தொகுதி 54 · கடிதம் 4042
அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு இலட்சணம்
2016-08-22
உடன்பிறப்பே,
சட்டம் ஒழுங்கைப் பொறுத்தவரையில், தமிழகம் அமைதிப் பூங்காவாக மாறியுள்ளது என்று ஆளுநர் உரையிலானாலும், முதலமைச்சர் ஜெயலலிதா பேசும் உரைகளினாலும், திரும்பத் திரும்பச் சொல்லிவருகிறார்கள். காவல் துறை அ.தி.மு.க.வின் ஏவல் துறையாகி, எடுத்ததற்கெல்லாம் எதிர்க்கட்சியினர் மீது பாய்ந்து பிறாண்டுவதும், ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகளைக்கூடப் பொறுத்துக்கொள்ளாமல, மாறறுத திறனாளிகள் மற்றும் பெண்களிடம்கூடத் தடியடி - கைது எனத தர்பார் நடத்துவதும், பொதுமக்களுக்குப் பாதுகாப்பளிப்பதை மறந்துவிட்டு “டாஸ்மாக்” கடைகளைப் பாதுகாப்பதும், ஆளுங்கட்சியினரைமட்டும் அரவணைப்பதும், அவர்களோடு கைகோர்த்துக்கொள்வதும், குற்ற நிகழ்வுகளில் புலனாய்வு செய்வதை விடுத்து அவற்றுக்கு மறைமுகமாகத் துணைபோவதும் தான் இங்கே நடைபெறுகிறது.
தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு முதல் 2015 வரை 9,948 படுகொலைகளும், சுமார் ஒரு இலட்சம் கொள்ளைகள், திருட்டுகள் நடந்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. கொலை மற்றும் கொள்ளையை மட்டும் எடுத்துக்கொண்டால் தமிழகத்தில் தினமும் சராசரியாக 7 கொலைகளும், 70 கொள்ளைகளும் நடந்து வருகின்றன. பெண் களுக்கு எதிரான குற்றங்களும் அச்சமளிக்கும் வகையில் அதிகரித்துவிட்டன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 2335 பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றனர். பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்களின் எண்ணிக்கை மட்டும் 20 ஆயிரத்திற்கும் அதிகமாகும்.
முக்கிய கொலைகளில் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதிலும் இந்த அரசு திறமையாகச் செயல்படவில்லை. அதற்கு உதாரணம் தேடி வேறெங்கும் செல்ல வேண்டியதில்லை. திருச்சியில் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை நடைபெற்று எத்தனையோ மாதங்கள், ஆண்டுகளாகியும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வில்லை. சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, 10-8- 2016 அன்று இந்தக் கொலை வழக்கை விசாரிக்க சி.பி., சி.ஐ.டி., போலீசாருக்கு இறுதி வாய்ப்பாக இரண்டு மாத காலம் அவகாசம் கொடுத்து உத்தரவிட்டுள்ளது.
தாழ்த்தப்பட்டோருக்கு எதிராகத் தாக்குதல் மற்றும் பாலியல் வன்முறை அதிகமாக நடைபெறும் முதல் ஐந்து மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர் புனியா குற்றம் சாட்டினார். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தபின், ஆதி திராவிடர்களுக்கு எதிராக 2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 213 கொலைகள் நடைபெற்றுள்ளன. 192 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். அதே போன்று 2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 118 பாலியல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும் 6,074 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் ஆதி திராவிடர்களுக்கு எதிராக வன்முறை அதிகமாக நடைபெறும் 5 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்பது தலைகுனிவைத் தரும் தகவலாகும்.
“பீரோ ஆப் போலீஸ் ரிசர்ச் அன்ட் டெவலப் மென்ட்” வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்தியாவிலேயே அதிக போராட்டங்கள் நடக்கும் மாநிலம் தமிழ்நாடுதான் என்றும், 21,232 போராட்டங்கள் நடைபெற்றுள்ளதாகவும் கூறியுள்ளது. அரசியல் கட்சிகள், அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் ஆகியோரின் போராட்டங்கள், மத ரீதியாக நடந்த போராட்டங்கள் என்று சமூக அமைதியின்மையின் வெளிப்பாடாக ஆரப்பாட்டங்கள், போராட்டங்களிலும் இந்தியாவில் தமிழகத்தை முதனமை மாநிலம் ஆக்கியதுதான் ஜெயலலிதா அரசின்
நாட்டிலே வாழும் சராசரி மனிதனுக்கு, இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்ற நிலை மாறி, மதுரையிலே உள்ள தமிழக
அமைச்சர் செல்லூர் ராஜுவின் தொகுதி அலுவலகம் மற்றும் அ.தி.மு.க. கட்சி அலுவலகம்மீது நடந்த தாக்குதலில், நாட்டு வெடி குண்டுகளும், மண்ணெண்ணெய் குண்டு பாட்டில்களும் 9-1-2016 அன்று வீசப்பட்டுள்ளன.
