தொகுதி 54 · கடிதம் 4040
விவசாயிகளுக்கு ஜெயலலிதாவின் அறிவிப்பு வெறும் கண் துடைப்பு
2016-08-20
உடன்பிறப்பே,
அ.தி.மு.க. எப்போது ஆட்சிக்கு வந்தாலும், விவசாயிகள் தங்கள் தலையில் கை வைத்துக்கொண்டு சங்கட சாகரத்தில் வீழ்வதுதான் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், 2006ஆம் ஆண்டில் ஜூன் 12ந் தேதி அன்றும், 2007ஆம் ஆண்டில் ஐூ லை 18-ஆம் தேதியன்றும், 2008ஆம் ஆண்டு 12.06.08 அன்றும், 2009ஆம் ஆண்டு 28.7.2009 அன்றும், 2010ஆம் ஆண்டு 28.7.201௦ அன்றும் மேட்டூூ அணையிலிருந்து பாசனத்திற்காகத் தண்ண் திறக்கப்பட்டது. குறுவையும், சம்பாவும் குறித்த காலத்தில் காப்பாற்றப்பட்டன.
ஆனால், அ.தி.மு.க. ஆட்சியில் 2001ஆம் ஆண்டில் மட்டுமே, ஜூன் 12 அன்று தண்ணார் திறந்து விடப்பட்டது. 2002 இல் 6.9.2002 அன்றும், 2003 இல் 7.10.2003 அன்றும், 2004இல் 12.8.2004 அன்றும், 2005இல் 4.8.2005 அன்றும் காலதாமதமாகத்தான் தண்ணீர் திறக்கப்பட்டது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியில் 2012இல் செப்டம்பர் 17 அன்றும், 2013இல் ஆகஸ்ட் 2 அன்றும், 2014இல் ஆகஸ்ட் 1௦ அன்றும், 2015இல் ஆகஸ்ட் 9 அன்றும்தான் மேட்டூர் அணை திறக்கப்பட்டு, அதன் காரணமாக அ.தி.மு.க. ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் குறுவை பொயத்துத் தற்போது ஐந்தாவது ஆண்டாகக் குறுவை பொய்த்துப் போய் விட்டது; டெல்டா மாவட்ட விவசாயிகளின் வேதனை பல்கிப் பெருகிவிட்டது. டெல்டா மாவட்டக் குறுவை என்பது அருங்காட்சியகத்தில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய பொருளாகி விட்டதோ என்று திகைக்க வேண்டியிருக்கிறது.
இதே ஜெயலலிதாதான், 7.11.2003 அன்று தமிழக சட்டப்பேரவையில் காவிரிப் பிரச்சினை குறித்துப் பேசும்போது: “காவிரியில் தண்ணீர் கிடைக்கவில்லை என்றால், அது மாநில அரசின் குற்றம் அல்ல; பிரதமரின் குற்றம், மத்திய அரசின் குற்றம் என்று பகிரங்கமாகச் சொல்கிறேன்” என்று பேசினார்.
நேற்று (18-8-2016) காவிரி நடுவர் மன்றம் பற்றியும், காவிரி ஆணையம் பற்றியும் சட்டப் பேரவையில் 110வது விதியின்கீழ் படித்திருக்கிறார் முதலமைச்சர் ஜெயலலிதா. ஆனால் 2002ஆம் ஆண்டில் காவிரி ஆணையத்தை, செயல்படாத ஆணையம் என்றும்; பல் இல்லாத ஆணையம் என்றும் முதலமைச்சர் எனகிற தன் நிலை மறந்து வர்ணித்தவர் இதே ஜெயலலிதாதான்.
