கட்சியின் தரப்பிலும் உச்சரித்த போதிலும், பேரவைத் தலைவர் ஆளுங்கட்சி குறிப்பிட்ட வார்த்தையை அவை ரடவடிக்கைக் குறிப்பில் இடம்பெறச்செய்கிறார. அதேநேரத்தில் கழக உறுப்பினர்கள் அதே வாரத்தையைப் பயன்படுத்தியதை மட்டும் நடவடிக்கைக் குறிப்பிலிருந்து நீக்கி விடுவார். இதுதான் பேரவைத் தலைவரின்
“கண்ணோட்டம்”!
தமிழகச் சட்டப்பேரவையிலிருந்து தற்போது, தி.மு.கழக உறுப்பினர்கள் ஒரு வார காலத்திற்குச் சபை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாத அளவிற்கு பேரவைத் தலைவர் அவர்களால் “சஸ்பென்ட்” செய்யப்பட்டிருக்கிறார்கள். அப்படி அவர்கள் செய்த குற்றம்தான் என்ன? பேரவைத் தலைவர், கழக உறுப்பினர்களை வெளியேற்றி ஆணை பிறப்பித்தபோது, அவையிலே இல்லாமல் நூலகத்தில் இருந்தவர்கள் மீதெல்லாம் விதிகளை மீறி
“சஸ்பென்ட்” நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் பேசிய ஒரு சில ஆளுங்கட்சி உறுப்பினர்களும், அமைச்சர்களும் தேவையில்லாமல் தி.மு.கழகத்தை, அதன் தலைவராகிய என்னையும், எதிர்க்கட்சித் தலைவர் தம்பி ஸ்டாலினையும் தாறுமாறாக ஏசியபோது, தனிப்பட்ட முறையில் தாக்க முற்பட்டபோது, அதற்குப் பதில் அளிக்க முற்பட்டதுதான் வெளியேற்றத்திற்கான காரணம்.
சட்டப்பேரவை விதி 42இன் உட்பிரிவுகள், “வினாவைத் தெளிவுபடுத்துவதற்குத் தேவையிலலாத ஒரு பெயரையோ, ஒரு விவரத்தையோ வெளியிடுவதாக இருக்கக் கூடாது; வாதங்கள், யூகங்கள், மறைமுகமான குற்றச்சாட்டுகள், கேலிச் சொற்கள், அவதூறுக் கூற்றுகள் ஆகியவற்றைக் கொண்டிருத்தல் கூடாது” என்றெல்லாம் தெளிவாகக் கூறுகின்றன. ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கேள்வி நேரத்தில், எதிர்க்கட் சியினர் சட்டமன்றத்தை நடத்தவிடாமல் தடுக்கிறார்கள்
என்ற குற்றச்சாட்டினைக் கூறினார். பேரவைத் தலைவர் அந்தக் குற்றச்சாட்டினை அவை நடவடிக்கைக் குறிப்பிலிருந்து எடுக்க மறுத்துவிட்டார். எதிர்க்கட்சித் தலைவர், “சட்டப்பேரவை நடவடிக்கைகளை நடத்துவதற்கு நாங்கள் முழு ஒத்துழைப்புத் தரத்தயாராக இருக்கிறோம்; ஆனால் அவைக்குறிப்பிலிருந்து ஆளுங்கட்சி உறுப்பினரின் குற்றச்சாட்டை நீக்க வேண்டும்” என்று வலியுறுத்தியும் பேரவைத் தலைவர் அதற்கு முன் வரவில்லை. இந்த ஆட்சியில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மனம் போன போக்கில் வாய்க்கு வந்தபடி எப்படி வேண்டுமானாலும் பேசலாம்; எதையும் பேசலாம் என்பதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விளக்கமளித்திடக்கூட அனுமதி மறுக்கப்படுவதும்தான் ஜனநாயகமா?
ஒரே வார்த்தையை ஆளுங்கட் சித் தரப்பிலும், எதிர்க்கட் சியின் தரப்பிலும் உச்சரித்தபோதிலும், பேரவைத் தலைவர் ஆளுங்கட்சி குறிப்பிட்ட வார்த்தையை அவை நடவடிக்கைக் குறிப்பில் இடம்பெறச் செய்கிறார். அதேநேரத்தில் கழக உறுப்பினர்கள் அதே வார்த்தையைப் பயன்படுத்தியதை மட்டும் நடவடிக்கைக் குறிப்பிலிருந்து நீக்கி விடுவார். இதுதான் பேரவைத் தலைவரின்
“கண்ணோட்டம்”!