மற்றொரு அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியம்! அ.தி.மு.க. வைச் சேர்ந்த ஒருவரே அமைச்சரைக் கண்டித்து விஷம் குடித்திருக்கிறார். அவருடைய மகளுக்குச் சமையலர் வேலை வாங்கித் தருவதற்காக 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாகவும், ஆனால் வேலை வாங்கித் தரவில்லை என்றும் செய்தி வந்தது. அவர் ஏமாந்தது பற்றிக் காவல் துறை அதிகாரியிடம் புகார்செய்யச் சென்றபோது, அமைச்சருக்கு வேண்டியவர்கள் அவரைக் கடத்திச் சென்றதாகவும் செய்தி வந்தது.
தாழததப்பட்டோருக்கு எதிராகத் தாக்குதல் மற்றும் பாலியல வன்முறை அதிகமாக நடைபெபறும் முதல் ஐந்து மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்று தேசிய தாழத்தப்பட்டோர நல ஆணையத்தின் தலைவர் புனியா குற்றம்சாட்டினார். தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்தபின், ஆதி திராவிடர்களுக்கு எதிராக 2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்வரை 213 கொலைகள் நடைபெற்றுள்ளன. 192 போ பலத்த காயமடைந்துள்ளனர். அதே போன்று 2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 118 பாலியல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும் 6,074 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் ஆதி திராவிடர்களுக்கு எதிராக வன்முறை அதிகமாக நடைபெறும் 5 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்பது தலைகுனிவைத் தரும் தகவலாகும்.
ஏன், நிதியமைச்சர் ஓ. பன்னாசெல்வத்தின் தம்பி ராஜாதான் தன சாவுக்குக் காரணம் என்று எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டு மாண்ட ஆதிதிராவிடர் நாகமுத்து பற்றிய வழக்கு போல இன்னும் பல வழக்குகள் அமைச்சர்களைப் பின்னணியாகக் கொண்டுள்ளதால் தூங்கிக் கொண்டிருக்கின்றன.
புகைவண்டி நிலையத்தில் பட்டப்பகலில் சுவாதி கொலை செய்யப்பட்டது பற்றி, மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குறைபாடுகள் குறித்தும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகளிடம் பத்து கேள்விகளுக்கு விடை அளிக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. கிருபாகரன் அவர்களே, தலைமை நீதிபதி திரு கவுல் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், அறிவியல் வளர்ச்சி இவ்வளவு முன்னேறி வளர்ந்துள்ள நிலையில், அதை முழுமையாகப் பயன்படுத்திப் பொதுமக்களுக்கான பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்யாதது ஏன், தேவையான உபகரணங்களுடன் ரகசிய கண்காணிப்பு கேமராக்களை ஒருங்கிணைக்கும் நவீன கட்டுப்பாட்டு அறையை அமைக்க மத்திய மாநில அரசுகள் போதிய நிதியை ஏன் ஒதுக்கவில்லை, இதுவரை எத்தனை இடங்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன என்பது உட்பட பத்து கேள்விகளை எழுப்பியிருக்கிறா. தலைமை நீதிபதி அவர்கள், அந்தக் கடிதத்தையே வழக்கு மனுவாகப் பதிவுசெய்து, தலைமை நீதிபதி கவுல் அவர்களும், நீதிபதி மகாதேவன் அவர்களும் விசாரித்து, இந்தப் பத்து கேள்விகளுக்கு மத்திய மாநில அரசுகள் நான்கு வாரத்தில் பதிலளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருந்தார்கள். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு வழக்கறிஞர்கள் பதிலளிக்க அவகாசம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு நீதிபதிகள் ஏற்கனவே கால அவகாசம் தரப்பட்டுள்ளது. இருந்தாலும் மேலும் அவகாசம் கேட்கிறீர்கள், இன்னும் ஆறு வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும், அதற்குள் பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால் பத்தாயிரம் ரூபாய் அபராதத்துடன் பதிலளிக்க வேண்டுமென்று நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
வேளாண்மைத் துறை உயர் அதிகாரி முத்துக் குமாரசாமி தற்கொலை செய்துகொண்டு மாண்டு போனாரே, அதற்கு யார்
காரணம்?
