உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 54

தொகுதி 54 · கடிதம் 4039

110வது விதியின்கீழ் அறிக்கையும், அதற்கு விளக்கமும்

2016-08-17

உடன்பிறப்பே,

தமிழகச் சட்டப்பேரவையில் நம்முடைய முதல் அமைச்சர் ஜெயலலிதா, பேரவை நிகழ்ச்சிகளில் தனது பங்களிப்பாக எதையாவது பதிவு செய்ய வேண்டுமென்ற அவாவில, 110வேது விதியின்கீழ் அறிக்கைகளைப் படிக்கத் தொடங்கிவிட்டார்; அது பற்றி எதிர்க்கட்சித் தலைவர் தம்பி மு.க. ஸ்டாலினும், துணைத் தலைவர் தம்பி துரைமுருகனும் எழுப்பிய சில சந்தேகங்களுக்கும், முதலமைச்சர் அருமையான (1!) விளக்கங்களை யெலலாம் அவையிலே தந்திருக்கிறார். 24 மணி நேரமும் மக்களைப் பற்றியே சிந்திப்பதால், புதிய புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்களாம்! அவர் கூறிய சில விளக்கங்கள் பற்றிக் கழக உறுப்பினர்கள் எழுப்ப முயன்ற சில சந்தேகங்களுக்கு பேரவைத்தலைவர் அனுமதி அளிக்கவில்லையாம்.

110வது விதியின்கீழ் ஓர் அறிக்கை பேரவையில் படிக்கப்பட்டபின் அதைப் பற்றி எந்த விமர்சனமும் செய்யக் கூடாது. எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது என்று விதிகளிலேயே உள்ளது. செய்யப்பட்ட அறிவிப்புக்கு நன்றி கூறி, பாராட்டுத தெரிவித்து மட்டும் பேசலாம் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். பாராட்டுத் தெரிவிப்பதேகூட ஒரு வகை விமர்சனம்தான் என்பதை ஜெயலலிதாவுக்கு யார் எடுத்தியம்பிடக் கூடும்? விதிகளிலே 110வது விதியின்கீழ் என்ன சொலலப் பட்டிருக்கிறது என்று நானும் எடுத்துப்பார்த்தேன்.

விதி 110 (1) பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளைப் பற்றி ஒர் அமைச்சர் பேரவைத் தலைவரின் இசைவுடன் அறிக்கை ஒன்றை அளிக்கலாம். (2) அவ்வறிக்கையின் மீது அப்போது எவ்வித

விவாதமும் இருத்தல் கூடாது என்றுதான் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகள் புத்தகத்தில் உள்ளது. இந்த விதியைப் படித்தவுடன், நமக்கு ஏற்பட்ட சந்தேகம், 110வது விதியின்கீழ் ஓர் அமைச்சர் அறிக்கை அளிக்கலாம் என்று பொதுவாகத்தான் இருக்கிறதே தவிர, முதல் அமைச்சர்தான் 110வது விதியினகீழ் அனைத்து அறிக்கைகளையும் படிக்க வேண்டுமென்று குறிப்பாக அந்த விதியில் கூறப்படவில்லையே? அவை விதிகளில், ஓர் அமைச்சர் அறிக்கை ஒன்றைத் தரலாம் என்றிருக்கிறதே தவிர, முதலமைச்சர் என்று அதிலே கூறப்படவில்லையே? அமைச்சர் என்ற வரையறைக்குள் முதல் அமைச்சரும் இடம்பெறுகிறார் என்று சொன்னாலும்கூட, அமைச்சர்களின் துறைகள் பற்றிய அறிக்கைகள் அனைத்தையும் முதலமைச்சரேதான் படிக்க வேண்டும்; மொத்தத்தில் விதி 110 என்பது அமைச்சர்கள் அனைவருக்கும் உள்ள பொது உரிமை அல்ல, முதலமைச்சருக்கு மட்டுமே உள்ள சிறப்புரிமை என்று அந்த விதியில் எந்த இடத் திலும் கூறப்படவில்லையே?