2002ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் காவிரி ஆணையம் தன் கடமையைச் செய்யவில்லை என்றும், அது கர்நாடகத்திற்கு ஆதரவாகவே செயல்படுகிறது என்றும், எனவே அதனமீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், இந்தப் பிரச்சினையில் பிரதமரின் செயல்பாடும் திருப்தியாக இல்லை என்றும், இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதிய ஜெயலலிதாதான் இன்றைக்கு ஏதோ காவிரி நதிநீர் ஆணையத்தின்மீது மிகுந்த மரியாதையும் நம்பிக்கையும் உள்ளவரைப் போல அறிக்கை வெளியிட்டிருக்கிறார். “நாளொரு மேடை, பொழுதொரு நடிப்பு” என்று எம்.ஜி.ஆர். பாடும் பாடல்தான் நினைவுக்கு வருகிறது!
காவிரி ஆணையம் பற்றிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சபார்வால், அர்ஜித் பசாயத் ஆகியோர்; “பிரதமருக்கு 2002 நவம்பர் 5ஆம் தேதியிட்டு ஜெயலலிதா எழுதிய கடிதத்தைப் படித்து வேதனைப்பட்டோம். ஒரு மாநில முதல்வராக இருப்பவர் அதற்குரிய கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும். காவிரி ஆணையத்தைப் பற்றி ஜெயலலிதா கூறியுள்ள கருத்துகள் துரதிர்ஷ்டவசமானது. அப்படிப் பேசியிருப்பது முறையறறதுமாகும். காவிரி ஆணையத் தலைவரைப் பற்றியும் தனிப்பட்ட முறையில் குறை சொல்லியிருப்பது சரியல்ல. இன்னும் நான்கு நாட்களுக்குள் பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதி, காவிரி ஆணையத்தினம் து நம்பிக்கை உள்ளது என்று தெரிவிக்க வேண்டும். ஆணையத்தைப் பற்றியும், அதன் தலைவரைப் பற்றியும் ஜெயலலிதா சொன்ன கருத்துக்களைத் திரும்பப் பெற வேண்டும்” என்று கண்டனம்
தெரிவித்தவுடன், “காவிரி ஆணையத்தின்மீது நான் தனிப்பட்ட முறையில் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். ஆணையத் தலைவர் மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். பிரதமர் மற்றும் காவிரி ஆணையம் பற்றி நான் தெரிவித்த கருத்துக்களைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்” என்று பிரதமருக்குக் கடிதம் எழுதியவாதான் ஜெயலலிதா.
காவிரிப் பிரச்சினையில் நடுவர்மன்றம் ஒன்று அமைத்திட வேண்டும் என்று முதல்முதலாக 17.1.1970இல் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியது நான்தான்.
8.7.1971 அன்று நடுவர்மன்றம் அமைத்திட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்முறையாகத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்குக காரணகர்த்தாவாக இருந்ததும் நான்தான்.
1989இல் கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது, இந்தியப் பிரதமராக இருந்த திரு.வி.பி.சிங் அவர்களிடம், நடுவாமன்றம் அமைக்க வலியுறுத்தி, தமிழகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதும் நான்தான்.
உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், மத்திய அரசின் கருத்தை நீதிமன்றம் கேட்டபோது, திரு.வி.பி. சிங் தொலை பேசியிலே 1990ஆம் ஆண்டு என்னைத் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, நடுவர் மன்றம்தான் வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்தியவன்தான் நான. எனது வேண்டுகோளை ஏற்று, மத்திய அரசும் உச்சநீதிமன்றத்திலே கருத்தறிவித்து, அதன்படி காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இவ்வாறு காவிரி நடுவார்மன்றம் அமைய முழுமுதல் காரணமாக இருந்தது நான் என்பதைக் காவிரிப்பிரச்சினை பற்றிய வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது.
நடுவர் மன்றத்தின்மூலம் இடைக்காலத் தீராப்பு வழங்கவேண்டும் என்று 28.7.1990 அன்று கழக ஆட்சியிலேதான் கேட்கப்பட்டது.