காவல் துறை அதிகாரி விஷ்ணுப்ரியா தற்கொலை செய்து கொண்டாரே? அதற்கு யார் காரணம்?
ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்களே, அதற்கு என்ன நடவடிக்கை?
பாடகர் கோவன் கைது செய்யப்பட்டு, தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையிலே அடைக்கப்பட்டாரே, அது போலக் கருத்துச் சுதந்திரத்தைக் காலில் போட்டு மிதித்ததுதான் இந்த
ஆட்சியினரின் அளப்பரிய சாதனையா?
வேளாண்மைத் துறை உயர் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்டு மாண்டு போனாரே, அதற்கு யார் காரணம்?
காவல் துறை அதிகாரி விஷ்ணுப்ரியா தற்கொலை செய்துகொண்டாரே? அதற்கு யார் காரணம்?
ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்களே, அதற்கு என்ன நடவடிக்கை?
பாடகர் கோவன் கைது செய்யப்பட்டு, தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையிலே அடைக்கப்பட்டாரே, அது போலக் கருத்துச் சுதந்திரத்தைக காலில் போட்டு மிதித்ததுதான் இந்த ஆட்சியினரின் அளப்பரிய
சாதனையா?
கடந்த சில மாதங்களில் நடைபெற்ற முக்கிய கொலைகளை மட்டும் பட்டியலிட்டால் மது அருந்தியதைத் தட்டிக்கேட்ட வெங்கட ரமணன் மேற்கு சைதாப்பேட்டையில் கொலை - திருப்பூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு மாணவி பூரணி கழுத்தை அறுத்துக் கொலை - அரியலூர் அருகே வி.சி. நிர்வாகி முத்துக்கிருஷ்ணன அடித்துக் கொலை - ராஜபாளையம் அருகே கோயிலில் வாலிபா ராஜசேகர் படுகொலை - அவிநாசியில் மாணவி கொலை - சாத்தூர் அருகே விறகு வியாபாரி வெட்டிக் கொலை - பவானி அருகே முதியவர் அடித்துக் கொலை - சோழவரத்தில பூட்டிய வீட்டில் இளம்பெண் கற்பழித்துக் கொலை - வேலூர் அருகே தமிழ்வாணன் கொலை - போரூர் அருகே பெண் கொலை - காஞ்சிபுரம் அருகே தி.மு.க. ஊராட்சிமன்றத் தலைவர் அப்துல்ரகுமான் வெட்டிக் கொலை - வியாசர்பாடியில் கல்லூரி மாணவன் சீனிவாசன் வெட்டிக் கொலை - செவ்வாப்பேட்டை அருகே வாலிபர் அடித்துக் கொலை - திருத்தணி அருகே விவசாயி சண்முகம் படுகொலை
- சென்னை விருகம்பாக்கத்தில் தனியார் மின் உற்பத்தி நிறுவன நிர்வாகி வெங்கடேஸ்வரலு வெட்டிக் கொலை - ஆவடியில் குடிபோதை தகராறில் வாலிபர் குத்திக் கொலை - தேவகோட்டை அருகே ப்ளஸ் 2 மாணவி ஷாலினி கொலை - எழும்பூர் அருகே பெயிண்டர் ஓட ஒட விரட்டிக் கொலை - செங்கல் பட்டில் தொழிலாளி கோபி குத்திக் கொலை - திருவண்ணாமலை அருகே இளம் பெண் கற்பழித்துக் கொலை - புதுக்கோட்டை மாவட்டத்தில் 10வது வகுப்பு மாணவன் அடித்துக் கொலை - பாபனாசம் அருகே வாலிபர் அசோக் கொலை - கும்மிடிப்பூண்டி அருகே ப்ளஸ் 2 மாணவி ரோசம்மாள் கொலை - பெரம்பூர் அருகே பெயிண்டா அசோகன் அடித்துக் கொலை - மீஞ்சூரில் நள்ளிரவில் சென்னை வாலிபர் அடித்துக் கொலை - கும்மிடிப்பூண்டி அருகே இளம் பெண் கடத்திக் கொலை - நாமக்கல்லில் ஆசிரியர் பயிற்சி மாணவி கொலை - கும்முடிப் பூண்டி அருகே பெண் கொலை - மதுரை திருமங்கலம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் ரெங்கசாமி வெட்டிக் கொலை - சிவகங்கையில் கணவன், மனைவி