திரும்பிப்பார்!
காட்சி 86 · 86 / 93
(ஓடுகிறான்)
★
பரந்தாமன் : உன்னால் சுலபத்தில் திரும்பிப்பார்க்க முடியாது நீ ஒரு யானை. கருடன் : பரந்தாமா,உனக்கு ஏனப்பா திடீர்ன்னு இந்த கெட்ட புத்தி. பரந்தாமன் : நல்ல புத்தி வந்துவிட்டதடா நாசகாரா - இனியும் என்னை உன் வலையில் தள்ளாதே. பரந்தாமன் பாதை மாறி விட்டது. அவன் செய்த அக்ரமங்களுக்கு சாந்தி தேடப் போகிறான். அக்கா ! உங்கள் தம்பி உடனடியாக ஒரு நல்ல காரியத்தில் பிரவேசிக்கப் போகிறான். பாண்டியன் குமுதா அவர்களை ஒன்று சேர்த்து மகிழப் போகிறான்.
பாமாவிடம் மன்னிப்புக் கேட்கப் போகிறான். கருடன் : பரந்தாமா ! பரந்தாமன் : வருகிறேன். என்னைக் கூப்பிடாதே. பையன் : நானும் வர்றேங்க உங்களோட. பரந்தாமன் : வா தம்பி வா. இங்கிருந்தால் நீயும் கெட்டு விடுவாய். கருடன்: ஏய் என்னடா? பையன் : திரும்பிப்பார். (பையன் எழுத) (கருடன் பதிப்பகம் - திருடன் பதிப்பகமாக்கப்படுகிறது)
★
[சென்னை ஹோட்டல் [ பரந்தாமன் எழுதுவது அவசர வேண்டுகோள். அன்புள்ள குமுதாவுக்கு ! உன்னைப் பார்க்கவேண்டும் என்று துடிக்கிறேன். நடந்தவைகளை மறந்துவிட்டு
உடனே உன்னுடைய விலாசத்தை எனக்குத் தெரியப் படுத்தினால் ஓடி வந்து சந்திக்கிறேன். இங்ஙனம், உன் அன்பு மாமன் பரந்தாமன், ரூம் -15, இமாலயா ஓட்டல், சென்னை. (எழுதிய கடிதத்தை ஒருமுறை படித்துவிட்டு பையனிடம்) பரந்தாமன் : நீ உடனே தினசரி பத்திரிகை ஆபீஸ்களுக்குச் செல்லவேண்டும். பையன்: ஏங்க... பரந்தாமன் : இந்த விளம்பரத்தை எல்லாப் பத்திரிகைகளிலும் போடவேண்டும். பையன்: ஏங்க வீணா சிரமம் குமுதா அம்மாளுக்கே நேரா ஒரு கார்டு போட்டா போவுது பரந்தாமன் : ஏ.
என்னா எனக்கு புத்தி வந்தவுடனே உனக்கு புத்தி மழுங்குது ! குமுதா விலாசம் தெரிஞ்சா இந்த விளம்பரம் எதுக்கு ! உம் பையன் : ஓ... அதை மறந்துட்டேன். பரந்தாமன்: (நூறு ரூபாய் பணம் எடுத்துக் கொடுத்து) இந்தா விளம்பர சார்ஜுக்குக் கொடு! எல்லா பத்திரிகையிலும் இன்னைக்கே போடச் சொல்லணும்! பையன் : (பணத்தையும் காகிதத்தையும் வாங்கியபடி ) சரிங்க !... பரந்தாமன்: நிச்சயம் என் குமுதா இருக்குமிடம் தெரிந்து விடும்: அவளிடம் ஓடுவேன்.
மன்னிப்பு கேட்பேன். சீரழிந்த குடும்பத்திலே மறுமலர்ச்சி உண்டாக்குவேன்!
★
[பிரசவ ஆஸ்பத்திரி (வாட்ச்மேன் கூண்டில், பத்திரிகையுடன் வாட்ச்மேன் உட்கார்ந்திருக்கிறான். பரந்தாமனின் விளம்பரம் கண்ணில்படல்] "அன்புள்ள குமுதாவுக்கு" (ஆர்வமாய்) என்னாது ! என்னாது ! நம்ப குமுதா பேரு வருது ! (மீண்டும்) அன்புள்ள குமுதாவுக்கு... (பிறகு முணகல் ) (உரக்க) இப்படிக்கு உன் மாமன் பரந்தாமன், 15, இமாலயா ஹோட்டல், சென்னை ...ஆகா, குமுதாவோட கவலையெல்லாம் ஒழிஞ்சிடும்!இப்பவே எழுதுகிறேன் குமுதா விலாசத்தை (கார்டைத்தேடி) எங்கடா கார்டு !
