உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 54

தொகுதி 54 · கடிதம் 4038

எந்த ஆட்சியில் மகளிர்க்கு இட ஒதுக்கீடு?

2016-08-12

உடன்பிறப்பே,

10-8-2016 அன்று தமிழகச் சட்டப் பேரவையில், தி.மு. கழகத்தின் சார்பில் உரையாற்றிய கீதாஜீவன், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது தி.மு. கழக அரசுதான் என்று கூறிய போது, அ.தி.மு.க. அமைச்சர்கள் குறுக்கிட்டு உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு திட்டத்தை அ.தி.மு.க. அரசு கொண்டுவந்தது என்று மறுத்திருக்கிறார்கள். அப்போது எதிர்க்கட்சித் தலைவர், தம்பி மு.க. ஸ்டாலின் உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவிகிதம் தந்து தேர்தலை நடத்தியது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான் என்று தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து சில தகவல்களை இந்த நேரத்தில் நினைவுபடுத்தினால் பொருத்தமாக இருக்குமென்று கருதுகிறேன்.

ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி போன்ற உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் 1990ஆம் ஆண்டு இறுதியில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பின்னர், கழக ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டது. அதன் பின்னர் நடைபெற்ற ஐந்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி மனறங்களுக்கான தேர்தலை நடத்த அந்த ஆட்சியினர் முன்வரவே இல்லை.

1996ஆம் ஆண்டு, கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பக்கம் 6இல், “அடுத்து உங்களால் அமைக்கப்படும் தி.மு.கழக அரசு, புதிய சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடரிலேயே உளளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் தேதிகளை அறிவிக்கும்

என்று உறுதிகூறுவதோடு, அது வெறும் அறிவிப்பாக இருந்து விடாமல், நிச்சயமாக நடைமுறைப்படுத்தப்படும் என்ற உறுதியை அளிக்கிறோம்” என்றும் குறிப்பிட்டிருந்தோம்.

தாயமார்களுக்கு முதன்முதலாக உள்ளாட்சிகளில் 33 சதவிகிதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டது 1996ஆம் ஆண்டு தி.மு. கழக ஆட்சியிலேதான். அதன் காரணமாகத் தமிழகம் முழுவதிலும் 44,143 பெண்கள் உள்ளாட்சி நாவாகங்களில் பதவி வகித்திடும் நிலை உருவானது.

1989இல் இந்தியாவிலேயே முதல்முறையாக அரசுப் பணிகளில், வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் தி.மு. கழக ஆட்சியிலதான் நடைமுறைப்படுத்தப்பட்டு, பலலாயிரக்கணக கான பெண்கள் அரசு வேலை வாய்ப்புகள் பெற வழிவகுக்கப்பட்டது.

1990இல் தி.மு. கழக ஆட்சியிலேதான் இந்தியாவிலேயே முதல்முறையாகப் பெண்களுக்குச் சம சொத்துரிமை வழங்கி, தனிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் மகளிர்க்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

அவ்வாறு அறிவித்ததற்கிணங்க 96ஆம் ஆண்டு அக்டோபர் 9 மற்றும் 12 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையர் மூலமாக அறிவிப்பு செய்யப்பட்டது. இதற்கான வேட்பு மனு செப்டம்பர் 3ந்தேதி முதல் 10நிதேதிவரை தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. தேர்தல் ஊராட்சி மன்றம், ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி என்ற மூன்றடுக்கு முறையில் நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 6 மாநகராட்சிகள், 104 நகராட்சிகள், 635 பேரூராட்சிகள், 12,584 ஊராட்சிகள் ஆகியவற்றுக்கு 96ஆம் ஆண்டு அக்டோபரில் 9 மறறும் 12ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாகத் தேர்தல் நடத்துவதென்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்தத் தேர்தலில் முக்கியமான அம்சம் என்னவென்றால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்களில் முதலமுறையாகப் பெண்களுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டுத் தேர்தல் நடத்தப்பட்டதுதான். மொத்தமுள்ள ஆறு மாநகராட்சிகளில் திருச்சி மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது. மொத்தம் 474 மாநகராட்சி வார்டுகளில் பெண்களுக்கு 161 என்றும் தாழ்த்தப்பட்டவாகளுக்கு 35 என்றும் - மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிகள் மொத்தம் 28இல் பெண்களுக்கு 10 என்றும் தாழ்த்தப்பட்டவாகளுக்கு 4 என்றும் - மாவட்டப் பஞ்சாயத்து வார்டுகள் பதவிகள் மொத்தம் 649இல் பெண்களுக்கு 242 என்றும் தாழ்த்தப்பட்டவாகளுக்கு 97 என்றும் - நகராட்சித் தலைவர்கள் பதவிகள் மொத்தம் 10௦6இல் பெண்களுக்கு 35 என்றும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 6 எனறும் இப்படியே ஒவ்வொரு பதவியிலும் பெண்களுக்கு 33 சதவிகிதம் என்ற அளவிற்குத் தொகுதிகள் பிரிக்கப்பட்டன.

உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் கழக வேட்பாளர்களின் முதல் பட்டியல் 8-9-1996 அனறு வெளியிடப்பட்டது. சென்னை மாநகர மேயர் பதவிக்கு மு.க. ஸ்டாலின், மதுரை மாநகர மேயர் பதவிக்கு பெ. குழந்தைவேலு, சேலம் மாநகர மேயர் பதவிக்கு டாக்டர் சூடாமணி ஆகியோ பெயர்கள் முதல் பட்டியலிலேயே வெளியிடப்பட்டன. அ.தி.மு.க. சார்பில் சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு ஜெயக்குமாரும், மதுரை மாநகராட்சிக்குக் காளிமுத்துவும் நிறுத்தப்படலாம் என்று ஏடுகளில் எல்லாம் செய்திகள் வந்தன. அதைத் தொடர்ந்து 9-9- 1996 அன்று சென்னை மாநகர மேயர் பதவிக்குத் தி.மு.க. சார்பில் மு.க. ஸ்டாலினும், அ.தி.மு.க. சார்பில் ஜெயக்குமாரும் மாநகராட்சி ஆணையரிடம் தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். சென்னை மேயர் பதவிக்குத் தமிழக ஜனதா கட்சித் தலைவராக அப்போதிருந்த திருமதி சந்திரலேகாவும், ம.தி.மு.க. சார்பில் எஸ்.எஸ். சந்திரனும் வேட்பு மனுவினைத் தாக்கல் செய்தனர்.

ஆனால் இரண்டொரு நாட்களிலேயே அ.தி.மு.க. திடீரென ஒரு முடிவினை எடுத்தது. சென்னை மேயர் தேர்தலில் தி.மு.கழக

வேட்பாளர் மு.க. ஸ்டாலினை எப்படியாவது தோற்கடிக்க

வேண்டுமென்ற நல்ல (?) எண்ணத்தோடு, மேயர் தேர்தலில் தனது வேட்பாளராக ஜெயக்குமாரை அறிவித்து, வேட்பு மனுவையும் தாக்கல் செய்த பிறகு, அ.தி.மு.க. வேட்பாளர் சென்னை மாநகர மேயர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், ஜனதா கட்சி வேட்பாளர் சந்திரலேகாவை அ.தி.மு.க. ஆதரிக்கும் என்றும் இரண்டு கட்சிகளும் இணைந்து ஸ்டாலினை எதாத்தால சுலபமாக வெற்றி பெற்றுவிடலாம் என்றும் திட்ட மிட்டு அறிவித்தார்கள். தாங்கள் போட்டியிலிருந்து விலகியது மாத்திரமலலாமல், தி.மு. கழகத்தைத் தவிர்த்த ஏனைய கட்சிகளும் போட்டியிலிருந்து விலகிக் கொண்டு ஜனதா வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமென்றும், தி.மு.கழக வேட்பாளரைத் தோற்கடிக்க வேண்டுமென்றும் ஜெயலலிதா அறிக்கை விடுத்தார்.

சந்திரலேகா மீது திராவகம் வீசியவர் ஜெயலலிதாதான் என்று வழக்கு தொடர்ந்த சுப்பிரமணியன் சுவாமி, தனது வேட்பாளருக்கு ஜெயலலிதா ஆதரவு தருகிறார் என்றதும் அதனை ஏற்றுக் கொண்ட விசித்திரத்தை அப்போது தமிழ்நாடு கண்டது.

சென்னை மேயர் தோதவில் பிரச்சாரம் மிகவும் கடுமையாக இருந்தது. எதிர்க்கட்சிகள் எல்லாம் இணைந்து எப்படியாவது ஸ்டாலினைத் தோற்கடிக்க வேண்டுமென்ற வெறியோடு பணியாற்றிய போதிலும், ஸ்டாலினைப் பொறுத்தவரையில் கடுமையாக உழைத்தார். ஒவ்வொரு நாளும் மக்களை நேரில் சென்று சந்தித்து வாக்குக் கேட்பதிலேயே குறியாக இருந்தார்.

சென்னை மேயர் தேர்தல் நடைபெற்று இருபதாண்டு களுக்குப் பின்னர் அந்தத் தேர்தல் நடைபெற்றதால் பிரச்சாரம் மிகவும் பரபரப்பாக இருந்தது. மேலும் முதல்முறையாக மேயரை வாக்காளர்களே நேரடியாக வாக்களித்துத் தேர்ந்தெடுக்கின்ற முறை அப்போதுதான் நடைபெற்றது.