வெட்டிக் கொலை - சிவகங்கை அருகே முன்னாள் ராணுவ வீரர், மனைவியுடன் படுகொலை - வேலூர் மாவட்டத்தில் மூன்று பேர் கொலை - மெரினா கடற்கரையில் வாலிபர் அடித்துக் கொலை - தாம்பரம் அருகே மெக்கானிக் வெட்டிக் கொலை - ஆலங்குளம் அருகே 3 பேர் கொலை - மதுரை அருகே செவிலியர் கல்லூரி மாணவி சரண்யா பாலியல் பலாத்காரம் செய்து கொலை - சேலம் அருகே கணவன், மனைவி வெட்டிக் கொலை - பணப்பாக்கம் அருகே வாலிபர் கொலை - சிவகங்கையில் தி.மு.க. பிரமுகர் வெட்டிக் கொலை - நாகையில் அ.தி.மு.க. - வி.சி. கட்சியினர் மோதல் - வாலிபர் அடித்துக் கொலை - சங்கரன்கோவில் அருகே கார் டிரைவர் ஜெகதீஷ் கொலை - சிவகங்கையில் அ.தி.மு.க.வில் சீட் கேட்ட கவுன்சிலர் மற்றும் மகன் கொலை - ஊட்டி டாக்சி டிரைவர் கோவை யில் கொலை - வேலூரில் மூதாட்டி கொலை தூத்துக்குடி அருகே 2 பேர் குண்டு வீசிக் கொலை - கும்மிடிப்பூண்டியில் லாரி டிரைவர் வெட்டிக் கொலை - பேரணாம்பட்டில் நர்சிங் கல்லூரி மாணவி கழுத்தை அறுத்துக் கொலை - கும்பகோணம் அருகே மாணவன் கொடூரக் கொலை - தஞ்சையில் நகைக் கடை காவலாளி கொலை - கிருஷ்ணகிரி லாரி டிரைவர் கொலை - உத்தமபாளையத்தில் பா.ஐ. செயலாளர் வெட்டிக் கொலை -போரூர் அருகே அடுக்கு மாடி குடியிருப்பில் இளம்பெண் படுகொலை - வளசரவாக்கத்தில
கழுத்து அறுத்து பெண் கொலை - மதுரையில் அ.தி.மு.க. கவுன்சிலா விஜயராகவன் வெட்டிக் கொலை - கரூர் அருகே கலப்புத் திருமணம் செய்த வாலிபர் வெட்டிக் கொலை - ராசிபுரம் அருகே கவுன்சிலர் சிவக்குமார், தந்தை பெரியண்ணன் வெட்டிக் கொலை - மேட்டூ அருகே தி.மு.க. கவுன்சிலர் உட்பட 5 பேர் வெட்டிக் கொலை - கும்முடிப்பூண்டி அருகே பூசாரி வெட்டிக் கொலை- வேப்பூர அருகே துப்பாக்கியால் சுட்டு விவசாயி கொலை - மண்ணடியில் இளம் பெண் வினோதினி கொலை - மானாமதுரையில் அ.தி.மு.க. கிளைச் செயலாளர் வெட்டிக் கொலை - குரோம்பேட்டையில் கொத்தனார் அடித்துக் கொலை - ஓய்வு பெற்ற துணை கலெக்டர் பொள்ளாச்சியில் வெட்டிக் கொலை - தாம்பரம் அருகே திருநங்கை குத்திக் கொலை - செங்குன்றத்தில் கல்லூரி மாணவியின் காதலன் குத்திக் கொலை. - மயிலாடுதுறை அருகே ஐவுளி வியாபாரி சரவணன் கொலை - மதுரையில் பெண் எரித்துக் கொலை - திருச்சுழியில் தி.மு.க. ஒன்றியப் பொருளாளர் படுகொலை. - சென்னை பெரியமேட்டில் நிதி நிறுவன அதிபர் வெட்டிக் கொலை - பெரிய மேடு காவல் நிலையம் அருகே தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் வெட்டிக் கொலை - அரியலூர் அருகே தமிழர் நீதிக் கட்சி நிர்வாகி முருகேசன் கொலை வடபழனியில் வங்கி ஊழியர் நாகேஸ்வர ராஜ் படுகொலை - குமரி மாவட்டத்தில் ஸ்ரீகுமார், சசிக்குமார் வெட்டிக் கொலை - குரோம்பேட்டையில் பட்டப்பகலில் கிருஷ்ணவேணி எனற பெண் கொலை - புழலில் வழக்கறிஞர் அகில்நாத் வெட்டிக் கொலை - கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போலீஸ் ஏட்டு குத்திக் கொலை - வியாசர்பாடியில் வழக்கறிஞர் தி.