மந்திரி குமாரி
பாடல்/நடனக் காட்சி 5 · 5 / 15
பெண்களினால் உயர்வாகிடுமே
புவி வாழ்வது தானே
வீரர் தம்மை நாட்டினுக்கீந்த
விளங்கும் மேன்மையாலே (பெண்)
கானில் வாழும் தவஞானி
காவியமே புனையும் கவிஞன்—கலை
ஆர்வத்தோடு வாழும் அறிஞன்—தமை
நாட்டினுக்கே அளித்தோர் யாரே? (பெண்)
தீர எண்ணித்துணிந்தே தான்
காதலரை இங்கு தேர்ந்தெடுப்பார்—மகிழ்
வோடு தியாக வாழ்வே வாழ்வார்—எது
நேரிடினும் மனமே மாறார் (பெண்)
உலவும் தென்றல் காற்றினிலே
ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே!
அலைகள் வந்து மோதியே
ஆடியுன்றன் பாட்டுக்கென்றே தாளம்
உயர்ந்த மலையும் உமது அன்பின் [போடுதே.]
