உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 54

தொகுதி 54 · கடிதம் 4036

எழுத்துலகில் என்றும் வாழ்வார் என்னரும் நண்பர் சாவி

2016-08-09

உடன்பிறப்பே,

எழுத்தாளர் சாவி அவர்களுக்கு நூற்றாண்டு விழாவாம்! செய்தி வந்துள்ளது. “தி இந்து” தமிழ் நாளிதழில் நண்பா மாலன் அவர்கள் - ஆகஸ்ட் 10 - சாவி 100வேது பிறந்த நாள் - என்றும் இளமையுடன் இருந்தவர்” என்ற தலைப்பில் சாவி அவர்களைப் பற்றி எழுதியிருந்தார். ஆகஸ்ட் 10 என்பது சாவி அவர்கள் பிறந்த நாள் மட்டுமல்ல; நம்முடைய கழக நாளிதழான “முரசொலி”யை நான் 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 அன்றுதான் தொடங்கினேன். சாவி அவர்களின் 100வது பிறந்த நாள் செய்தியைப் படித்தவுடன், அவருடைய 85வது பிறந்த நாள் விழாவில் நான் கலந்து கொண்ட நிகழ்ச்சிதான் என் மனக்கண் முன்னால் வந்தது.

மாநில அரசின் நிதி வருவாயைப் பெருக்கிட பலவேறு துறைகளில் தி.மு.க. அரசு நடவடிக்கைகளை எடுத்தது. அதே நேரத்தில், கடந்த கால அரசில் உருவாக்கப்பட்ட அரசியல் ரீ தியான வாரியங்கள், கழகங்கள் என இருந்த 7£ பதவிகளில் 41 பதவிகள் நிர்வாகச் சீர்திருத்தம் கருதியும், சிக்கனம் கருதியும் ரத்து செய்யப்பட்டன. அமைச்சர்கள், அதிகாரிகள் மிகுந்த சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென்பதையும், அரசு நிகழ்ச்சிகள் ஆடம்பரமாக நடைபெறக்கூடாது என்பதையும் வலியுறுத்தியதில் மிகக் கண்டிப்பாக இருந்தேன் எனினும், கலை, இலக்கியத் துறை தொடர்புடைய இயல் இசை நாடக மன்றத்துக்குத் தலைவராக பழம்பெரும் எழுத்தாளர் - பல எழுத்தாளர்களை உருவாக்கிய எழுத்துலகச் சிற்பி “சாவி” என்ற சா. விசுவநாதன் அவர்களை நிய மிக்க விரும்பினேன். எனது வலியுறுத்தலின் பேரில் அவர் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

“நான் “குறளோவியம்” என்ற நூலினை எழுதி, அதன் முதற்பதிப்பு 17-2-1985 அன்று திருமகள் நிலையத்தாரால சென்னையில் வெளியிடப்பட்டபோது, ஆசிரியர் சாவி அவர்கள் அந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், “கலைஞர் எழுதியிருக்கின்ற ஒவ்வொரு ஓவியமும் - நான் உண்மையாகச் சொல்கிறேன் - ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு அப்புறம் - ராஜாஜிக்கு அப்புறம் - குட்டிக் கதைகள் சொல்வதில் கலைஞருக்கு இணை கலைஞர்தான். மிகவும் பொருத்தமான கதைகள். இப்பொழுது நடந்த கதையை எப்பொழுதோ எழுதப்பட்ட குறளுக்குப் பொருத்தமாகச் சொல்லியிருக்கிறார். நான் தினமணிக் கதிரில் இருக்கும்போது, கலைஞரா குறளோவியம் எழுதிக்கொடுப்பார. வாராவாரம் அவருடைய குறளோவியம் எப்போது வரும் என்று நானும் என்னுடைய உதவி ஆசிரியர்களும் குறளோவியத்திற்காகக் காத்துக்கொண்டிருப்போம். பத்திரிகை அலுவலகத்தில் இந்தக் கதை வந்துவிட்டதே என்று எண்ணுவது போக, எப்பொழுது வரப்போகிறது என்று காத்திருந்து அது வந்தவுடன் கையெழுத்துப் பிரதியிலேயே அதைப் படித்து விடுவோம்.... என்றெலலாம் குறிப்பிட்டதை, நான் என்னுடைய பெருமைக்காக அல்ல, எத்தகைய பெருமகன் அவர் என்பதை எடுத்துக்காட்டவே இங்கே அதனை எடுத்துக் காட்டியிருக்கிறேன்.”

