உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 54

தொகுதி 54 · கடிதம் 4037

என் முதல் பிள்ளை முரசொலிக்கு இது பவள விழா ஆண்டு

2016-08-10

உடன்பிறப்பே,

10-8-1942 - ஆகஸ்ட் 10 எனபதை நாட்காட்டியில் கண்டதும், என் நெஞ்சில் உணர்ச்சியும், எழுச்சியும் கலந்த ஒளி வெள்ளம் கரைபுரண்டோடுகிறது; காரணம் அந்த நாள்தான், முரசொலி பிறந்த நாள் - எனது பிறந்த நாளைக் காட்டிலும் எனக்கு இனிய நாள் - இந்த ஆகஸ்ட் திங்கள் 10ஆம் தேதி முரசொலிக்கு 75வது பிறந்த நாள் - பவள விழா ஆண்டுத் தொடக்க நாள் - எந்த முரசொலி? துண்டுத்தாளாகத் தொடங்கி, வார இதழாக வளர்ந்து, நாளேடாகச் செழித்து தொடர்ந்து பீடு நடை போட்டு வரும் முரசொலி! கையெழுத்துப் பிரதி வடிவத்தில் மாத இதழாக வெளிவந்து கொண்டிருந்த முரசொலி

14-1-1948இல் வார இதழாகவும், 17-9-1960இல் நாளேடாகவும் அச்சில் வெளிவரத் தொடங்கியது. முரசொலிக்கு இன்று - ஆகஸ்ட் 10ஆம் தேதி 75வது வயது பிறக்கிறது. இந்த ஆண்டு முழுவதும் “முரசொலி”க்கு பவள விழா ஆண்டாகக் கருதப் படும். 10-8-1992 அன்று சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில், முரசொலி பொன்விழா; தம்பி முரசொலி மாறன் அவர்களின் ஏற்பாடுகளின்படி பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் தலைமையில், முரசொலி பொன்விழா மலரினை நான் வெளியிட்டு உரையாற்றியதைப் போலவே, 10-8-2017 அனறு முரசொலி பவள விழா நடைபெறும்.

“முரசொலி” பற்றி நான் எத்தனையோ கடிதங்கள்

எழுதியிருக்கிறேன்; இதழ்களைத் தொடங்கும் பலா, அந்த இதழ்களின் வெள்ளிவிழா, பொன்விழா போன்றவைகளில்

பங்கேற்பது உண்டு. ஆனால் “முரசொலியின் பவள விழா ஆண்டிலே, அந்த இதழைத் தொடங்கிய நானும் கலந்துகொண்டு பங்கேற்பதுதான் எத்தனை பெருமைக்கும் மகிழ்ச்சிக்கும் தனிச் சிறப்புக்கும் உரியது?

1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது முரசொலி ஆற்றிய பணி, 1967, பொதுத் தேர்தலில் ஆட்சியை மாற்றி, தி.மு. கழகம் வெற்றி வாகைசூடக காரணமாக அமைந்தது. அதற்குப் பிறகு தி.மு. கழகம் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், கழகத்தின் அரசியல் சாதனைகளை மக்களுக்குக் கொண்டு செல்லும் அரியதொரு வாகனமாக “முரசொலி” பயனபட்டது என்று சொன்னால் அது தவறல்ல.

1942ஆம் ஆண்டு அகல் விளக்காக ஏற்றிவைக்கப்பட்டு, இன்று ஆகாயத்துக் கதிர் விளக்காக ஒளிவீசிடும் “முரசொலி”யின் நிறுவனர் என்ற நிலையில் இந்த நாளில் என்றும் நீங்காச் சில நினைவுகள்! நான் என்னுடைய வாழ்க்கையில் சந்திக்க நேர்ந்ததைப் போலவே, நான் தொடங்கியதாலோ என்னவோ; முரசொலியும் பல சோதனை, வேதனைகளைக் கடந்து வந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அது சந்தித்த வழக்குகள் எத்தனையோ?