ஒவ்வொரு துறை பற்றிய புதிய புதிய அறிவிப்புகளை 11வது விதியின் கீழேயே, அந்தந்தத் துறை அமைச்சாகளைக் கொண்டு படிக்கச் செய்யாமல், முதல் அமைச்சரே அனைத்து அறிக்கைகளையும் படிப்பது, அந்த அமைச்சர்களுக்கு உரிய வாய்ப்பினை முதலமைச்சர் தட்டிப் பறிப்பது ஆகாதா? ஏதோ ஒன்றிரண்டு அறிவிப்புகளைப் படித்தால், அது பெரிதாகத் தோன்றாது. அவை விதிகளின் அத்தனை 110வது விதியின்கீழான அறிக்கைகளையும் முதலமைச்சரே படிக்கவேண்டும் என்றா இருக்கிறது? அமைச்சர் படிக்கலாம் என்றுதானே இருக்கிறது? எல்லா அறிக்கைகளையும் முதலமைச்சரே தன்வயப்படுத்திக் கொண்டால், பின் துறை அமைச்சர்களுக்கு ஆர்வமும், பொறுப்புணாவும் குன்றிவிடாதா? அவரவரது கடமையை அவரவர் ஆற்றுவதுதானே முறை? ஒருவர் கடமையை மற்றொருவர் சுவீகரித்துக்கொண்டால், அது ஆக்கிரமிப்பு ஆகாதா?

1 1வேது விதியின்கீழ்ப் படிக்கப்படும் அறிக்கை மீது அப்போது எவ்வித விவாதமும் இருத்தல் கூடாது என்றுதான் 110வது

விதியில் கூறப்பட்டிருக்கிறதே தவிர, அறிக்கைக்குப் பிறகு அதன் மீது விவாதம் எழுப்புவதற்கு எந்தத் தடையும் இருப்பதாகக் குறிப்பிடும் வார்த்தைகள் எதுவும் விதியில் இல்லையே? 110வது விதியின்கீழ் அறிக்கை படிக்கப்பட்டவுடன், அதிலே கூறப்பட்ட அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துப் பாராட்டிப் பேசலாம் என்றும் விதிகளிலே கூறப்படவில்லையே? பிறகு எந்த விதியின்கீழ் முதலமைச்சர் ஒவ்வொரு முறை 110வது விதியின்கீழ் அறிக்கை படித்த பிறகும், ஆளுங்கட்சியின் தோழமைக் கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவராக எழுந்து ஜெயலலிதாவுக்குப் பாராட்டுரை வைபவம் நடத்துவதற்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள்?

முதலமைச்சர் ஜெயலலிதா, 110வது விதியின்கீழ் அறிவிப்புச் செய்தது பற்றி, பேரவையில் 12-8-2016 அன்று அவா அளித்த விளக்கத்தில், “அமைச்சர்கள் அவரவர்களுடைய மானியக் கோரிக்கையை இங்கே முன்மொழிந்து, அதன் மீது விவாதம் நடைபெற்ற பிறகு, அவர்கள் தங்கள் துறை சம்பந்தமான சில புதிய அறிவிப்புகளைச் செய்த பிறகு, அதே துறையைப் பற்றிய சில அறிவிப்புகளை முதலமைச்சர் ஏன் வெளியிடுகிறா£ா என்று கேட்கிறார். அதற்கு விளக்கம் சொல்ல நான் தயாராக இருக்கிறேன். எல்லா யோசனைகளும், எல்லாத் திட்டங்களும் ஒரே சமயத்தில் ஒரு ஆட்சிக்குத் தோன்றாது. ஏற்கனவே இந்தத் துறையைப் பற்றிச் சம்பந்தப்பட்ட அமைச்சர் தன்னுடைய மானியக் கோரிக்கையை அவை முன்வைத்தார். அதன் மீது விவாதம் நடைபெற்றது. அன்றைக்கு அவர் சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அன்றுவரை எங்களுக்குத் தோன்றியவை அவைதான். அதன்பின் அந்தத் துறையைப் பற்றி யோசிக்க யோசிக்க, அடடா, இதை விட்டுவிட்டோமே, இதையும் செய்யலாமே என்ற யோசனை வந்ததால், அப்படிப்பட்ட புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

பொதுமக்களைப் பற்றியே 24 மணி நேரமும் சிந்திப்பதால், புதிய புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறோம் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். ஒவ்வொரு துறை பற்றிய புதிய புதிய அறிவிப்புகளை 1 10வது விதியின் கீழேயே, அந்தந்தத் துறை அமைச்சர்களைக் கொண்டு படிக்கச் செய்யாமல், முதல் அமைச்சரே அனைத்து அறிக்கைகளையும் படிப்பது, அந்த அமைச்சர்களுக்கு உரிய வாய்ப்பினை முதலமைச்சர் தட்டிப்பறிப்பது ஆகாதா?