அதற்கு முன்பே அவரது நெருங்கிய நட்பும் - நகைச்சுவை உணர்வுடனும் கருத்தாழத்துடனும் எழுதும் திறனும் - அத்துடன் என்னிடம் அவா நெஞ்சாரக் கொண்டிருந்த இனிய உறவும் - அவர் வாழ்வாங்கு வாழ்ந்து அந்த முழுமையான வாழ்வு, நானும் அவரும் அமர்ந்திருந்த அவரது 85வது பிறந்த நாள் விழா மேடையும் என் நினைவுக்கு வந்தது. அந்த விழாவில் அவரே என் கரங்களில் நினைவுக் கேடயத்தை வழங்கினார். எனக்குப் பெரிய மல்லிகை மாலை ஒன்றை அணிவித்துக் கட்டித்தழுவிக் கொண்டார். எனக்கு அணிவிப்பதற்காக அவரே கடைக்குச் சென்று தனியாகக் கட்டச் சொல்லி வாங்கி வந்த மாலை அது என்பதை அவரே மேடையில் தெரிவித்தார். பின்னர் அவருக்கு வாழ்த்து

இதம், நினைவுக் கேடயம், பொன்னாடை அனைத்தும் மக்களின் பெருத்த கையொலிக்கிடையே சென்னை நாரதகான சபாவில் வழங்கப்பட்டன. அந்த இனிய காட்சியை அவரது துணைவியாரும், குடும்பத்தாரும், உற்றார் உறவினர்களும் அரங்கத்தில் அமர்ந்து ஆனந்தமாக ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

“சாவி - 85” என்ற தலைப்பில் எழுத்தாளர் ராணி மைந்தன் அவர்கள் எழுதிய நூல் ஒன்றினையும் நான் அந்த விழாவில் வெளியிட வேண்டுமென்று சாவி அவர்கள் வலியுறுத்தி, அந்த விழா தான் 20-1-2001 அன்று நடைபெற்றது.

“நன்றி கூறி நான் பேசிவிடுகிறேன். நீங்கள் எனக்கு முன் பேசிவிட்டால் பிறகு கூட்டம் கலைந்துவிடும்” என்று அவரே கூறிக்கொண்டு ஒலிபெருக்கி முன் சென்றார். எழுத்தாளர் சிவசங்கரி அவரைக் கைத்தாங்கலாக அழைத்துச்சென்றார்.

எங்களுடன் மேடையிலிருந்த தம்பி கவிப்பேரரசு வைரமுத்துவும், ஆர்க்காடு வீராசாமியும், ஆர்.எம். வீரப்பனும், மேயராக அப்போது இருந்த தம்பி மு.க. ஸ்டாலினும், பொள்ளாச்சி மகாலிங்கம், ஏவி.எம். சரவணன், முனைவர் வா.செ. குழந்தைசாமி, ராணி மைந்தன் ஆகியோரும் சாவியிடம் சுருக்கமாகப் பேசுமாறு கேட்டுக்கொண்டனா.

“நான் தினமணிக் கதிர் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தேன். அப்போது கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டுவிட்ட நேரம். நான் கலைஞருக்கு ஆதரவாக இருந்துவந்தேன். அதனால் அந்தப் பத்திரிகையின் உரிமையாளர்களுக்கும் எனக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. அந்த நேரம் பார்த்து எனக்கு ஓய்வு பெறும் வயதாகிவிட்டது என்று சொல்லி வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். இதனைக் கேள்விப் பட்ட கலைஞர் என்ன செய்தார் தெரியுமா?

எனக்காக “குங்குமம்” என்ற பெயரில் ஒரு தேசத்தை உருவாக்கி அதற்கு என்னை ராஜாவாக ஆக்கியவர் கலைஞர்.'' இவ்வாறு ஒலி பெருக்கியில் சாவி அவர்களின் குரல் ஒலித்துக் கொண்டிருக்கும்போதே திடீரென நின்றது.

அந்த விழாவில் கலந்துகொண்ட சாவி அவர்கள் பேசும்போது, மிகுந்த உணர்ச்சிவயப்பட்டதால், தன்னால் தொடர்ந்து பேச இயலவில்லை என்றும், நெஞ்சு வலிக்கிறது என்றும் கூறிக் கொண்டே மயங்கி விழும்போது நானும், என் அருகே இருந்த

என பாதுகாப்புப் படையினரும் ஓடிச்சென்று அவரைப் பிடித்துக்கொண்டோம். விழாவிற்காக வருகை தந்திருந்த தம்பி ஸ்டாலினையும், ஆற்காடு வீராசாமியையும் அழைத்து, உடனே சாவி அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பணித்தேன்.