தமிழகச் சட்டமன்றம் பற்றி ஒரு முறை “ஆனந்த விகடன்” இதழ் எழுதியபோது, “ஜெயலலிதாவை ஆஆராதிப்பதும், கருணாநிதியை அவமரியாதை செய்வதும் தமிழ்நாடு சட்டசபையில் தவறாது நடக்கும் சடங்கு. சகுனம் பார்க்காமல் இதனை அரங்கேற்றிச் சண்டைக்கு நிற்கிறாகள், ஆளும் கட்சியினர்! அடுத்தவரைவிட “அம்மா” வை எப்படிப் புகழவது, இன்னொருவரைவிட கருணாநிதியை எப்படி இகழ்வது என்று போட்டி போடுகிறார்கள்” என்று எழுதியது. இது சரியான கூற்று என்பதை அ.தி.மு.க.வினர் பேரவையில் ஒவ்வொரு நாளும் நிரூபித்து வருகிறார்கள்.
3-8-2016 அன்று மின் துறை மானியத்தின் மீதான விவாதம் நடைபெற்றபோது, அ.தி.மு.க. உறுப்பினர் ஒருவர் “அவையில் 89 வயக்காட்டு பொம்மைகள்” இருப்பதாகப் பேசினார். தேவையில்லாமல் அப்படிப்பட்ட வாரத்தையை, எதிர்க் கட்சிகளைப் பற்றி எதற்காக ஆளுங்கட்சி உறுப்பினர் கூறவேண்டும்? உடனடியாக ஆளுங்கட்சித் தலைமை அதனைக்
கட்டுப்படுத்தியிருக்க வேண்டாமா? அந்த வார்த்தையை நீக்க வேண்டுமென்று கழக உறுப்பினர்கள் கேட்டபோது, அ.தி.மு.க. உறுப்பினர் பேசியது நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத சொல் அல்ல அது என்று முதலமைச்சரே வக்காலத்து வாங்கித் தூண்டும் வகையில் நடந்துகொண்டார். அதே நேரத்தில் தி.மு.கழக உறுப்பினர்களை வயக்காட்டு பொம்மைகள் என்று கூறலாம் என்றால், அ.தி.மு.க. உறுப்பினர்கள் கொத்தடிமைகளா என்று எதிர்க்கட்சித் தலைவர், தம்பி மு.க. ஸ்டாலின் கேட்டார். ஆனால் ஸ்டாலின் சொன்னதை அவைக் குறிப்பிலிருந்து நீக்கிய பேரவைத் தலைவர், ஆளுங்கட்சி உறுப்பினர் 89 வயக்காட்டு பொம்மைகள் என்று குறிப்பிட்டதை மட்டும் அவை நடவடிக்கைக் குறிப்பில் இருக்கலாம் என்று தீர்ப்பு வழங்கினார். இதுதான் அ.தி.மு.க. ஆட்சியில் சட்டமன்ற ஜனநாயகம்!
மானியக் கோரிக்கையின் மீது அமைச்சர் பதில் கூறுவதற்கு முன்பாகவே, பாதியிலேயே அவையை ஒத்திவைத்துவிட்டுச் சென்ற பெருமையும் இப்போதுள்ள பேரவைத் தலைவருக்கு
எத்தனையோ ஆண்டுக் காலமாகப் பேரவை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அவர்களுக்குரிய மாடத்தில் அதிகாரிகள் அமர்ந்திருப்பார்கள். பேரவைத் தலைவர் தற்போது திடீரென்று, அந்த அதிகாரிகளுக்கெல்லாம் வேறு எங்கேயோ இடம் ஒதுக்கி, அங்கே தொலைக்காட்சி வசதிகளைச் செய்துகொடுத்திருக்கிறார். இந்த விபரத்தை அவைக்குத் தெரிவிக்காததால், அதிகாரிகள் எலலாம் எங்கே என்று தம்பி துரைமுருகன் கேள்விகேட்க, அவர்கள் தொலைக்காட்சி வாயிலாக அவை நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருப்பதாகப் பேரவைத் தலைவர் கூறினார்.
