உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
பராசக்தி/காட்சி 33
திரைக்கதை & வசனம்

பராசக்தி

காட்சி 33 · 33 / 46

குண : பாராட்டுகிறாயா?

விம : ஆம்! உன் கண்ணைத் திறந்தவள் அவள்தான். நீ ஏழையாக ஆகப்படாவிட்டால் ஏழை உலகை நினைத்துக் கூட இருக்க மாட்டாய். அப்படி ஒரு உலகம் இருப்பதாகவே உனக்குத் தெரிந்திருக்காது. உன் உலகம் உல்லாசப் புரியாக இருந்திருக்கும். மாளிகையிலேயே வீசும் தென்றலை அனுபவிப்பாய்; குடிசையிலேயே குமுறும் புயலைக் காணமாட்டாய். சமுதாயக் கோணல்கள் வெறுக்கக் கற்றிருப்பாய். ஆனால் எரிமலையைத் தண்ணீர் ஊற்றி அணைக்கப் பார்க்கிறாய்.

மலைப் பாம்பை அடக்க மகுடி ஊதுகிறாய். சமுதாயப் புரட்சி ஆலகால விஷத்தின் கிளையை வெட்டுவதல்ல.

விம : அதன் ஆணிவேரையே பெயர்ப்பதுதான். வெட்கப்படு. நீ மேற்கொண்ட வேலைகளுக்கு வேதனை தீர்க்கும் மார்க்கம் நீ போட்ட வேஷங்களல்ல. அதற்காக மட்டும் இருந்திருக்கக் கூடாது. அவதிப்படும் ஆயிரமாயிரம் தங்கைகளுக்காக இருந்திருக்கவேண்டும். அதற்காக வெட்கப்பட்டு, வேதனைப்பட்டு விசாரப்படு.

குண : போதும்! போதும்!

விம : மன்னித்துக்கொள். உன் மனதைப் புண்படுத்தி விட்டேன். பாலைவனத்தை பூஞ்சோலையாக்கப் புதிய பாதை காண வேண்டும். உன்னைப்போல் மண்ணைவாரி இறைத்துப் பயனில்லை.

குண : ஆமாம்! உலகப் புத்தகத்தின் அனுபவ ஏடுகள் இப்படி புரட்டுகிறதே. இதற்கெல்லாம் ஆசிரியர் யார்?

விம : எல்லாம் அண்ணுதான்?

குண : அண்ணுவா?

விம : ஆம். முன்பே சொன்னேனே எனக்கு ஒரு அண்ணு இருப்பதாக. எங்கள் குடும்பமே வேடிக்கையானது. என் தந்தை ராமன் ஆண்டாலென்ன? ராவணன் ஆண்டாலென்ன? என்ற எதிர்த்துலகில் சஞ்சரிப்பவர். அண்ணுவோ புதுமையுள்ளம் படைத்தவர். அவர் தங்கை நான்.

(அன்றிரவு வேளையில்)

குண : (படுக்கையில்) கல்யாணி காட்டிலேவா மாட்டிலேவா நான் இங்கே கட்டிலிலே சே......சே......ரோம் நகமும் தீப்பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தானாம். கல்யாணி! கல்யாணி!

(விமலா கனவு காண்கிறாள்—கனவிலே)

புதுப்பெண்ணின் மனதைத் தொட்டுப் போறவரே உங்க எண்ணத்தை சொல்லிவிட்டுப் போங்க இளம் மனசைத் தூண்டிவிட்டுப் போறவரே அந்த மார்பத்தைச் சொல்லிவிட்டுப் போங்க (புது

உம்மை எண்ணியெங்கும் என்னிடத்தில் சொல்லாமல் இருட்டு வேளையிலே யாரும் காணாமலே திருட்டுத்தனமாய் சத்தம் செய்யாமலே சிந்தித்திருந்ததெல்லாம் சிந்தித்துப் பாராமலே (புது

என்ன சுத்தி பறந்தவன்டே சும்மா நீ போகாதே புத்தம் புதுமலரின் தேனைச் சுவைத்துப் போவாயே என்—இன்பக்கனவை பேணு கலைக்கிறாய்? அன்புக் கயிறுதான் அறுக்க யாராலும் ஆகாதையா

(விடிந்ததும்)

விம : குண! நான் இலட்சியவாதி என்று நினைத்துப் போய்விட்டாயா? இலட்சியவாதி என்னுள் காதல் வெறுத்த...