அவரது அரிய நகைச்சுவைப் படைப்பான “வாஷிங்டனில் திருமணம்” என்ற நாடகம் எந்த நாரதகான சபாவின் சார்பில் பலமுறை நடைபெற்று ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதோ அதே நாரதகான சபா மேடையில் இப்படியொரு நிலைக்கு அவர் ஆளானார் என்பது எவ்வளவு பெரிய சோகம். இது நடந்தது 2001-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 20-ஆம் நாள்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும், பலனளிக்காமல் சாவி அவர்கள் 9-2-2001 அன்று இயற்கை எய்தினார்.

காந்தியடிகளுடன் நவகாளி யாத்திரைக்குச் சென்று அவரைப் பேட்டி கண்டு, அதை மக்களுக்கு எழுதி உணாத்தியவர் அவர். நாட்டு விடுதலைப் போராட்டத்தில் சிறை புகுந்த தேசியவாதிகளில் ஒருவர் அவர். “பாரதமாதா”வின் சுதந்திரத்திற்காகச் சிறைசென்ற அவர்; இந்தச் சுதந்திர நாட்டில் பத்திரிகை சுதந்திரத்திற்காகவும் சிறை செல்ல வேண்டியிருந்தது. சாவி அவர்கள் பார்ப்பன சமுதாயத்தில் பிறந்தவர் என்ற போதிலும், அவா என்னிடம் எந்த அளவிற்கு அன்போடும், பாசத்தோடும் பழகினார் என்பதை நான் மட்டுமே அறிவேன். பத்திரிகை உலகின் பிதா மகனாகவே திகழ்ந்தவர் அவர். அவருடைய படைப்பில் வெளிவந்த “வாஷிங்டனில் திருமணம்” என்ற நகைச்சுவை நாடகம், தமிழகத்திலே ஒரு வரலாற்றினை உருவாக்கியது.

அவரது “சாவி” பத்திரிகையில் அட்டைப்படமாக யாரோ ஒரு பெண்ணின் ஓவியம் இடம்பெற்றதற்காக; அதிலே ஏதோ ஆபாசம் இருப்பதாகக் கூறி அ.தி.மு.க. ஆட்சியில் கைது செய்யப்பட்டார். தேச விடுதலைக்காக முகம் வாடாமல் சிறை சென்ற சாவி அவர்கள், பத்திரிகை அட்டைப் படத்துக்காகக் கைது செய்யப்பட்டதால் வாடி வதங்கிப்போனார். செய்தி கேள்விப்பட்டு நானும், கழக முன்னோடிகளும் காவல் நிலையம் சென்று அவரைச் சந்தித்து ஆறுதல் கூறி, அவரை ஜாமீனில் எடுக்கிற ஏற்பாடுகளைச் செய்தோம். அந்த நிகழ்ச்சி எங்கள் இனிய நட்பை மேலும் மேலும் மெருகேற்றி ஒளிவிடச் செய்தது.

“சாவி” பத்திரிகையில் அட்டைப்படமாக யாரோ ஒரு பெண்ணின் ஓவியம் இடம்பெற்றதற்காக; அதிலே ஏதோ ஆபாசம் இருப்பதாகக் கூறி அ.தி.மு.க. ஆட்சியில் கைது செய்யப்பட்டார். தேச விடுதலைக்காக முகம் வாடாமல் சிறை சென்ற சாவி அவர்கள், பத்திரிகை அட்டைப்படத்துக்காகக் கைது செய்யப்பட்டதால் வாடி வதங்கிப் போனார். செய்தி கேள்விப்பட்டு நானும், கழக முன்னோடிகளும் காவல் நிலையம் சென்று அவரைச் சந்தித்து ஆறுதல் கூறி, அவரை ஜாமீனில் எடுக்கிற ஏற்பாடுகளைச் செய்தோம். அந்த நிகழ்ச்சி எங்கள் இனிய நட்பை மேலும் மேலும் மெருகேற்றி ஒளிவிடச் செய்தது.”