சட்டமன்ற நிகழ்ச்சிகளைப் பெொதுமக்களுக்கே தொலைக்காட்சியில் ஒளி பரப்புவதில்லையே, அந்தப் பிரச்சினை நீதிமன்றத்தில் இருக்கிறதே, அப்படியிருக்கும்போது, பேரவைத் தலைவர் அதிகாரிகளுக்கு மட்டும் இந்த வசதியைச் செய்து கொடுக்கலாமா என்று துரைமுருகன் கேட்டதை அவை நடவடிக்கை குறிப்பிலிருந்து பேரவைத் தலைவர் நீக்கிவிட்டார். அதுதான் அ.தி.மு.க. அரசின் சட்டமன்ற ஜனநாயகம்!
மாநிலங்களவையில் ஒரு பெண் உறுப்பினர், தன்னை தமிழக முதல் அமைச்சர் அறைந்தார் என்று பேசினார். அவா பேசியது தொலைக்காட்சியிலே காட்டப்பட்டது. அதற்கு என்ன பதில் என்று கழகத்தின் சார்பில் ஸ்டாலின் கேட்டார். அதற்குப் பதிலும் கூறவில்லை; மாறாக ஸ்டாலின் பேசியதை அவை நடவடிக்கைக் குறிப்பிலிருந்து நீக்கினார்கள். “பூனை, கண்ணை மூடிக் கொண்டால் பூலோகம் இருண்டு போகுமோ?” என்ற பாணியிலதான் எல்லாம் நடைபெறுகின்றன.
கழக ஆட்சியில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டினை ஒரு அமைச்சர் குடும்ப மாநாடு என்று விமர்சித்தார். அவைக்குறிப்பிலிருந்து அதனை நீக்கப் பேரவைத் தலைவர் மறுத்துவிட்டார். அதன் காரணமாகக் கழக உறுப்பினர்கள் வெளி
நடப்பு செய்ய நேரிட்டது.
இரண்டு தினங்களுக்கு முன்பு பேரவையில் விவாதிக்கப்பட்டு முடிந்துவிட்ட ஒரு துறையின் சார்பில் 110வது விதியின் கீழ் சில அறிவிப்புகளை முதலமைச்சர் பேரவையிலே படித்த போது, அதைப் பற்றித் துரைமுருகன் கேள்வி கேட்டு, அந்தத் திட்டங்களுக்கு நிதி எங்கிருந்து வரும் என்று கேட்டார். ஆனால் பேரவைத் தலைவர் கழக உறுப்பினர்கள் பேசுவதற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். முதலமைச்சரின் அறிக்கையைப் பாராட்டிப் பேசுவதற்கு மட்டும் அனுமதி அளிக்கும் பேரவைத் தலைவர், ஏற்படும் சந்தேகத்தைத் தெரிவித்து விளக்கம் கேட்க அனுமதி அளிக்க மறுப்பது முரண்பாடலலவா என்று கூறித் தி.மு.க., காங்கிரஸ், முஸ்லீம் லீக் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.
கைத்தறித் துறை மானியத்தின் மீது விவாதம் நடைபெற்ற நாளன்று, எதிர்க்கட்சித் தலைவர் தம்பி ஸ்டாலின் பேசியது, அவை நடவடிக்கை குறிப்பில் இடம்பெற்றிருக்கிறது என்று பேரவைத் தலைவர் தீர்ப்பளித்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு, பேரவைத் தலைவரே மீண்டும் எழுந்து, அமைச்சர் பேசியது மட்டும் நடவடிக்கைக் குறிப்பிலே இடம்பெறும், எதிர்க்கட்சித் தலைவர் பேசியது அவை நடவடிக்கை குறிப்பிலே இடம்பெறாது என்று மாற்றித் தீர்ப்பளிக்கிறார் என்றால், நடப்பது ஜனநாயக ஆட்சியர்? அல்லது துக்ளக் தர்பாரா? - என்று கேட்கத் தோன்றுகிறதலலவா? தெளிவாகச் சிந்தித்து வழங்கப்படுவதால்தான் தீர்ப்பு; கொடுத்த
தீர்ப்பையே மாற்றி வழங்குவதற்குப் பெயர் தீர்ப்பு அல்ல: சிந்தனைச் சிதைவு!