துறை மீதான அறிவிப்புகளை அதாவது மதுரையில் துணைக் கோள் நகரம், சோழிங்கநல்லூரில் மாடிக் குடியிருப்புகள் ஆகியவை பற்றிய அறிவிப்புகளை முதலமைச்சர் 4-4-2013 அன்றே செய்து விட்டார். அது போலவே மீன்வளம் பற்றிய மானியம் 17-4-2013 அன்று நடைபெற்றது. ஆனால் 5-4-2013 அன்றே முதலமைச்சர் அறிவிப்புகளைச் செய்துவிட்டார். இதுபோல் ஏராளமான எடுத்துக்காட்டுகள் சொல்லிக்கொண்டே போகலாம். எனவே முதலமைச்சர் பேரவையில் கூறிய மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் முடிந்தபிறகு, 24 மணி நேரமும் பொதுமக்களைப் பற்றியே சிந்திக்கின்ற காரணத்தால் தோன்றிய அறிவிப்புகளை 1 10வது விதியின்கீழ்ப் படிக்கிறோம் என்று பேரவையில் கூறியது சரியான காரணம் ஆகாது. ஜெயலலிதாவின் சமாதானத்தை ஆய்ந்து பார்த்தால், 24 மணி நேரமும் பொதுமக்களைப் பற்றிய சிந்தனை என்பது சிரிப்பைத்தான் வரவழைக்கும்.

ஒரு குறிப்பிட்ட துறை மீது விவாதம் நடைபெற்று முடிந்த பிறகு, அந்தத் துறை சார்பில் வேறு சில அறிவிப்புகளை வெளியிடுகிறோம் என்று முதலமைச்சர் சொல்லியிருக்கிறார். இதிலே எனக்குள்ள அய்யப்பாடு, பேரவையிலே ஒரு துறையைப் பற்றிய மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று, அறிவிப்புகளை அந்தத் துறை அமைச்சர் வெளியிடுவதற்கு முன்பாகவே, அந்தத் துறை பற்றிய அறிவிப்புகளை முதல் அமைச்சரே முந்திக் கொண்டு பேரவையிலே 110வது விதியின்கீழ் கடந்த ஆண்டுகளில் படித்தாரே, அதெலலாம் எப்படி?

முதலமைச்சர் ஜெயலலிதா 110வது விதியின்கீழ் அரசின் முக்கிய அறிவிப்புகளையெல்லாம் அவரே படிப்பதும், அதைத் தொடர்ந்து அவருடைய தோழமைக் கட்சித் தலைவர்கள் அதைப் பாராட்டுவதும் என வழக்கமாக நடைபெறுவதைப் பார்க்கும்போது எதிர்க்கட் சியினருக்கு எந்த வருத்தமும் கிடையாது. ஆனால் அந்த அறிவிப்புகள் எல்லாம் செயலாக்கத்திற்கு வருகிறதா? 11வது விதியின்கீழ் அ.தி.மு.க. ஆட்சியில் படிக்கப்பட்ட அறிக்கைகள் எத்தனை? அதிலே கூறப்பட்ட அனைத்து அறிவிப்புகளும் செயலாக்கம் பெற்றுவிட்டனவா? அறிவிப்புகளிலுள்ள திட்டத