ரவி வெட்டிப் படுகொலை - சென்னை கல்லூரி மாணவர் உட்பட இரண்டு பேர் வெட்டிக்கொலை - சென்னை நுங்கம்பாக்கத்தில் அதிகாலையில் பெண் என்ஜினியர் சுவாதி கொலை - கேளம்பாக்கம் அருகே வாலிபா ராஜா கழுத்து அறுக்கப்பட்டு கொலை - நுங்கம்பாக்கத்தில் தனியார் நிறுவன காவலாளி கொலை - பரமக்குடி அருகே பள்ளி ஆசிரியர் வெட்டிக் கொலை - அரூர் அருகே விவசாயி குள்ளப்பன் சுடடுக் கொலை - தூத்துக்குடி அருகே நகைக்கடை உரிமையாளர் எரித்துக் கொலை - நாங்குனேரி அருகே கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை - நெல்லை, கிருஷ்ண கிரி, நெய்வேலியில் பயங்கரம் - தி.மு.க. நிர்வாகி உட்பட 3 பேர் கொலை - ராசிபுரம் அருகே தம்பதிகள் படுகொலை - குளித்தலை அருகே மஞ்சுளா
என்ற பெண் படுகொலை - நெல்லை அரசு அலுவலகத்தில் பெண் ஊழியர் படுகொலை - பட்டுக்கோட்டை நகரக் கழகப் பொறுப்பாளர், தங்க மனோகரன் வெட்டிக்கொலை - சிங்கா நல்லூரில் 2 பேர் கொலை - சம்பளபணத்தைப் பறித்துக்கொண்டு ஓடிய கொள்ளையனுடன் தைரியமாகப் போராடிய பள்ளி ஆசிரியை தள்ளிவிட்டுக் கொலை - புதுக்கோட்டை, கீரமங்கலத்தில் இளம்பெண் யமுனா அடித்துக்கொலை - திருச்சியில் பிரவீன் சுந்தா ரயிலில் தள்ளிக்கொலை - தூத்துக்குடியில் 2 பெண்கள் படுகொலை - லால்குடி அருகே மின்துறை அதிகாரி கொலை - மணலியில் அ.தி.மு.க. கவுன்சிலர் முல்லை ஞானசேகரன் வெட்டிக் கொலை - மானாமதுரை அருகே கழுத்தை அறுத்து சிறுமி கொடூரக் கொலை - நெல்லை அருகே ஓடும் பேருந்தில் அண்ணன் தம்பி வெட்டிக் கொலை - அச்சிறுப்பாக்கத்தில் தி.மு.க. பேரூராட்சித் துணைத் தலைவர் வெட்டிப் படுகொலை - நாமக்கல்லில் பள்ளி மாணவி காவியா கழுத்தை நெரித்துக் கொலை - வலங்கைமானில் சின்னப்பா, பைனான்ஸ் அதிபர் வெட்டிக் கொலை - நெகமத்தில் தொழிலாளி படுகொலை - திருவெண்ணெய் நல்லூர் அருகே பழி வாங்க பள்ளி மாணவி கொலை - சிவகாசியில் சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை - தர்மபுரி அருகே நடுரோட்டில் விவசாயி படுகொலை - சோளிங்கர் அருகே காவல் நிலையம் எதிரே விவசாயி கத்தியால் குத்திப் படுகொலை - பொள்ளாச்சி அருகே இளம் பெண் கற்பழித்துக் கொலை - மாமல்லபுரம் அருகே கழுத்து அறுத்து பெண் படுகொலை - ராணிப்பேட்டையில் பைனான்ஸ் அதிபர் வசந்தி வெட்டிக் கொலை - சேரன்மகாதேவியில் அரசு ஊழியர் வெட்டிக் கொலை - திருவள்ளூர் அருகே சென்னை வாலிபர் ஜெயசீலன் வெட்டிக் கொலை என்று பட்டியல் நீண்டு
எதிர்க்கட்சிகளும், அதன் தலைவர்களும் இந்த ஆட்சியில் எப்படியெல்லாம் அல்லலுக்கு ஆளாகிறார்கள் தெரியுமா? பிரதமர், முதல் அமைச்சர் சந்திப்பு பற்றித் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஏதோ பேசியதாகக் கூறி, தமிழ்நாடு முழுவதும் போராட்டம். அவருடைய வீடு முறறுகையிடப்பட்டது. மதுரையிலே அவரை எதிர்த்து மிகப் பெரிய போராட்டம். ஏன், தே.மு.தி.க. தலைவர், ஜெயலலிதாவின் பேனர் ஒன்றை எடுக்கச் சொன்னாரென்று அ.தி.மு.க.வினர் ஒரு போராட்டம். பத்திரிகையாளர்களைத் தூண்டிவிட்டு அவர்கள்
போராட்டம். தி.மு. கழகத்தைச் சேந்த கவுன்சிலார்களே, உள்ளாட்சி மன்றக்கூட்டங்களில் தாக்கப்படும் கொடுமை எவ்வளவு?