பெரம்பலூர் மாவட்டத்தில் பத்து பள்ளிகளில் சத்துணவுத் திட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைப் பற்றி சட்டப்பேரவையில் கழக உறுப்பினர் அர. சக்கரபாணி பேசியதை, நடவடிக்கைக் குறிப்பிலிருந்து நீக்குவதாகப் பேரவைத் தலைவர் அறிவிக்கிறார். அரசின் ஆணையைக் காட்டித்தான் உறுப்பினர் பேசுகிறார், எதற்காக அதனை நீக்கவேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் தம்பி ஸ்டாலின் கேட்டபோது, நிதியமைச்சர் எழுந்து, அது மாவட்ட ஆட்சியரின் உத்தரவு, அரசாணை அல்ல என்று பதிலளித்திருக்கிறார். மாவட்ட ஆட்சியரின் உத்தரவை அவைக் குறிப்பிலிருந்து நீக்குவது மட்டும் ஏற்கக் கூடியதுதானா?
ஆளுங்கட்சிக்கும் எதிரக்கட்சிக்கும் இடையே வகிக்க வேண்டிய நடுநிலையைத் துறந்து, ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்களை மறந்து, சட்டப்பேரவையின் மாண்புகளுக்கும் மரபுகளுக்கும் விடை கொடுத்தனுப்பி விட்டு, ஆளுங்கட்சிக்கொரு நீதி - எதிர்க்கட்சிக்கு வேறொரு நீதி என்று நீதி நெறிமுறைகளைப் புரட்டிப் போட்டுவிட்டு, ஆளுங்கட்சியினர் உண்மைக்குப் புறம்பானவற்றை அடுக்கடுக்காகப் பேசிப் பதிவு செய்யத் தாராளமாக அனுமதிப்பதும் - எதிர்க்கட் சியினர் எடுத்துச் சொல்ல முற்படும் உண்மை விபரங்களை அனுமதிக்காமல் இருட்டடிப்பு செய்ய முயற்சிப்பதும் என சபாநாயகர் ஒரு குட்டி சர்வாதிகாரி போலச் செயல்பட்டு, தமிழகச் சபாநாயகர்கள் பட்டியலில் கரும்புள்ளி ஒன்றினை ஏற்படுத்துவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. வானளாவிய அதிகாரம் உண்டு என்று வாய் பிளந்து கொக்கரித்தவர்களெல்லாம் வரலாற்றின் ஓரத்திலே ஒதுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு விட்டார்கள் என்ற உண்மையினைத் தற்போது பொறுப்பிலே இருப்பவர்கள் நினைத்துப் பார்ப்பது நல்லது.
ஆளுங்கட்சி உறுப்பினர்களோ, அமைச்சர்களோ ஜனநாயகத்திற்கு விரோதமாகவும், உண்மைக்கு மாறாகவும் பேசி, அதுபற்றி எதிர்க் கட்சியின் சார்பில் எதிர்ப்பைத் தெரிவிக்கும் நேரத்தில், பேரவைத் தலைவர் நடவடிக்கை குறிப்பைப் படித்துப் பார்த்துவிட்டுத் தீர்ப்பு வழங்குவதாகக் கூறுகிறாரே தவிர, எந்தத் தீர்ப்பும் கூறுவதில்லை. குறிப்பாகக் கடந்த 25ஆம் தேதி ராஜன் செல்லப்பா பிரச்சினைக்குரிய வகையில் பேசிய போது, எதிர்க்கட் சி உறுப்பினர்கள் எதிர்ப்பினைத் தெரிவித்தார்கள். உடனே பேரவைத் தலைவர் உறுப்பினரின் பேச்சைப் Ug Ss Hol OS தீர்ப்பு கூறுவதாகச் சொன்னார். அதேபோல உறுப்பினர் தென்னரசு அவர்கள் பேசிய பேச்சுக்கும் அதே பதிலைத்தான் பேரவைத் தலைவர் கூறினார்.
இதையெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் எடுத்துச்சொல்லி, தீர்ப்புக் கூறுமாறு பேரவைத் தலைவரைக் கேட்டுக்கொண்டும், தீர்ப்பு கூறாததால், நிதியமைச்சரின் பதில் உரையைத் தி.மு.கழகம் புறக்கணித்தது.