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள்கள் மீது படிக்கப்பட்ட அறிக்கைகளின் எண்ணிக்கை 46 தான்! இந்த 46 அறிக்கைகளையும் முதலமைச்சர் என்ற முறையில் நான் தான் படித்தேனா? 18 அறிக்கைகளைத்தான முதல்வர் என்ற முறையில் நான் படித்திருக்கிறேன். துணை முதலமைச்சரும், உள்ளாட்சித் துறை அமைச்சருமான மு.க. ஸ்டாலின் 8 அறிக்கைகளையும் - நிதியமைச்சர் பேராசிரியர் அவர்கள் 3 அறிக்கைகளையும் - பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் 5 அறிக்கைகளையும் - வேளாண் துறை அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகம் 1 அறிக்கையையும், உயா கலவி அமைச்சராக இருந்த முனைவர் கே. பொன்முடி 1 அறிக்கையையும் - வருவாய்த் துறை அமைச்சராக இருந்த ஐ. பெரியசாமி 1 அறிக்கையையும் - உணவமைச்சராக இருந்த எ.வ. வேலு 2 அறிக்கைகளையும் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு 2 அறிக்கைகளையும் - கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் 2 அறிக்கைகளையும் - செய்தித் துறை அமைச்சராக இருந்த பரிதி இளம்வழுதி 1 அறிக்கையையும் - மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.கே. பன்னாசெல்வம் 1 அறிக்கையையும் - பால் வளத் துறை அமைச்சராக இருந்த மதிவாணன் 1 அறிக்கையையும் பேரவையிலே படித்திருக்கிறோம் என்பதையும், அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு எவ்வாறு போற்றப்பட்டது என்பதையும் அவை நடவடிக்கை குறிப்பினை எடுத்துப்பார்த்து அனைவரும் தெரிந்து கொள்ளலாம்.

26-8-2015 அன்று இந்த அறிவிப்புகள் பற்றி நான் எழுதிய “உடன்பிறப்பு” மடலில் 110வது விதியின்கீழ் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களின் அன்றைய நிலை என்ன என்பதை விவரித்து, “நான்காண்டு காலத்தில் 110வது விதியின்கீழ் படித்த அறிவிப்புகளில் அடங்கியிருக்கும் திட்டப் பணிகளுக்கான மொத்த மதிப்பீட்டுத் தொகை 84 ஆயிரத்து 374 கோடி ரூபாய். அதிலே செலவு செய்யப்பட்டதோ 12 ஆயிரத்து 734 கோடி ரூபாய்தான். அதாவது 12.09 சதவிகிதம்தான். கடலளவு அறிவித்து விட்டு, கையளவு மட்டுமே செய்ததற்கு என்ன பதில்?” என்று கேட்டிருந்தேன்; பதிலே தரவில்லை; உரிய பதிலும் உண்மையும் இருந்தால்தானே, உரக்கச் சொல்வதற்கு?

1 10வது அறிக்கை பற்றி, நான் கூறுவதைவிடப் பொதுவான வார இதழான “ஆனந்த விகடன்” தெரிவித்த கருத்தைக் கூறுகிறேன்.

“பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளைப் பற்றி ஓர் அமைச்சர், சபாநாயகரின் இசைவுடன் அறிக்கை ஒன்றை அளிக்கலாம். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110 இப்படித்தான் விவரிக்கிறது. ஆனால் எந்தப் பொது முக்கியத்துவமும் இல்லாத, புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் மட்டுமே 110ன் கீழ் வெளியிடப்படுகின்றன. அந்த அறிவிப்புகள் ஏதாவது செயல்வடிவம் பெறுகின்றனவா? வீட்டு வசதி வாரியத்தின் மூலம் 2,160 கோடி ரூபாய்ச் செலவில் 311 ஏக்கரில் சென்னை திருமழிசையில் துணைக்கோள் நகரம் அமைக்கப் படும் என்று 2011ஆம் ஆண்டில் அறிவித்தார். இதுவரை எந்தத் துணைக்கோள் நகரத்தையும் காணவில்லை. இந்தத் திட்டத்துக்கு வரைபடம் தயாரிக்கும் பணியே இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில் கேளம்பாக்கம் அருகில் துணை நகரம் அமைக்கப்படும் என கருணாநிதி அறிவித்தார். உடனே ஜெயலலிதா காட்டமாக அறிக்கை விட்டார். “கருணாநிதி வீட்டில் உள்ள பெண்டு பிள்ளைகள், பேரன் பேத்திகள், மறைந்த முதல் மனைவியின் உறவினர்கள், அவர்கள் வழி வந்த உறவினர்கள், இருக்கும் மனைவியின் உறவினர்கள் ஆகியோர் கோபாலபுரத்தைவிட்டும், சி.ஐ.டி. காலனியை விட்டும் வெளியேறி ஜனநெருக்கத்தைக் குறைத்தாலே, துணை நகரத்துக்கு அவசியம் இல்லாமல் போய்விடும்” என்றார். இப்போது அவரே திருமழிசை துணை நகரத் திட்டத்தை அறிவித்து, அதுவும் தூங்கிக் கொண்டிருக்கிறது. மதுரை விமான நிலையத்துக்கு அருகில் 586 ஏக்கரில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங் கிணைந்த துணைக்கோள் நகரம் அமைக்கப்படும் என்பது 110இன் கீழ் இன்னோர் அறிவிப்பு. இதுவரை வரைபடம் தயாரிக்கும் பணிகள் முடியவில்லை. தமிழகத்தின் தென் பகுதி நோக்கிச் செலலும்