THIS கட்சிகளும், அதன் தலைவர்களும் இந்த ஆட்சியில் எப்படியெல்லாம் அல்லலுக்கு ஆளாகிறார்கள் தெரியுமா? பிரதமர், முதல் அமைச்சர் சந்திப்பு பற்றித் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர், ஈ.வி.கே. எஸ். இளங்கோவன் ஏதேதோ பேசியதாகக் கூறி, தமிழ்நாடு முழுவதும் போராட்டம். அவருடைய வீடு முற்றுகையிடப்பட்டது. மதுரையிலே அவரை எதிர்த்து மிகப் பெரிய போராட்டம். ஏன், தே.மு.தி.க. தலைவர், ஜெயலலிதாவின் பேனர் ஒன்றை எடுக்கச் சொன்னாரென்று அ.தி.மு.க. வினர் ஒரு போராட்டம். பத்திரிகையாளாரகளைத் தூண்டிவிட்டு அவர்கள் போராட்டம். தி.மு.கழகத்தைச் சேர்ந்த கவுன்சிலாகளே, உள்ளாட்சி மன்றக் கூட்டங்களில் தாக்கப்படும் கொடுமை எவ்வளவு?
அ.தி.மு.க. ஆட்சியில் எதிர்க்கட்சிகள் மீதும், ஏடுகள் மீதும் எத்தனை அவதூறு வழக்குகள்? “ஆனந்த விகடன்” இதழில் வந்த செய்தியை அப்படியே எடுத்துக் கேள்வி பதில் பகுதியில் நான் வெளியிட்டதற்காக என் மீது அவதூறு வழக்கு!
அவதூறு வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்ற நீதியரசர் தீபக்மிஸ்ரா கூறும்போது “முதலமைச்சரை ஊழல்வாதி என்று குறிப்பிடுவதே அவதூறு என்றால், எதிர்க்கட்சிகள் எதையுமே விமர்சிக்க முடியாதே” என்று வினவியிருந்தார்.
இப்போது மட்டுமல்ல; 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராகப் பொறுப்பேற்று, அந்த ஐந்தாண்டு காலத்தில் 180 அவதூறு வழக்குகளை எதிர்க்கட்சிகள் மீது தொடுத்தார். தற்போது 2011 முதல் 2015ஆம் ஆண்டு முடிய உள்ள ஐந்தாண்டுகளில 213 அவதூறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
“சென்னையில் தொடர்கிறது வழிப்பறி, திருட்டு, வீடு உடைப்பு” என்ற தலைப்பில் “தினமலர்” நாளேடு சில நாட்களுக்கு முனபு “கொட்டை எழுத்துக்களில்” செய்தி வெளியிட்டிருந்தது எதைக் காட்டுகிறது? அ.தி.மு.க. அரசு சட்டம் ஒழுங்கு அமைதியைப் பாதுகாப்பதில் காட்டுகின்ற இலட்சணத்தைப்
படம்பிடித்துக் காட்டுகின்றது. “தினமலர்” நாளேடு மட்டுமே இப்படிப்பட்ட செய்திகளை வெளியிட்டுள்ளது? அநேகமாக ஆங்கில நாளேடுகள், வார இதழ்கள் அனைத்திலும் இப்படிப் பட்ட செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்கும் துறை வேறு அமைச்சரின் பொறுப்பிலே இருந்திருந்தால் இந்நேரம் அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருப்பார். ஆனால் முதலமைச்சரின் பொறுப்பிலே உள்ள துறை அல்லவா அது; யாரைப் பழிவாங்க முடியும்?