நெருக்கடி காலத்தில், முரசொலி சந்தித்த பிரச்சினை கள் ஏராளம். முரசொலியில் நான் எழுதுவதற்குத் தணிக்கை முறையைத் திணித்தார்கள். அது கண்டு மகிழ்ந்த சில எரிச்சல் ஏடுகள், “கருணாநிதியின் ஆட்டம் நீண்ட நாள் நீடிக்காது; முரசொலி, விரைவிலேயே அடங்கும்; அல்லது அடக்கப்படும்” என்றெல்லாம் எழுதின. “முரசொலி, நான் பெற்ற குழந்தை! அது என் கண்ணெதிரே வீர மரணம் அடையுமேயானால் நான் புறநானூறறுத் தாய் போல மகிழ்ச்சி அடைவேனே அல்லாமல் ஆற்றாது அழுது புலம்பிட மாட்டேன். மாற்றார் ஏடுகள் எழுதியுள்ளதுபோல முரசொலி அடக்கப்படும் நாள் எனக்குத் திருநாள்; ஆம் - தியாகத் திருநாள்!” என்று முரசொலியிலேயே எழுதியிருந்தேன்.

தணிக்கையின் கெடுபிடியை எதிர்த்து நீதிமன்றத்திலே முரசொலியின் சார்பிலேயே வழக்குத் தொடரப்பட்டு, தணிக்கைக்கு ஓர் இடைக்காலத் தடை பெறப்பட்டது. அந்த இடைக்காலத் தடை இருந்த ஒரு மாத காலத்தில் முரசொலியில் சுதந்திரமாக என்னுடைய எழுதுகோல் சுழன்றது. பிறகு ஆட்சியாளர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்ட காரணத்தால் அந்தச் சுதந்திரம் மீண்டும் பறிக்கப்பட்டது.

1976ஆம் ஆண்டு தி.மு.கழக ஆட்சி கலைக்கப்பட்ட இரண்டொரு நாட்களில் பிப்ரவரி 3ஆம் நாள் - அதுதான் அண்ணா நினைவு நாள் - அண்ணா நினைவிடம் சென்று மலர் வளையம் வைக்க வர இயலாதோர் பட்டியல் என்று முரசொலியில் ஒரு பட்டி யலை வெளியிட்டு, அந்தத் திரை மறைவில், மிசாவில் கைதானோர் யார் யார் என்பதை நாட்டுக்கு அப்போது அறிவித்தேன்.

நெருக்கடி நிலையை எதிர்த்துத் தி.மு.கழகம் நிறை வேற்றிய தீர்மானங்களை முரசொலி வெளியிட்டபோது, “சாரவாதிகாரியாகிறார் இந்திரா காந்தி” எணும் ஒரு கேலிச் சித்திரம் வெளியிட்டு, அந்தக் கார்ட்டூனை “நியூஸ் வீக்” என்ற பத்திரிகை வெளியிட்டதால், முரசொலி ஏட்டின் பெயர் உலகம் முழுவதும் பரவியது. இதன் காரணமாக அப்போது முரசொலி ஆசிரியராக இருந்த தம்பி முரசொலி மாறன் சிறையில் பெரும் பாதிப்புக் கெல்லாம் ஆளாயினார்.

சென்சார் நெருக்கடிகளை எண்ணி, முரசொலியில் அரசியல் கலப்பற்ற இலக்கியக் கடிதங்கள் எழுதினேன். அந்த இலக்கியக் கடிதங்களின் வாயிலாக நான் காட்டிய குறிப்புக்களை உள்ளடக்கத்தைக் கழக உடன்பிறப்புக்கள் வெளியே இருந்த வர்களும், சிறையில் இருந்தவர்களும் புரிந்துகொண்டார்கள். “வெண்டைக்காய் வழவழப்பாய் இருக்கும்” - “விளக்கெண்ணெய் சூட்டைத் தணிக்கும்” - என்பன போன்ற தலைப்பில் எனது கடிதங்கள் வெளிவந்தன. இலக்கியக் கடிதங்கள் மூலம் அரசியலை நுழைக்கிறேன் என்று சென்சார் அதிகாரிகளுக்குக் கழகத்தின் எதிரிகள் தெரிவிக்கவே, “இனி கருணாநிதி என்ற பெயரால் கட். டுரைகளோ - கலைஞர் கடிதங்களோ முரசொலி யில் வெளிவரக் கூடாது” என்று தணிக்கைத்துறை தடை செய்தது.

