உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
திரைக்கதை & வசனம்

திரும்பிப்பார்!

காட்சி 85 · 85 / 93

பாண்டியன் : சார் ! நான் மெட்ராஸ் போரதுக்கு பாஸ் கொடுப்பாங்கள்ளே !

வார்டர் : ஓ.நீ போகவேண்டிய ஊருக்கே கொடுப்பாங்க. மெட்ராஸிலே தானே உன் குடும்பம்....

பாண்டியன் : ஆம். அங்கேதான் என் குமுதா.

★

[வீடு பூட்டியிருப்பதை பாண்டியன் பார்க்கிறான்]

அவன் குரல் : குமுதா நீ எங்கே போய்விட்டாய். கோயமுத்தூருக்கே போய்விட்டாயா? அங்கு வந்து உன்னை நான் எப்படிப் பார்ப்பேன். பூமாலை,பரந்தாமன் - அவர்கள் முகத்திலியே விழிக்கக்கூடாது. அந்தப் பொல்லாதவர்கள் வீட்டிலே என் குமுதா- கூடாது- அவளை அங்கு போய் பார்க்கக்கூடாது

★

[பூமாலை அறை பூமாலை: உஷா உன் உதவியை மறக்கவே முடியாது: உஷா: பரவாயில்லேம்மா. பூமாலை : தினம் தினம் ராத்ரீலே இங்கே படுத்தீன்னா அப்பா ஏதாவது ஆத்திரப்படுவாரு. இன்னைக்கு வீட்டுக்குப் போம்மா.

அவைகளையெல்லாம் திரும்பிப்பார். ஏன் நிற்கிறாய் பயங்கர மிருகமே, ஏன் நிற்கிறாய்? பரந்தாமன் : அக்கா !... பரந்தாமா! நீ மனிதனல்ல, மிருகம். மிருகம் (ஓடுகிறான்)

★

பரந்தாமன்: பரந்தாமா! பாவி ! உனக்கு இந்த தண்டனை போதாது. இன்னும் வேண்டும். இன்னும் வேண்டும்.

(வானத்திலே பல நட்சத்திரங்கள் திடீரென உதிர்ந்து பெண்ணாக மாறுகின்றன. பரந்தாமன் Reaction-Echo)

Echo: வானத்திலே பல நட்சத்திரங்கள்- ஒரே நிலவு- வையகத்திலே உனக்குப் பல சகோதரிகள் - ஒரே மனைவி - ஒரே மனைவி.

பரந்தாமன் : அக்கா ! அன்பின் சிகரமே ! என்னை மன்னித்து விடுங்கள். நான் பகுத்தறிவாளனாகி விட்டேன். பகுத்தறிவாளனாகி விட்டேன். திரும்பிப்பார் - எனக்கு மட்டுமல்ல - உலகத்திற்கே என் அக்காள் வழங்கிய ஒப்பற்ற உபதேசம்.திரும்பிப்பார் - ஏ மாஜி மனிதனே - மகா பாதகனே - நீயும் திரும்பிப்பார். நீ உருண்டு வந்த சாலையிலே அள்ளித் தெளித்திருக்கும் மண்டையோடுங்கள் எத்தனை? பிழிந்தெறியப்பட்ட இருதயச் சக்கைகளின் தொகை எவ்வளவு?

எண்ணிப்பார்.இழிவு நிறைந்தவனே திரும்பிப்பார். ஏ, மானிட ஜாதியே நீ குரங்கிலிருந்து வளர்ந்தாயாம்-அந்தக் குரங்கு மனப்பான்மை உன்னை விட்டு குறைந்துவிட்டதா என்று ஒருமுறை திரும்பிப்பார்- திரும்பிப் பார் - திரும்பிப் பார் - அக்கா ! நான் திரும்பிப் பார்த்துவிட்டேன் அக்கா ! திருந்திவிட்டேன் அக்கா !

முதல் பதிப்பு: 1953