மந்திரி குமாரி
பாடல்/நடனக் காட்சி 14 · 14 / 15
இதனிலும் ஆனந்தம் அடைந்தே இயற்கையில்
கலந்துயிர் விண்ணினைக் காண்பாய் அங்கே வாராய்
அமைதி நிலவுதே சாந்தம் தவழுதே!
அழிவில்லா மோனநிலை சூழுதே!
முடிவில்லா மோன நிலையை நீ—மலை
முடிவில் காணுவாய் வாராய்
ஈடில்லா அழகை சிகரமீதிலே
கண்டு இன்பமே கொள்வோம்!
இன்பமும் அடைந்தே இகம் மறந்தே
வேறுலகம் காணுவாய் அங்கே!
வாராய் நீ வாராய்
புலியெனத் தொடர்ந்தே புதுமான் நீயே வாராய்
உபகாரம் செய்தவர்க்கே அபகாரம் செய்ய எண்ணும்
முழுமோசக்காரன் தானே முடிவிலே நாசமாவான்
அன்னம் இட்ட வீட்டிலே கன்னக்கோல் சாத்தவே
எண்ணங்கொண்ட பாவிகள் மண்ணாய் போக நேருமே