அதன் பிறகுதான் “கரிகாலன் பதில்கள்” என்ற ஒரு புதிய பகுதி, முரசொலியில் தொடங்கப்பட்டது. அதிலும்கூட இருபது கேள்விகளுக்குப் பதில் எழுதியிருந்தால் ஐந்தாறு கேள்விகள்தான் தணிக்கை அதிகாரிகளால் அனுமதிக்கப்படும்.

தணிக்கை அதிகாரியால் அப்போது வெட்டப்பட்ட ஒரு கேள்வி - பதிலைப் பற்றிய விவரம் இதோ:-

கேள்வி:- இன்னமும் மக்களிடையே ஒரு சாரார் பேய், பூதம், பிசாசுகள் இருப்பதாக நம்புகிறார்களே, அதைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?

பதில்:- பேய், பூதம், பிசாசு என்று கூறுவது கற்பனை! ஏற்றுக் கொள்வது மூட நம்பிக்கை! பேய், பிசாசுகள் இல்லை என்பது பற்றிப் பகுத்தறிவுச் செம்மல் மா. சிங்காரவேலர் எழுதியுள் ள நூலை வாங்கிப் படிக்கவும்.

இந்தக் கேள்வி பதிலை வெளியிட அனுமதி மறுக்கப்பட்டது. தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஏன் அனுமதி மறுத்தீர்கள் என்று கேட்டேன். “நீங்கள் பேய், பிசாசு, பூதம் என்று எழுதும்போது அது மறைமுகமாக இந்திரா காந்தியைக் குறிக்கின்றது என்று நாங்கள் கருதுகிறோம்” என்று கூறினார்கள்.

3-6-1976 அன்று எனது பிறந்த நாளையொட்டி, “என் அன்னையைவிட அதிக அன்பை அண்ணா என் மீது பொழிந்தார்” என்று நான் “முரசொலி”யில் எழுதிய வாசகத்தை சிகப்புமையினால் கோடிட்டு அடித்துவிட்டார்கள் சென்சார் அதிகாரிகள். அதிகாரியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு காரணம் கேட்டேன். அவர் காரணம் கூற மறுத்துவிட்டார். அதனை எதிர்த்து அண்ணாசாலையில் போராட்டம் நடத்தி, கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்் டேன்.

ஒரு நாள் “முரசொலி” அலுவலகத்தில் அமர்ந்து காலை பத்து மணி அளவில் எழுதிக் கொண்டிருக்கிறேன். வருமான வரித் துறையினர் கூட்டமாக உள்ளே நுழைந்தனர். “சார், இந்த ஆபீசை சோதனையிடப் போகிறோம்” என்றனர். “நான் எழுதிக் கொண்டிருப்பதால், உங்களுக்கு ஒன்றும் தொந்தரவு இருக்காதே?” என்று அவர்களைப் பார்த்துக் கேட்டுவிட்டு, நான்

“முரசொவி”க்கு எழுதுவதில் கவனம் செலுத்தினேன். எனக்கு எதிரிலேயே தொலைபேசித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. என்னைச் சுற்றி நாற்காலிகளில் சிலர் உட்கார்ந்து கொண்டனர். சிலர் அறையில் இருந்த பொருள்களை உருட்டினர். சிலர், என் மேசையைத் திறந்து அதில் இருந்த தாள்களைப் புரட்டினர். மதியம் ஒரு மணி அளவில் எனது எழுத்து வேலைகளை முடித்துவிட்டு சோதனையிட்டுக் கொண்டிருந்த அதிகாரிகளிடம் சொல்லிவிட்டு நான் புறப்பட்டேன். அன்றிரவு இரண்டு மணி வரையில் முரசொலி அலுவலகம் சோதனையிடப்பட்டு, சின்னா பின்னமாக்கப் பட்டது.