பேருந்துகளுக்காக வண்டலூரில் புறநகர் பேருந்து நிலையம் ஏற்படுத்தப்படும் என்றா. நிலம் கையகப்படுத்துவதற்கான வழிகளைக் கூட இப்போதுதான் ஆராயத் தொடங்கியிருக்கிறது சி.எம்.டி.ஏ. கருணாநிதி “மெட்ரோ”ரெயிலுக்கு அடிக்கல் நாட்டிய போது, “மெட்ரோ ரெயிலை விட மோனோ ரெயில் தான் பெஸ்ட்” என்று பக்கம் பக்கமாக அறிக்கைவிட்டு மட்டம் தட்டினார்

ஜெயலலிதா. ஆனால் ஆட்சியில் அமர்ந்ததும் மெட்ரோ ரெயில் திட்டத்துக்குச் சொந்தம் கொண்டாடினார். “சென்னையில் மோனோ ரெயில் திட்டம் அமல்படுத்தப்படும். கிழக்கு தாம்பரம் வழியாக வண்டலூரில் இருந்து வேளச்சேரி வரையிலும், போரூர் வழியாக பூந்தமல்லியில் இருந்து கத்திப்பாரா வரையிலும், வளசரவாக்கம் வழியாக பூந்தமல்லியில் இருந்து வடபழனி வரையிலும் செல்லக்கூடிய மூன்று வழித் தடங்கள் கொண்டதாக மோனோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது” என்று 2011ஆம் ஆண்டில் அறிவித்தார் ஜெயலலிதா. அத்துடன் மதுரை, கோவை, திருச்சியிலும் மோனோ ரெயில் திட்டம் கொண்டுவரப்படும் என ஜிகினாக்களைத் தொங்கவிட்டார். எல்லாமே பஞ்சர்தான். நெடுஞ்சாலைத் துறைக்கு மட்டும் 35 அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் ஆறு பணிகள்தான் முடிக்கப்பட்டிருக்கின்றன. “மாமல்லபுரத்தில் 10 கோடி ரூபாயச செலவில் பல ஏக்கர் பரப்பில் நீர்மூழ்கிக் கப்பலுடன் கூடிய கடல்சார் அருங் காட்சியகம் அமைக்கப்படும்” என 2012ஆம் ஆண்டில் அறிவித்தார். அதுவும் அப்படியே இருக்கிறது” என்று அந்த வார இதழ் எழுதியிருந்தது. சொல்லுக்கும் செயலுக்கும் இவ்வளவு பெரிய இடைவெளியை வைத்துக்கொண்டு, சொல்வது எதற்கு? சொன்னதற்குப் பாராட்டு ஏன்? சொல்வதெல்லாம் வெற்று விளம்பரத்திற்குத்தான்; அனைவரையும் ஏமாற்றுவதற்குத்தான என்றல்லவா பொதுமக்கள் நினைக்கிறார்கள்! அன்புள்ள, மு.க. 17-8-2016

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 54 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 54 PDF ↗