நீதிமன்றத்தில் உள்ள பிரச்சினைகளை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினால், பேரவைத்தலைவர் தடுக்கிறார். அதே நேரத்தில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசினால் கண்டு கொள்வதில்லை. அமைச்சர் ஓ.எஸ். மணியன் இவ்வாறு நீதிமன்றத் தில் உள்ள பிரச்சினையைப் பேசிப் பேரவைத் தலைவர் அனுமதித்தபோது, கழக உறுப்பினர்கள் சொத்துக் குவிப்பு வழக்கு என்றுகூடச் சொல்லவில்லை, சுப்ரீம் கோட்டில் என்று சொன்னவுடனே, அதை அவைத் தலைவர் நடவடிக்கை குறிப்பிலிருந்து நீக்கி உத்தரவிட்டிருக்கிறார். “இதை நடவடிக்கை குறிப்பிலிருந்து நீக்கிய நீங்கள், அமைச்சர் பேசியதையும் நீக்க வேண்டுமென்று கேட்டபோது, பேரவைத் தலைவர் அதனை ஏற்கவில்லை.
“நாடாளுமன்றம் மற்றும் பல மாநிலச் சட்டமன்றக் கூட்டங்களின் கூட்ட நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படுவது போல் தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளும் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்
பப்படும்” என்று 2016 தமிழகச் சட்டப்பேரவைக்கான
தேர்தலையொட்டி தி.மு. கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டது. தற்போது, சட்டப்பேரவையைச் சபாநாயகர் சர்வாதிகார ரீதியாக நடத்திச் செல்லும் விதம் - அ.தி.மு.க.வினர் பேரவையே தமது தனி உடைமை என்ற எண்ணத்தில் எதையும் செய்வது, என்ன வேண்டுமானாலும் பேசுவது என்று நடந்து கொள்ளும் முறை - ஆகியவற்றின் காரணமாக, சட்டமன்ற நடவடிக்கைகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. தகவல் பெறும் உரிமைச் சட்டம் நடைமுறையில் இருந்துவரும் நிலையில், தங்களால் தோர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் எப்படி நடந்துகொள்கிறார்கள், என்ன பிரச்சினைகளைப் பேசுகிறார்கள் என்பதை முழுவதுமாகத் தெரிந்துகொள்ளும் உரிமை வாக்காளப் பெருமக்களுக்கு உண்டு. எனவே எந்தச் சாக்குபோக்கும் சொல்லி இனியும் காலம் கடத்தாமல் சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்து மக்களுக்கிருக்கும் உரிமையைப் பாதுகாத்திடத் தமிழக அரசு உடனடியாக முன்வர வேண்டும். ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே வகிக்க வேண்டிய நடுநிலையைத் துறந்து, ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்களை மறந்து, சட்டப்பேரவையின் மாண்புகளுக்கும் மரபுகளுக்கும் விடைகொடுத்தனுப்பிவிட்டு, ஆளுங்கட்சிக் கொரு நீதி - எதிர்க்கட்சிக்கு வேறொரு நீதி என்று நீதி நெறி முறைகளைப் புரட்டிப்போட்டுவிட்டு, ஆளுங்கட்சியினர் உண்மைக்குப் புறம்பானவற்றை அடுக்கடுக்காகப் பேசிப் பதிவ செய்யத் தாராளமாக அனுமதிப்பதும் - எதிர்க்கட்சியினர் எடுத்துச் சொல்ல முற்படும் உண்மை விபரங்களை அனுமதிக்காமல் இருட்டடிப்பு செய்ய முயற்சிப்பதும் என சபாநாயகர் ஒரு குட்டி சர்வாதிகாரி போலச் செயல்பட்டு, தமிழகச் சபாநாயகர்கள் பட்டியலில் கரும்புள்ளி ஒன்றினை ஏற்படுத்துவது ஏற்றுக் கொள்ளக் கூடியதலல. வானளாவிய அதிகாரம் உண்டு என்று வாய் பிளந்து கொக்கரித்தவர்களெல்லாம் வரலாற்றின் ஓரத்திலே ஒதுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு விட்டார்கள் என்ற உண்மையினைத் தற்போது பொறுப்பிலே இருப்பவர்கள் நினைத்துப் பார்ப்பது நல்லது. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் 17-8- 2016 அன்று பேரவையிலே அப்படி ஒன்றும் பெரிய பிரச்சினை
எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. ஆளுங்கட்சி உறுப்பினர் தேவையில்லாமல் வீண் வம்பு வளர்க்கும் வகையில், “நமக்கு நாமே” பற்றிப் பேசியிருக்கிறார். மானியக் கோரிக்கை மீது பேசுகின்ற உறுப்பினர் அதைப்பற்றித்தானே பேச வேண்டும். அதை விட்டுவிட்டு, ஸ்டாலின் நடத்திய நமக்கு நாமே பயணம் பற்றி எதற்காகப் பேசினர்? எனவே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவர் ஆளுங்கட்சி உறுப்பினாதான். புதிய உறுப்பினர் தேவையிலலாமல் “நமக்கு நாமே” என்ற வாரத்தையைப் பயன்படுத்திய காரணத்தால், அவை முன்னவரோ, பேரவைத் தலைவரோ, முதலமைச்சரோ தலையிட்டு, ஆளுங்கட்சி உறுப்பினர் தேவையில்லாத வார்த்தையைப் பேசத் தேவை யில்லை, மானியக் கோரிக்கை பற்றி மட்டும் பேசுங்கள் என்று கூறியிருப்பாகளானால், தேவையிலலாத நடைமுறையை அந்த உறுப்பினரும் கைவிட்டிருப்பார், தொடர்ந்து பேசுகிற அ.தி.மு.க. உறுப்பினர்களும் அதைக் கைவிட்டிருப்பார்கள். ஆனால் முதல் அமைச்சரே அப்படித் தேவையிலலாமல் பேசுகின்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் கருத்துக் கூறி, வம்பினை விலை கொடுத்து வாங்குகின்ற வகையில் நடந்துகொள்கிறார். அப்படிப்பட்ட தேவையில்லாத வார்த்தைகளை அவை நடவடிக்கை குறிப்பிலிருந்து எடுக்கவேண்டுமென்று கூறினால், அதை விட்டுவிட்டு, அவசர அவசரமாக எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றியிருக்கிறார்கள். ஒரு வார காலம் சஸ்பென்ட் செய்து உடனடியாகத் தீர்மானம் படிக்கப்படுகிறது என்றால், இவையெல் லாம் முன்கூட்டியே திட்டமிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளா என்று நினைக்கத் தோன்றுகிறது. அதுவும் ஒரு வார காலம் சஸ்பென்ட் எதற்காக என்று நினைக்கும்போது, காவல் துறை மானியத்தின்மீது எதிர்க்கட்சிகள் பேசக்கூடாது, அதைச் சந்திக்க இயலாது என்பதற்காகத்தானா என்றும் எண்ணிடத் தோன்றுகிறது. காவல் துறை மானியத்தின்மீது எதிர்க்கட்சிகள் பேச இடம் தந்துவிடக் கூடாது என்று நினைத்தால், அதைவிட வெட்கக் கேடான ஒன்று வேறெதுவும் இருக்க முடியாது. முதலமைச்சர் ஜெயலலிதா, அவை முன்னவர் பன்னீர்செல்வம், பேரவைத் தலைவர் ஆகிய மூவரின் கூட்டுச்சதி இது என்று தம்பி ஸ்டாலின் குறிப்பிட்டிருப்பது சரி என்றே தோன்றுகிறது. இதையெலலாம் மக்கள்மன்றத்தின் முன் எடுத்துக்கூறுவதற்காகத்தான் வருகின்ற
22ஆம் தேதி யன்று “தமிழகச் சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு” என்ற தலைப்பில் சென்னைக் கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் கண்டனக் கூட்டம் ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்தக் கூட்டத்தில் நானும், தம்பிகள் மு.க. ஸ்டாலினும், துரைமுருகனும் உரையாற்றவிருக்கிறோம். 25ஆம் தேதியன்று மதுரையிலும், 26ஆம் தேதியன்று திருச்சியிலும் ஸ்டாலினும், துரைமுருகனும் பேசவிருக்கிறார்கள். மேலும் விரிவாகப் பேரவை நிகழ்ச்சிகள் குறித்து, கழகச் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆங்காங்கு நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொண்டு விளக்கமளிப்பார்கள். அந்தக் கூட்டங்களைச் சிறப்பாக நடத்தித்தர வேண்டுமென்றும், தமிழகச் சட்டமன்றத்தில் என்னதான் நடைபெபறுகிறது என்பதைப் பொதுமக்களுக்கு விளக்கிட வேண்டுமென்றும் கழக உடன்பிறப்புகளை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்! சட்டமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாக்கச் சலிப்பின்றிப் போராடுவோம்! அன்புள்ள, மு.க. 21-8-2016
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 54 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 54 PDF ↗