இன்னும் சொல்லப்போனால், 1960ஆம் ஆண்டுகளிலேயே தி.மு. கழகம் கடுமையான தாக்குதல்களுக்கு ஆளாகி வந்தது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தமிழரசு கழகம், நாம் தமிழர் இயக்கம் என அரசியல் கட்சிகளும், தினத்தந்தி, நவமணி, தினச்செய்தி, சுதேசமித்திரன், தினமணி, இந்து, மெயில் போன்ற புகழ் மிக்க ஏடுகளும் தி.மு. கழகத்தை, அதன் கொள்கைகளை, அதன் தலைவர்களை மிகக் கடுமையாகத் தாக்கிவந்தன. அப்போது இத்தனை கட்சிகளுக்கும், நாளேடுகளுக்கும் பதில் அளிக்கும் நாளேடாக “முரசொலி” விளங்கியது.

1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது முரசொலி ஆற்றிய பணி, 1967, பொதுத் தேர்தலில் ஆட்சியை மாற்றி, தி.மு. கழகம் வெற்றி வாகை சூடக் காரணமாக அமைந்தது. அதற்குப் பிறகு தி.மு.கழகம் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், கழகத்தின் அரசியல் சாதனைகளை மக்களுக்குக் கொண்டுசெல்லும் அரியதொரு வாகனமாக “முரசொலி” பயன்பட்டது என்று சொன்னால் அது தவறல்ல.

இந்திரா காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான இளந் தலைவர் ராஜீவ்காந்தி அவர்கள், 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதியன்று இரவு திருப்பெரும்புதூர் பொதுக் கூடடத்தில் கலந்துகொள்ள வந்தபோது, மனித குண்டு ஒனறு அவரை நெருங்கி வெடித்தபோது, அந்த இடத்திலேயே அவர் பலியானார். 1948இல் அண்ணல் உத்தமர் காந்தியும், 1984இல் அன்னை இந்திராகாந்தியும் படுகொலை செய்யப்பட்டபோது, இந்தியா அனுபவித்த வேதனையை மீண்டும் அனுபவித்தது.

அந்தக் கொடிய சம்பவத்தில் ராஜீவ்காந்தியைத் தவிர 9 காவல் துறை அதிகாரிகளும், பொதுமக்கள் ஏழு பேரும், மனித குண்டாக வந்த தாணுவும் சேர்ந்து 17 பேர் பலி ஆனார்கள். நான் விடுத்த இரங்கல் செய்தியில், “ஒரு நீண்ட எதிர்காலத்திற்குரிய வரும், இந்திய அரசியலில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றிருந்தவருமான ராஜீவ்காந்திக்கு ஏற்பட்ட இந்தக் கொடுமையான முடிவு யாராலும் தாங்கிக்கொள்ள முடியாததாகும். ஒரு ஜனநாயக நாட்டில் இத்தகைய வன்முறை நடவடிக்கைகள் அந்த நாட்டிற்கே இழிவு சேர்ப்பதாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும் விறல் இயக்கத்தின் நண்பர்களுக்கும்

தலை என்றைக்கும் யாரிடமும் தங்கியது நிமிர்ந்து நின்று நான் முரசு கொட்டியதற்கு மட்டுமல்லாமல்; நோத்தியான முறையில் இன்று முரசொலி நடை போடுவதற்குப் பெரிதும் பாடுபட்ட மறைந்த தம்பி முரசொலி மாறன், சட்டப்பேரவையில் கூண்டிலே

ஞாபகப்படுத்தியிருக்கிறேன்.

