உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
மந்திரி குமாரி/பாடல்/நடனக் காட்சி 6
திரைக்கதை & வசனம்

மந்திரி குமாரி

பாடல்/நடனக் காட்சி 6 · 6 / 15

உயர்வை காட்டுதே!

இதயம் அந்த மலைக்கு ஏது

அன்பைக் காட்டவே

தெளிந்த நீரைப்போன்ற தூய

காதல் கொண்டோம் நாம்!

களங்கம் அதிலும் காணுவாய்

கவனம் வைத்தே பார்!

குதர்க்கம் பேசி என்னை மயக்க

எங்கு கற்றீரோ?

உனது கடைக்கண் பார்வை காட்டும்

பாடம் தன்னிலே!

உலக வாழ்க்கை ஆற்றினிலே

காதலெனும் தோணிதனில் ஊர்ந்துசெல்லுவோம்

கண்ணடிச்சு யாரை நீயும் கண்ணி வைக்கப் பார்க்குறே

கண்ணி வைக்கப் பார்க்குறே என்னையா ஏய்க்கிறே (கண்)

என்னைக் கண்டு ஆசை கொண்டு ஏனோ சும்மா ஏங்குறே