13-55-2016 அன்று அதாவது தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன்பு, திருப்பூருக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட மூன்று கண்டெய்னர்களில் கடத்தப்பட்ட 570 கோடி ரூபாய் குறித்து, சி.பி.ஐ. விசாரித்து எவ்வளவு விரைவாக அறிக்கை கொடுக்க முடியுமோ, அவ்வளவு விரைவில் நீதிமன்றத்திற்கு அறிக்கை தரவேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
கடந்த 24-4-2016 அன்று “தினமலர்” நாளிதழின் முதல் பக்கத் தலைப்புச் செய்தி என்ன தெரியுமா? “வாக்காளர்களுக்குக கொடுப்பதற்காகப் பதுக்கிய 250 கோடி ரூபாய் பறிமுதல் - 45 இடங்களில் சோதனை” என்பதுதான்! அந்தத் தலைப்பின்கீழ் வந்த செய்தியில்,
“கரூரில், அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு நெருக்கமான, அன்புநாதன் என்பவர் வீட்டில், நேற்று முன்தினம் வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் 10.30 இலட்சம் ரூபாய் ரொக்கம்; ஒரு ஆம்புலன்ஸ் வாகனம்; ஒரு டிராக்டர்; ஒரு கார்; 12 பணம் எண்ணும் மிஷின்கள் பறிமுதல் செய்யப்பட்டன என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. ஆனால், நேற்று ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியானது. கரூரில் அன்புநாதன் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டது, இந்திய தேர்தல் வரலாற்றில், இதுவரை இல்லாத அளவு பணம் என்று கூறப்பட்டது. இதுபற்றி, கரூர் போலீஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது, “அன்புநாதன் வீட்டில் சிக்கியது, 250 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும்” எனத் தகவல்கள் கிடைத்தன” என்று
“தினமலர்” செய்தி வெளியிட்டது.
அதே இதழில் வெளிவந்த மற்றொரு செய்தியில், “தமிழகம் முழுவதும் பணம் பதுக்கி வைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட இடங்களில் நேற்று சோதனை நடந்தது. மொத்தம், 45 இடங்களில், 500 வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறும்போது, “கரூரில் பணம் மட்டுமின்றி, ஏராளமான சொத்து ஆவணங்கள், வேட்டி, சேலை மற்றும் பரிசுப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையில் ஒரு நகைக் கடையில் சோதனை நடத்தப்பட்டுப் பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கரூரில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வீட்டில், பொருத்தப்பட்டிருந்த கண் காணிப்பு கேமராவை, வருமானவரித் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதில் பணம் கொண்டு வந்து இறக்கப்பட்ட காட்சிகள், பதிவாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் காமரா, வருமானவரித் துறையினர் வசம் சிக்காமல் இருக்க, போலீஸ் உயர் அதிகாரிகள் முயற்சித்ததாகவும், தகவல் வெளியாகியுள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்கள்.
இந்தத் தகவல்கள் “தினமலர்” நாளிதழில் வந்ததைப் போலவே, வேறு பல நாளேடுகளிலும் வந்துள்ளன. இந்தத் தகவல் கள் வருமானவரித் துறை அதிகாரிகளும், தேர்தல் அதிகாரிகளும் கூறியதாக உள்ளன. செய்திகள் வந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும், தமிழக அரசின் சார்பில் இதற்கு ஏன் விளக்கம் அளிக்கவில்லை?
அன்புநாதன் மூலமாக இரண்டு முக்கிய அமைச்சர்கள் தங்களது லஞ்ச, ஊழல் பணங்களைப் பல இடங்களுக்கு அனுப்பினார்கள் என்றும், ஊரின் பெயரைத் தன் பெயருக்கு முன்னாள் வைத்துள்ள அமைச்சர் ஹாங்காங் அருகே தீவே வைத்திருப்பதாகவும், அமைச்சரின் “பாஸ்போட்டை” சோதனையிட்டாலே அவர் பயணம் செய்த விவரத்தை அறியலாம் என்றும், நடிகைகள் பற்றியும் பக்கம் பக்கமாக வந்த செய்திகள் இன்றுவரை அமைச்சர்களாலோ, முதல்வராலோ மறுக்கப்படவில்லையே; ஏன்?
தமிழகத்தில் இது ஒரு சம்பவம் மட்டுமா? கரூரில் நத்தம் விசுவநாதன் நண்பர் வீட்டில் இந்தச் சோதனை என்றால், அதற்கு மறுநாளே சென்னையில் அமைச்சர் வைத்திலிங்கத்தின் நண்பர் வீட்டில் சோதனை நடைபெற்றதாகவும், ஐந்து கோடி
ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் செய்தி வரவில்லையா? தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இவர் என்றும், தஞ்சை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவர் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்ததே, இது உண்மையா இல்லையா? இவ்வளவு தானா?