இடைக்காலத் தீர்ப்பு தர தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று நடுவர்மன்றம் தெரிவித்தபோது; கழக ஆட்சியில்
10.1.1991 அன்று உச்சந்திமன்றத்திலே வழக்குதொடுத்து, அதன் விளைவாக, அதிகாரம் உண்டு என்ற தீர்ப்பு கிடைத்தது.
ஜெயலலிதா ஆட்சியிலே இருந்தபோது, 9.6.1992 அன்று மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர்; நடுவர்மன்றத்தின் இடைக்கால ஆணையை நடைமுறைப்படுத்துவது பற்றி ஜெயலலிதாவின் ஒப்புதல் வேண்டிக் கடிதம் எழுதினார். டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் உயிராதாரமாக விளங்கும் இந்த முக்கியமான பிரச்சினையில்; மத்திய அரசிடம் இருந்து வந்த கடிதத்திற்கு 9 மாதங்கள் கழித்து பதில் எழுதியவாதான ஜெயலலிதா. அந்த ஜெயலலிதாதான் தற்போது, எதிர்க்கட் சிகளை வெளியே அனுப்பிவிட்டு, வரலாற்றையே புரட்டிப்போட்டுத் திரிபுவாதம் செய்திருக்கிறார்.
1989இல் கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது, இந்தியப் பிரதமராக இருந்த திரு.வி.பி.சிங் அவர்களிடம், நடுவர்மன்றம் அமைக்க வலியுறுத்தி, தமிழகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதும் நான்தான்.
உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், மத்திய அரசின் கருத்தை நீதிமன்றம் கேட்டபோது, திரு.வி.பி. சிங் தொலைபேசியிலே 1990ஆம் ஆண்டு என்னைத் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, நடுவர் மன்றம்தான் வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்தியவன்தான் நான். எனது வேண்டுகோளை ஏற்று, மத்திய அரசும் உச்சநீதிமன்றத்திலே கருத்தறிவித்து, அதன்படி காவிரி நடுவர்மன்றம் அமைக்கப்பட்டது. இவ்வாறு காவிரி நடுவர்மன்றம் அமைய முழுமுதல காரணமாக இருந்தது நான் என்பதை காவிரிப் பிரச்சினை பற்றிய வரலாறு பதிவுசெய்து வைத்திருக்கிறது.
நான்காவது முறையாக நான முதலமைச்சராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகுதான், 1998ஆம் ஆண்டில் 9 மணி நேரம் இடைவிடாமல் அப்போது இந்தியப் பிரதமராக இருந்த திரு.வாஜ்பாய் அவர்கள் தமிழகம் -கர்நாடக அரசுகளுடன் கலந்து பேசி; அதன் விளைவாகக் காவிரி நதிநீர் ஆணையமும், கண காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டன. அதற்குத் தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களின் அனுமதியையும் பெற்றவன் நான். ஆனால், ““நடுவர்மன்றத் தீர்ப்பு வந்தால்கூட கர்நாடகாவில்
அவர்களாகவே அணையைத் திறந்தாலதான் காவிரி நீர் தமிழ் நாட்டிற்கு வரும்!'' என்று 21.3.1991இல் தமிழக விவசாயிகளை வஞ்சித்திடும் வகையில் கூறியவாதான் ஜெயலலிதா.