நான் “குறளோவியம்” என்ற நூலினை எழுதி, அதன் முதற்பதிப்பு 17-2-1985 அன்று திருமகள் நிலையத்தாரால் சென்னையில் வெளியிடப்பட்ட போது, ஆசிரியர் சாவி அவர்கள் அந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், “கலைஞர் எழுதியிருக்கின்ற ஒவ்வொரு ஓவியமும் - நான உண்மையாகச் சொல்கிறேன் - ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு அப்புறம் - ராஜாஜிக்கு அப்புறம் - குட்டிக் கதைகள் சொல்வதில் கலைஞருக்கு இணை கலைஞர்தான். மிகவும் பொருத்த மான கதைகள். இப்பொழுது நடந்த கதையை எப்பொழுதோ எழுதப்பட்ட குறளுக்குப் பொருத்தமாகச் சொல்லியிருக்கிறார். நான் தினமணிக் கதிரில் இருக்கும்போது, கலைஞர் குறளோவியம் எழுதிக் கொடுப்பார். வாராவாரம் அவருடைய குறளோவியம் எப்போது வரும் என்று நானும் என்னுடைய உதவி ஆசிரியர்களும் குறளோவியத்திற்காகக் காத்துக் கொண்டிருப்போம். பத்திரிகை அலுவலகத்தில் இந்தக் கதை வந்து விட்டதே என்று எண்ணுவது போக, எப்பொழுது வரப் போகிறது என்று காத்திருந்து அது வந்தவுடன் கையெழுத்துப் பிரதியிலேயே அதைப் படித்து விடுவோம். ஒரு இடத்தில் கூட அடித்தல், திருத்தல் இராது. இரண்டாவது முறை மாற்றி எழுத மாட்டார். கலைஞருக்குத்தான அப்படி எழுத்து வரும். தெளிவான சிந்தனை இருப்பவர்களுக்கு அடித்தல் திருத்தல் எதுவும் இருக்காது. வள்ளுவருக்கு அருமையாக ஒரு நினைவாலயமும் எழுப்பிக் குறளோவியம் எழுதி வள்ளுவருக்குப் பெருமை தேடிக் கொடுத்திருக்கிறார்.

தமிழகத்தில் உள்ள தமிழர்களுக்கு மட்டுமல்ல; உலகில் எங்கிருந்தாலும் அவர்களை மேம்பாடடையச் செய்யும் அளவிற்கு கலைஞர் இந்த நூலை எழுதியுள்ளார்” என்றெல்லாம் குறிப்பிட்டதை, நான் என்னுடைய பெருமைக்காக அல்ல, எத்தகைய பெருமகன் அவர் என்பதை எடுத்துக்காட்டவே இங்கே அதனை எடுத்துக்காட்டியிருக்கிறேன்.

சாவி அவர்கள் மறைந்தபோது நான் எழுதிய இரங்கல் செய்தியில் - “எழுத்துலகில் பீடு நடை போட்டவரும், எழுத்தாளர்கள் பலரை உருவாக்கக் காரணமாக இருந்தவருமான என் ஆருயிர் நண்பர் ஆசிரியர் சாவி அவர்கள் இயற்கை எய்தி விட்டார் எனும் செய்தி கேட்டு என் கண்கள் குளமாகின்றன. எத்தனை ஆண்டுக் காலம் எனக்கும் அவருக்கும் நட்பு! ஆம்; பிரிக்க முடியாத நட்பு! அந்த நண்பரை இழந்துவிட்டேன். வயது 85 எனறாலுங்கூட, அவர் மறைந்த விதம் இருக்கிறதே, அது என்றென்றும் என் மனக்கண் முன்னால் நிழலாடிக் கொண்டே இருக்கும். மருத்துவமனையிலே இருந்தபோது ஒவ்வொரு நாளும் பிழைத்துக் கொள்வார் என்றே எதிர்பார்த்தோம். ஆனால், இயற்கை அவரைத் தன்னோடு இணைத்துக்கொண்டு விட்டது. என் உயிர் நண்பரை இழந்த துக்கத்தில் அவருடைய அருமைத் துணைவியாருக்கும், அவரது மக்களுக்கும் ஆறுதல் கூறக்கூடச் சக்தியற்றவனாக ஆகிவிட்டேன். சாவி நம்மைப் பிரிந்துவிட்டார். ஆனால், அவருக்கும் எனக்கும் இடையிலே உள்ள நட்பு ஆழமானது. அதை யாராலும் பிரிக்க முடியாது. வாழ்க சாவியின் புகழ்” என்று எழுதியிருந்தேன். அந்தப் பெருமகனின் 100வது பிறந்த நாள்தான் நாளை! இந்த நேரத்தில் அவரை நினைவுகூர்ந்து அவருடைய அருமை பெருமைகளைப் போற்றுவதை எனது கடமையெனக் கருதித்தான் இந்தச் செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். அன்புள்ள, மு.க. 9-8-2016

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 54 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 54 PDF ↗