தமிழகத்தில் இதுவரை எத்தனையோ தோதலகள் நடைபெற்றிருக்கிறதே, எந்தத் தேர்தலிலாவது இந்த முறை போலப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதா? ஐநது மாநிலங்களில் மொத்தம் 133 கோடி ரூபாய் பறிமுதல் என்றால், அதிலே தமிழகத்தில் மட்டும் சுமார் 100 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
சிறுதாவூர் அரண்மனையில் இருந்த கண்டெய்னர்கள் பற்றிக் கடந்த மாதமே எல்லா ஏடுகளிலும் புகைப்படத்துடன் செய்தி வந்தது. ஆனால் மாவட்ட ஆட்சியரும், காவல் துறை கண்காணிப்பாளரும் நேரில் சென்று பார்வையிட்டு அறிக்கை அனுப்பியதாகவும், அதன்படி கண்டெய்னர் சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்றும் அறிவித்து, தேர்தல் ஆணையத்தின் ஒத்துழைப்போடு உண்மையை மூடிப் புதைத்துவிட்டார்கள். மாவட்ட ஆட்சியரோ, காவல்துறை கண்காணிப்பாளரோ சோதனை யிடவே செல்லவில்லை என்பதுதான் பிறகு வெளிச்சத்திற்கு வந்த செய்தி.
இந்த ஒரு மாதக் காலத்தில்தான் எத்தனை கொள்ளைகள்?
மாஜி டி.ஐ.ஜி. மனைவியிடம் திருட்டு - குன்றத்தூர் அருகே கத்தியைக் காட்டி மிரட்டி நகை, பணம் பறிப்பு - பெரம்பலூர் அருகே இன்று வீடு புகுந்து 35 பவுன், 2 லட்சம் ரூபாய் கொள்ளை. - தாம்பரம் அருகே பெண் டாக்டர் வீட்டில் [2 பவுன் நகை கொள்ளை. - கடலூரில் வீடு புகுந்து 33 லட்சம் ரூபாய் கொள்ளை - எஸ்.ஐ. மனைவியிடம் செயின் பறிப்பு - ஆவடி அருகே வீட்டுப் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை - கோவையில் வனத்துறை அதிகாரி மனைவியை கட்டிப்போட்டுக் கொள்ளை - நெய்வேலி அருகே சுரங்கம் அமைத்து நகைக் கடையில நகை கொள்ளை - சென்னை பெண் நீதிபதி வீட்டில் 200 சவரன் நகை கொள்ளை - காவல் நிலையம் அருகே 3 வீடுகளில் பூட்டை உடைத்து 70 சவரன் கொள்ளை - போலீஸ்காரர் மனைவியிடம்
செயின் பறிப்பு - அம்பையில் நகைக் கடையில் பத்து கிலோ தங்கம் கொள்ளை - மதுரையில் தம்பதியைக் கட்டிப்போட்டு காதை அறுத்து வைரத்தோடு பறிப்பு - சேலம் அருகே நகை அடகு நிறுவனத்தில் 714 பவுன் கொள்ளை -ஆத்தூர் அருகே நிதி நிறுவனத்தில் 55 கிலோ நகை கொள்ளை - மாநகராட்சி அதிகாரி போல நடந்து 45 சவரன் கொள்ளை என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
இவ்வளவு ஏன்? நேற்றைய செய்தி என்ன? திருவொற்றியூரில் உள்ள பிரபல கோயில் கதவை உடைத்து 6 பஞ்சலோக சிலைகளைக் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.
அது போலவே திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள குபேரநகர் பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் உள்ள குபேர பெருமாள் கோயில் பூட்டை உடைத்து, மூலவர் கையில் இருந்த நகைகள், வெள்ளிகிரீடம் போன்றவற்றையும் உண்டியலை உடைத்து அதிலே உள்ள பணத்தையும் கொள்ளை அடித்துச் சென்றிருக்கிறார்கள். திரைப்படங்களில்தான் நாம் கண்டிருப்போம். ஓடும் ரெயிலில் கொள்ளை அடிப்பதை; ஆனால் அம்மையார் ஜெயலலிதாவின் ஆட்சியில் சேலத்திலிருந்து புறப்பட்டுச் சென்னை வந்த ரெயிலில் கொண்டுவரப்பட்ட 5 கோடியே 80 இலட்ச ரூபாயை இரவோடு இரவாகக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவமும் நடைபெற்ற பெருமையும் இந்த ஆட்சிக்குத்தான உண்டு. இந்த கொள்ளைகளையும், கொலைகளையும் கண்டுபிடிக்காத காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை உண்டோ இல்லையோ, சென்னையில் தலைமைச் செயலகத்தில் போராட்டம் நடத்திய தி.மு. கழகத்தினாமீது நடவடிக்கை எடுக்காத காவல் துறை அதிகாரி உடனடியாக ஒரே நாளில் ராமனாதபுரம் கடலோரக் காவல் படைக்கு மாற்றப்பட்ட நடவடிக்கை மட்டும் எடுக்கப்பட்டுள்ளது. இவைதான் அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு காப்பாற்றப்படும் இலட்சணம்! அன்புள்ள, மு.க. 22-8-2016
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 54 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 54 PDF ↗