இடி 'விழுந்தாற்போல அதாச்சியூட்டும் இச்செய்தி உடனடியாக

சென்னை வந்தார்கள். அந்தத் தேர்தலில் ராஜீவ் காந்தி, தி.மு. கழக அணியின் எதிர் அணியில் போட்டியிட்ட காரணத்தினால், ராஜீவ் காந்தியின் மறைவினால் வேதனைக்காளான அந்தக் கட்சித் தொண்டர்களைத் தூண்டிவிட்டு, அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு கழகத்தினரின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் புகுந்து தாக்குதல் நடத்தினர். பல இடங்களில் தீ வைத்தனர். கழகத்தினருக்குச் சொந்தமான கார்கள், இரு சக்கர வண்டிகள் எல்லாம் கொளுத்தப்பட்டன. அப்படித் தாக்குதலகளுக்கு ஆளான இடங்களில் ஒன்றாக “முரசொலி” அலுவலகம் ஆயிற்று. முரசொலி அலுவலகத்தில் பெரும்பாலான பகுதிகள் கொளுத்தப்பட்டன. நீண்ட காலத்து முரசொலி கோப்புகள் எல்லாம் தீயில் கருகிச் சாம்பலாயின. அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்கள் கொளுத்தப்பட்டன. அப்போது முரசொலி அலுவலகத்தைக் கவனித்துக் கொண்டிருந்த தம்பி கலாநிதி மாறன், செய்தியைக் கேள்விப்பட்டு, அவசரத்திற்கு என்னுடைய உதவியாளரின் ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு முரசொலி அலுவலகத்திற்குச் சென்றபோது, அவரால் உள்ளேயே நுழைய முடியவில்லை. அவர் சென்ற ஸ்கூட்டர் அவர் கண் முன்னாலேயே கொளுத்தப்பட்டது. முரசொலி இதழைத் தொடர்ந்து அச்சிட்டு வழங்க முடியாத அளவுக்கு அங்குள்ள இயந்திரங்கள் நாசமாக்கப்பட்டன. இப்படி “முரசொலி” நெருப்பாற்றில் நீந்திய நிகழ்வுகள் எத்தனையோ! பல முறை புடம் போட்டால் பத்தரை மாற்றுப் பொன் என்பதற்கொப்ப ஒவ்வொரு முறையும் புதுப் பொலிவுடன் வெளிவந்தது “முரசொலி”.

“முரசொலி”யின் 75 ஆண்டு கால வளர்ச்சியில், இடையிடையே சில தொய்வுகள் உண்டு. ஆனால் என் தலை என்றைக்கும் யாரிடமும் தொங்கிய தில்லை! நிமிர்ந்து நின்று நான் முரசு கொட்டியதற்கு மட்டுமல்லாமல்; நேர்த்தியான முறையில் இன்று முரசொலி நடைபோடுவதற்குப் பெரிதும் பாடுபட்ட மறைந்த தம்பி முரசொலிமாறன், சட்டப்பேரவையில் கூண்டிலே நிறுத்தப்படுவதுவரை சோதனையைச் சந்தித்த இன்றைய முரசொலி ஆ சிரியா தம்பி முரசொலி செல்வம், எனக்கு ஈடுகொடுத்து அலுவலகத்திலே பணியாற்றியவர்கள், பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள், இன்றைக்கும் “முரசொலி”

சந்தாவை ஊருக்கு ஊர் பெருக்குவதற்காகப் பாடுபடும் தம்பி மு.க.ஸ்டாலின், “முரசொலி”யைப் போர் வாளாகவும், கேடயமாகவும் ஏந்திக்கொண்டு கழகம் நடத்தும் என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்புகள் ஆகியோரதான் காரணம். “முரசொலி” சந்தித்த ஒரு சில சோதனைகளை மட்டும் இன்றைய கடிதத்தில் ஞாபகப்படுத்தியிருக்கிறேன். முரசொலி இதழ் இந்த அளவுக்குத் தி.மு. கழகத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டுள்ளது. எத்தனையோ சோதனைகளை யெல்லாம் கடந்து சுடர் முகம் தூக்கி வந்திருக்கிறது. முரசொலி, கல்லிலும் முள்ளிலும் கடும் பயணம் செய்தது! முரசொலி, காட்டாறுகள் பலவற்றைக் கடந்து வந்தது! முரசொலி, கடும் விலங்குக் கூட்டத்தை வென்று வந்தது! முரசொலி, தமிழகத்தின் அரசியல் களத்தில் அன்றும், இன்றும், என்றும் ஒலித்து வருவது! இந்த முரசொலியின் 75வது பிறந்த நாளில் எனது அன்பு உடன்பிறப்புகளாம், அதன் வாசகர்கள் அனைவருக்கும், முரசொலியின் நிறுவனர் என்ற முறையில் உளம் நிறைந்த வாழ்த்துகள்! அன்புள்ள, மு.க. 10-8-2016

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 54 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 54 PDF ↗