இதுவேற ...ம்.... (எடுத்து எழுதுகிறான். எழுதி முடிக்கும்போது அந்தப் பக்கம் பாண்டியன் வருதல்) வாட்ச்மேன்: (பாண்டியனைப் பார்த்து) தம்பீ ! கொஞ்சம் நில்லேன்! (அருகே வந்து) இந்தப் பக்கம்தானே போறே? பாண்டியன்: ஆமாம் வாட்ச்மேன் : உம். இந்தக் கார்டை கொஞ்சம் தபால் பெட்டியிலே போட்டுட்டு போய்டேன். (பாண்டியன் வாங்குதல்) ரொம்ப அவசரம் எனக்கு ஆஸ்பத்திரி நேரம். வெளியே போகக்கூடாது ! போட்டுர்ரீயா? பாண்டியன்: ம்...
(வாங்கிக்கொண்டு போகிறான்)
★
[தெரு [கார்டை எடுத்துச் சென்ற பாண்டியன் தெரு மூலையிலுள்ள பெட்டியில் போடும்போது தவறி கீழே விழுகிறது. அதில் விலாசம் தெரிகிறது] பரந்தாமன், 15, இமாலயா ஹோட்டல், சென்னை
பாண்டியன்: (திடுக்கிட்டு) பரந்தாமன்! (கார்டைப் படிக்கிறான்) ஆ! குமுதாவின் விலாசம்! என் குமுதா அகப்பட்டுவிட்டாள் ! குமுதா! குமுதா! குமுதா ! குமுதா! (ஓடுகிறான்)
★
[வாட்ச்மேன் வீடு பாண்டியன் : குமுதா! குமுதா ! குமுதா: பாண்டியன் ! (தழுவிக்கொள்ளல்) பாண்டியன்: குமுதா ! உன்னைத் தேடி எங்கெல்லாம் அலைந்தேன் தெரியுமா? ஆமாம் குழந்தை எங்கே? (குழந்தையை கொஞ்சுதல்) பாண்டியன்: என்ன குமுதா குழந்தைக்கு பெயர்? குமுதா: என்னவாயிருக்கும் சொல்லுங்களேன் ! பாண்டியன் : தாத்தா பெயரா? (புண்யகோடியும், ஊமைப் பெண் உள்பட ஆணும் பெண்ணுமாக ஒரு கூட்டம் " சாம்ப சதாசிவம் - சாம்ப சதாசிவம் - சாம்ப" என்று பிச்சையெடுத்து வரல்,வீட்டுக்கு வந்த வாட்ச்மேன் அவர்களைப் பார்த்து ) வாட்ச்மேன்: என்னாப்பா...
ஒருத்தன் வந்தாவே பிச்சைபோட ஆள் இல்லை. நீ பெரிய பட்டாளமே திரட்டிக்கிட்டு வர்ரியே. புண்யகோடி: ஒருத்த ஒருத்தரா வந்தா தொல்லையா இருக்கும்ணுதான் எல்லோரும் சேர்ந்து வர்ரோம். ம் என்னா செய்றது! எங்க காலம், நல்லாத்தான் வாழ்ந்தோம்! வாட்ச்மேன் : ஓகோ நெசவாளிங்களா!
புண்யகோடி: அது கெட்டுது போ ! நாங்கள்ளாம் மில் தொழிலாளிங்க. அதும் கோயமுத்தூரு! வேலை கிடையாது. இப்படி வேதனைபடுறோம். வாட்ச்மேன் : குமுதா! குமுதா ! கொஞ்சம் அரிசி கொண்டாம்மா! புண்யகோடி : கொஞ்சமா -கூட்டத்தைப் பார்த்துட்டு வாட்ச்மேன் : பின்ன என்ன குருணியா போடுவாங்க! (பாண்டியன் குமுதா வருகை பாண்டியன்: (புண்யகோடியைக் கண்டு) அப்பா ! அப்பா ! புண்யகோடி : பாண்டியா! என் மகனே ! பாத்தியா உங்கப்பன் கதியை! பாண்டியன் : அப்பா !
பரதேசியாக மாறிவிட்டீர்கள்? புண்யகோடி: மாத்திட்டான் அந்தப் பரந்தாமன். குமுதா: (வாட்ச்மேனிடம்) இவர்தான் பாண்டியன்! என் கணவர் ! வாட்ச்மேன் : அப்படியா! பாண்டியன் : ஆமாம். (வாட்ச்மேனிடம்) இவர்தான் எங்கப்பா. அப்பா ! என்னப்பா நடந்தது? புண்யகோடி ; பரந்தாமன் சுயநலத்துக்காக வேலை நிறுத்தம் பண்ணி மன்னிப்பு . அதுக்காக எங்களுக்கெல்லாம் வேலை இல்லேனுடான் முதலாளி. பாண்டியன் : ஆ ! குற்றம் செய்தது யார்? கொடுமை அனுபவிப்பது யார்?
புண்யகோடி: நாங்கமாத்திரம் இல்லப்பா ! நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இப்படி ஆயிட்டுது!
பாண்டியன் : நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ! வேதனைப்படும் தொழிலாளர்களின் சார்பில் நான் அந்த முதலாளியை சந்திக்கிறேன். புண்யகோடி : என் மகன்னா மகன்தான்.(கட்டிக்கொள்கிறான்)
