உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
பராசக்தி/காட்சி 32
திரைக்கதை & வசனம்

பராசக்தி

காட்சி 32 · 32 / 46

(விமலா வீட்டில் குணசேகரன் தன் கதையைக் கூறல்)

குண : முத்து எடுக்கப் போய் கிளிஞ்சல் பொறுக்கிய கதையாக முடிந்தது. தங்கையின் வீட்டில் மகிழ்ச்சி தவழும், உற்சாகம் ஊஞ்சலாடும், களிப்பு கொஞ்சும் என்றெல்லாம் கனவு கண்டேன். ஆனால் அங்கு வேதனை விநாடிக்கு நூறு, வறுமையிலிடப்பட்டு பைத்தியக்காரனாய் அங்கு சென்றேன். இந்த நிலையில் அறிமுகம் ஒருகேடா? என் தங்கையிடம் நான் யாரென்று சொல்லி அவள் வாழ்வை வேதனைப்படுத்தக்கூடாது. அவள் அழுதது போதும். அண்ணனும் அழவேண்டாம் என்று நினைத்தேன்.

ஆனால் என் அன்புத் தெய்வம் கல்யாணி என் கண்களுக்கு அப்பால் வெகுதூரம் சென்றுவிட்டாள். தேடுகிறேன்! தேடுகிறேன்! தேடிக்கொண்டே இருக்கிறேன்.

விம : அழுவதா? சிரிப்பதா? என்றே தெரியவில்லை. உன் கதையைக் கேட்ட பிறகு.

குண : ஏன்?

விம : அன்பு இருக்கிற அளவுக்கு உன்னிடத்தில் அறிவு இல்லை. இப்படி சொல்கிறேனே என்று ஆத்திரப்படாதே. உன் செல்வம் கொள்ளையடிக்கப்பட்ட போது நீ சென்றிருக்க வேண்டும் போலீஸாரிடம்.

குண : ஒரு பானையோடு போனேன்...பானம் அருந்தினேன்...பணத்தைப் பறிகொடுத்தேன். இதை போலீஸாரிடம் சொல்ல எனக்கு வெட்கமாயிருந்தது.

விம : பிச்சைக்காரனாய் திரிந்தாய் வெட்கமில்லை. திருடனாய் மாறினாய் அப்போதும் வெட்கமில்லை. ஆனால் உன் ஏமாற்றத்தை வெளியில் சொல்ல மட்டும் வெட்கப்பட்டிருக்கிறாய். வேடிக்கையான மனிதன்.

குண : உனக்குத் தெரியாது. சமுதாயமே பிச்சைக்கார மடம், பைத்தியக்கார விடுதி, திருடர் குகை. இதில் நான் மட்டும் வெட்கப்படுவானேன்.

விம : ஆம்! சமுதாயம் பிச்சைக்கார மடம்தான். ஆனால் அதில் நீ திருவோடு இல்லாத பரதேசி. சமுதாயம் பைத்தியக்கார விடுதிதான்; அதில் நீ கல்வெறியத் தெரியாத பைத்தியம். சமுதாயம் திருடர்களின் குகை; அதில் நீ கனக்கோல் பிடிக்கத் தெரியாத திருடன். சமுதாயத்தை சரசாரமாய் திடுக்கிடவே யோசித்துப் பார்! உனக்குத் தெரியாமலே சமுதாயத்தோடு சேர்ந்து முட்டாளாகி இருக்கிறாய் நீ.

குண : முட்டாளா? நானு?

விம : ஆம். ஆயிரம் முறை சொல்கிறேன். பிச்சைக்கார உடையிலே எத்தனைபேர் பணக்காரராய் இருக்கிறார்கள்...

விம : பைத்தியக்கார வேஷத்தில் எத்தனையோ லட்சாதிபதிகளாய் உலவுகிறார்கள். தேவாலயத் திருப்பணி, திருமாலுக்கு திருவிழா...இந்தத் திரையிலே எத்தனைத் திருடர்கள் உலவுகிறார்கள். நீயும் மாறினாயே திருடனாய்...பித்தனாய்...பிச்சைக்காரனாய். முடிந்ததா உன்னுள் அந்த மோகன வாழ்வு பெற?

குண : எனக்குத் தேவையானது மோகன வாழ்வல்ல, கல்யாணி! என் தங்கை கல்யாணி!

விம : இப்போதும் உன் ஜீவக் குற்றம் சாடுகிறேன். நீ ஒரு சுயநலவாதி. உன் சொந்தத் தங்கைக்காக அவள் நோய்த் வாழ்வுக்காக சுருண்டு போனாயே தவிர நாட்டிலே எத்தனை தங்கைகள் நலிந்து கிடக்கிறார்கள் என்று நினைத்தாவது பார்த்தாயா? உன் சொந்த தங்கைக்காக நீ அன்பும் பேராசையிலே வேலை வாங்கிக்கொண்டு வீட்டுவாசல்களிலே நிற்பவருக்கு விம்மும் குரலில் பசி பசி எனப் பதறி அழும் பாவை யாரென்று பார்த்திருப்பாயே. அவர்கள் எல்லாம் யார்?

கல்யாணி! கல்யாணி! என்று கத்துகிறாயே ஒரு கல்யாணியல்ல, ஒரு கோடிக் கல்யாணிகள் கண்ணீர் கம்பளியுமாக கதியற்று நடைப்பிணமாய் நாட்டிலே நடமாடுகிறார்கள். அதற்காக உன் நாவு அசைத்ததுண்டா? உன் நெஞ்சு துடித்ததுண்டா?

குண : எனக்கென்ன அடிக்கவேண்டும்? இந்தக் கேடு கெட்ட சமுதாயத்திற்கு, நன்றிகெட்ட நாட்டிற்கு, ஏழைகளை மிதித்து வாழும் எத்தர்களுக்குத் துடிக்கவேண்டும். நெஞ்சு உயிர் உடலெல்லாம் எனக்கேன் துடிக்கவேண்டும்!

விம : அந்தச் சமுதாயத்திலே நீயும் ஒரு அங்கம்.

குண : ஆனால் ஏழை.

விம : அப்படி ஆகப்பட்டாய் இதற்கேன்! உன்னை ஏமாற்றி பணத்தைப் பறித்துக் கொண்டாளே, அந்த நாட்டோடியை நான் பாராட்டுகிறேன்!