ஸ்டாலின் மேயர் தேர்தலில் போட்டியிடுவது பற்றி பத்திரிகையாளர் சோ அவர்கள் தனது துக்ளக் இதழில் “சென்னை Gown தேர்தலில் உங்கள் ஓட்டு யாருக்கு? ஏன்?” என்ற கேள்விக்கு பதில் அளித்தபோது, “ஸ்டாலினுக்கு. அவருக்கு எதிராக நிற்பவர்களின் அணுகுமுறைகளைப் பார்க்கும்போது இருப்பதற்குள் நல்ல வேட்பாளர் ஸ்டாலின்தான் என்ற முடிவுக்கு

நான் வருகிறேன். அவர், கலைஞரால் திணிக்கப்படுவதாகவும் நான் நினைக்க விலலை. இருபதாண்டுகளாக அரசியலில் இருக்கிறார். கட்சியில் பொறுப்புகளை வகித்திருக்கிறார். இருமுறை சட்டமன்ற உறுப்பினராகத் தோந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இப்போதும்கூட மக்கள் ஆதரவிருந்தால்தான் அவர் மேயராக முடியும். ஆகையால் இதில் திணிப்பு என்ற பேச்சுக்கே இடமிருப்பதாக நான் நினைக்கவில்லை. தன்னுடைய தொகுதியில் அவருக்கு நல்ல பெயரே இருக்கிறது. மேயர் தேர்தலில் என் ஓட்டு அவருக்கே” என்று சோ எழுதியிருந்தார்.

14-10-1996 அன்று உள்ளாட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணி அறிவிக்கப்பட்டன. தி.மு.க., த.மா.கா. கூட்டணியே மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

மேயர் தேர்தலில் சென்னையில் ஒவ்வொரு கட்சியின் வேட்பாளரும் பெற்ற வாக்குகள் --

மு.க. ஸ்டாலின் தி.மு.க.) 8,24,526 சந்திரலேகா (ஜனதா) 3,87,401 எஸ்.எஸ். சந்திரன் (ம.தி.மு.க.) 86,135

மதுரையில் மேயராகத் தி.மு.க. வேட்பாளர் குழந்தைவேலு 1,50,122 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். முன்னாள் அமைச்சர் காளிமுத்து அ.தி.மு.க. சார்பில் அங்கே போட்டியிட்டு 1,06,098 வாக்குகளைப் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார்.

மாநகராட்சி கவுன்சிலர்கள் தேர்தலைப் பொறுத்தவரையில் சென்னையில் மொத்தம் 155 இடங்களில், தி.மு.க., த.மா.கா., இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி 150 இடங்களிலும். அ.தி.மு.க. 2 இடத்திலும், சுயேச்சைகள் 3 இடத்திலும் வெற்றி பெற்றார்கள். ஏனைய மாநகராட்சிகளிலும் இதே போன்ற நிலைமைதான். அதுபோலவே தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற 102 நகராட்சிகளில் தி.மு.க. 48 இடங்களிலும், த.மா.கா. 28 இடங்களிலும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களிலும் கூட்டணி சார்பில் வெற்றிபெற்றன.

திரு நெல்வேலியில் மேயராகத் தி.மு.க. வேட்பாளர் உமா மகேசுவரியும் - சேலத்தில் மேயராகத் தி.மு.க. வேட்பாளர் டாக்டர்

சூடாமணியும், கோவையில் மேயராகத் த.மா.கா. வேட்பாளர் கோபாலகிருஷ்ணனும், திருச்சியில் மேயராகத் த.மா.கா. வேட்பாளர் புனிதவள்ளியும் வெற்றி பெற்றார்கள். தமிழகத்தில் மொத்தம் உள்ள ஆறு மாநகராட்சிகளிலும் தி.மு.க., த.மா.கா. கூட்டணியின் வேட்பாளர்களே மேயர் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றனர்.

உள்ளாட்சித் தோதலகள் குறித்து, “தினமணி” நாளிதழ் தனது 16-10-1996 தேதிய தலையங்கத்தில், “தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் தி.மு.க., த.மா.கா. கூட்டணி மகத்தான வாகை சூடியிருப்பது எதிர்பாராததல்ல. ஐந்து மாதங்களுக்கு முன் நடைபெற்ற பொதுத் தோதவில், இக்கூட்டணி - ஊழல் மலிந்த அ.தி.மு.க. அரசைத் தூக்கி எறிந்ததுடன், தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையைத் தோற்றுவித்தது. இந்த உள்ளாட்சித் தேர்தல்களோ - அரசியலின் அடித்தளமே மாறறத்துக்குள்ளாகி இருப்பதற்கான அடையாளங்களைக் காட்டுகிறது. ஆறு மாதத்திற்கு முன்புவரை பூதாகார ஆளும் கட்சியாக தர்பார் நடத்திவந்த அ.தி.மு.க., பொதுத் தேர்தலில் நொறுங்கி விழுந்ததிலிருந்து எழுந்து நிற்க முடியவில்லை.