இந்த ஆண்டு, குறுவை சாகுபடி தொடங்கும் நேரத்தில் தமிழக அரசின் சார்பில் ஒரு திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அப்போதே அந்தத் திட்டம் பற்றி நான் அறிக்கை விடுத்தேன். “குறுவை சாகுபடியை மேற்கொள்ள டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கும் தொகுப்புத் திட்டம்” “விவசாயிகள் வரவேற்பு” என்றெல்லாம் அன்று ஏடுகளில் கொட்டை எழுத்துக்களில் செய்தி. தலைப்பைப் பாத்தவுடன், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கெல்லாம், அவர்கள் கடந்த ஐந்தாண்டுகளாக அனுபவித்துவரும் அவல நிலையைப் போக்கிட, ஜெயலலிதா ஏதோ பல ஆயிரம் கோடி ரூபாய்ச் செலவில் பலப்பலத் திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார் என்றும், நெல்லுக்கான விலையைக் குவிண்டால் ஒன்றுக்கு 2000 ரூபாய்க்கு மேல் உயர்த்தி அறிவித்திருக்கிறார் என்றும், ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதியன்று குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையைத் திறப்பதற்குப் பதிலாக இந்த ஆண்டு ஜின் முதல் வாரத்திலேயே திறக்கப் போகிறார்கள் என்றும் நினைத்து, அந்தச் செய்தியை முழுவதும் படித்த எனக்கு அதிர்ச்சியும், வேதனையும்தான் ஏற்பட்டது. ஜெயலலிதாவின் தொகுப்புத் திட்டத்தை வெளியிட்ட நாளேடுகளே, வேறொரு பக்கத்தில் சிறிதாக இந்த ஆண்டும் மேட்௫ர் அணை குறுவை சாகுபடிக்காக ஜூன் 12இல் திறக்கப்படமாட்டாது என்ற செய்தியையும் வெளியிட்டிருந்தது.
குறுவையிலதான் இந்த நிலைமை என்றால், சம்பாவில் அதை விட மோசமான நிலை உள்ளது. விவசாயச் சங்கங்களின் சார்பில் நேற்றும் (19.8.2016) 30ஆம் தேதி அன்றும் நாடு தழுவிய அளவில் போராட்டங்களை அறிவித்திருக்கிறார்கள். போராட்டம் அறிவித்திருக்கும் சங்கத்தினரைத் தமிழக அரசு அழைத்துப் பேசி ஒரு சுமூகமான முடிவினை அறிவிக்காமல், தன்னிச்சையாக முதலமைச்சர் பேரவையில் 1 10வது விதியின்கீழ் அறிக்கைகளைப் படித்துக் கொண்டிருக்கிறார். விவசாயிகள் சம்பா சாகுபடி செய்யத் தண்ணீரே இல்லை என்று கேட்டுக்கொண்டிருக்கின்ற நிலையில், 64 கோடி ரூபாய் சம்பா நெல் சாகுபடிக்காக மானியம் வழங்கப்
போவதாக முதலமைச்சர் பேரவையில் தெரிவித்திருப்பது, அவர்களை எள்ளி நகையாடுவதைப் போல உள்ளது. தண்ணீர் கிடைத்து சாகுபடி செய்தால்தானே, இந்த மானியத் தொகையைப் பெற முடியும். தொடர்ந்து விவசாயிகளை ஏமாற்றுவதற்காக அறிவிக்கப்பட்ட சலுகைகள்தானே இவை என்று அவர்கள் நினைத்துப்பார்க்க மாட்டார்களா?
தமிழக அரசு விவசாயிகளின் உண்மையான பிரச்சினைகளை உணர்ந்து அதைக் களைய முயற்சிகளை எடுக்க வேண்டுமே தவிர, 50 கோடி ரூபாய் மானியம், 60 கோடி ரூபாய் மானியம் என்று 110வது விதியின்கீழ் அறிக்கைகளைப் படித்து, ஏதோ விவசாயிகளுக்கு நன்மை செய்வதைப் போல நாடகமாடுவதால், அதனை நம்புவதற்கு தமிழக விவசாயிகள் தயாராக இல்லை. எனவே தமிழக அரசு விவசாயிகளை ஏமாற்றும் வேலையை விடுத்து, அவர்களின் துயரத்தைத் துடைப்பதற்கு உண்மையான அக்கறையோடு செயல்பட முன்வர வேண்டும்.
முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று அறிவித்த திட்டத்தைப் பற்றி விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூறியதைத் தமிழ்நாட்டில் உள்ள தமிழ் நாளேடுகள் வெளியிடாமல் பத்திரிகா தாமம் போற்றுகின்றன. ஆனால் “டைம்ஸ் ஆப் இந்தியா” நாளேட்டில் முதலமைச்சரின் அறிவிப்பு பற்றிக் கொட்டை எழுத்தில் விவசாயிகள் கூறியது வெளிவந்துள்ளது. அதன் தலைப்பே, “Nothing can be done without water: Farmers” - (தண்ணீரின்றி எதையும் செய்திட இயலாது) என்பதாகும். அந்தச் செய்தியில், “தண்ணர் கிடைக்காமல், முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ள 64.30 கோடி ரூபாய்க்கான சிறப்புத் திட்டத்தை வைத்துக்கொண்டு சம்பா சாகுபடியில் எதையும் செய்துவிட முடியாது என்று விவசாயிகள் கூறுகிறார்கள். பூமிக்கு அடியில் உள்ள நீரை எடுத்துச் சாகுபடி செய்பவர்களுக்கு, அறிவிக்கப்பட்டுள்ள குறைந்த அளவிலான தொகை போதவே போதாது. கர்நாடகாவிலிருந்து காவிரி நீரை எதிர்பார்த்துள்ள 16 இலட்சம் விவசாயிகளுக்கு இதனால் எந்தப் பயனும் இல்லை என்று விவசாயிகள் கூறுகிறார்கள்” என்று வெளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவருமான கே. பாலகிருஷ்ணன் கூறும்போது காவிரியிலிருந்து தண்ணீரைப் பெற கர்நாடக அரசை தமிழக அரசு வேறு தக்கமுறையில் தொடர்புகொண்டிருக்க வேண்டுமென்று தெரிவித்திருக்கிறார். தற்போது முதலமைச்சர் பேரவையில் செய்துள்ள அறிவிப்பு கண்துடைப்பு வேலை என்றும் அவர் தெரிவித்துள்ளார். காவேரி டெல்டா விவசாயிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.தனபாலன் கூறும்போது பணத்தை விரயம் செய்வதற்குப் பதிலாகச் சிறப்புக் குழு ஒன்றினைத் தமிழக அரசு உடனடியாக அமைக்க வேண்டுமென்று கூறியிருக்கிறார். இதைப் போலவே விவசாயிகளின் பிரதிநிதிகள் எல்லாம் ஜெயலலிதாவின் அறிவிப்பினை வரவேற்கவில்லை. இதற்கிடையில் கர்நாடக முதலமைச்சர், “தமிழகத்தின் கோரிக்கையை ஏற்றுத் தண்ணீ திறக்கும் சூழ்நிலையில் கர்நாடகம் இல்லை” என்று தெரிவித்திருக் கிறார்.
எனவே தமிழக அரசு விவசாயிகளின் உண்மையான பிரச்சினைகளை உணர்ந்து அதைக் களைய முயற்சிகளை எடுக்கவேண்டுமேதவிர, 50 கோடி ரூபாய் மானியம், 60 கோடி ரூபாய் மானியம் என்று 110வது விதியின்கீழ் அறிக்கைகளைப் படித்து, ஏதோ விவசாயிகளுக்கு நன்மை செய்வதைப் போல நாடகமாடுவதால், அதனை நம்புவதற்குத் தமிழக விவசாயிகள் தயாராக இல்லை. எனவே தமிழக அரசு விவசாயிகளை ஏமாற்றும் வேலையை விடுத்து, அவர்களின் துயரத்தைத் துடைப்பதற்கு உண்மையான அக்கறையோடு செயல்பட முன் வர வேண்டும். ஐந்தாவது ஆண்டாகக் குறுவையை இழந்து, முதல் முறையாகச் சம்பாவையும் இழக்கும் இக்கட்டான நிலைமைக்கு ஆளாகியிருக்கும் விவசாயிகள் கேட்பது பாசனத்திற்கான தண்ணர்; ஜெயலலிதாவின் மான்யம் அல்ல!
அன்புள்ள, மு.க. 20-8-2016
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 54 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 54 PDF ↗