வரலாறறு உண்மைகள் இப்படியிருக்க, அ.தி.மு.க.வினர் எதைப் பேசினாலும் ஆமோதித்து அனுமதி அளித்திடும் பேரவைத் தலைவரை வசதியாக வைத்துக் கொண்டு, உலகம் பிறந்ததும் எங்களால்தான், நதிகள் ஓடுவதும் எங்களாலதான், நிலா காய்வதும் எங்களால்தான், நெருப்பு சுடுவதும் எங்களால்தான் என்று என்ன பேசுகிறோம் என்று புரிந்துகொள்ளாமல் எதையெதையோ பேசி வானத்திற்கும் பூமிக்குமாக எகிறிக் குதித்துக் கொண் டிருக்கிறாரகள்! எத்தனையோ நிகழ்வுகளைக் கண்ட சட்டப்பேரவை, இதையும் மெளன சாட்சியாக வேடிக்கை பாரத்துக்கொண்டுதான் இருக்கிறது!

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக - அ.தி.மு.க. ஆட்சிகள்

- பலப்பல சாக்குபோக்குகளைக் கூறியபடியே - உள்ளாட்சித்

தேோர்தலகளைத் தவிர்த்து வந்தன. டெல்லியிலிருந்து எத்தனையோ எச்சரிக்கைகள் வந்தபோதும், ஜெயலலிதா அசைந்து கொடுக்கவில்லை. அப்படியிருக்க, அதிகாரப் பொறுப்பை ஏற்ற ஆறே மாதத்துக்குள் இத்தோதல்களை நடத்தி முடித்ததே - தி.மு.க. அரசின் சாதனை” என்று எழுதியது.

சென்னை மாநகராட்சி தி.மு.க.வின் பொறுப்பிலே இருந்த போதுதான், 1973ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த நானே அதனைக் கலைப்பதாகப் பேரவையிலே அறிவித்தேன். அதே மாநகராட்சிக்கு 23 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் தி.மு.கழகம் வெற்றிபெற்று மேயர் பொறுப்பையேற்றது.

தாய்மார்களுக்கு முதன்முதலாக உள்ளாட்சிகளில் 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டது 1996 ஆம் ஆண்டு தி.மு. கழக ஆட்சியிலேதான். அதன் காரணமாகத் தமிழகம் முழுவதிலும் 44,143 பெண்கள் உள்ளாட்சி நிர்வாகங்களில் பதவி வகித்திடும் நிலை உருவானது.

1989இல் இந்தியாவிலேயே முதல்முறையாக அரசுப் பணிகளில், வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் தி.மு. கழக ஆட்சியில்தான் நடைமுறைப் படுத்தப்பட்டு, பல்லாயிரக்கணக்கான பெண்கள் அரசு வேலை வாய்ப்புகள் பெற வழிவகுக்கப்பட்டது.

1990இல் தி.மு. கழக ஆட்சியிலேதான் இந்தியாவிலேயே முதலமுறையாகப் பெண்களுக்குச் சம சொத்துரிமை வழங்கி, தனிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் மகளிர்க்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

சலுகைகள் வழங்கிடும் நலத்திட்ட உதவிகளில் பெண்களுக்கு முன்னுரிமை தரும் பல திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய தி.மு.கழக ஆட்சியிலேதான், பெண்ணுரிமையைப் பறைசாற்றும் வகையில் இடஒதுக்கீடு நிர்ணயம் செய்து, நிர்வாகத்திலும், உள்ளாட்சி மன்றப் பதவிகளிலும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுப் பெண்ணின் பெருமை போற்றப்பட்டது. வரலாற்று உண்மைகள் இப்படியிருக்க, அ.தி.மு.க.வினர் எதைப் பேசினாலும் ஆமோதித்து அனுமதி அளித்திடும் பேரவைத் தலைவரை வசதியாக வைத்துக்

கொண்டு, உலகம் பிறந்ததும் எங்களால்தான், நதிகள் ஓடுவதும்

எங்களால்தான், நிலா காய்வதும் எங்களால்தான், நெருப்பு

சுடுவதும் எங்களால்தான் என்று என்ன பேசுகிறோம் என்று புரிந்து

கொள்ளாமல் எதையெதையோ பேசி வானத்திற்கும் பூமிக்குமாக

எகிறிக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்! எத்தனையோ

நிகழ்வுகளைக் கண்ட சட்டப்பேரவை, இதையும் மெளன

சாட்சியாக வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது!

அன்புள்ள,

மு.க.

12-8-2016

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 54 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 54 PDF ↗