உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
மந்திரி குமாரி/பாடல்/நடனக் காட்சி 15
திரைக்கதை & வசனம்

மந்திரி குமாரி

பாடல்/நடனக் காட்சி 15 · 15 / 15

வேஷம் கண்டு மயங்கியே வீணாக ஆசைக்கொண்டு

மோசமும் போன பின்னால் மன வேதனையடைவதாலே

லாபமென்ன?

பாலை ஊற்றிப் பாம்பை நாம் வளர்த்தாலும் நம்மையே

கடிக்கத்தான் வந்திடும்—அதை அடிச்சே கொல்ல நேர்ந்திடும்

காதல் பலியாகி நீயும் தியாகத்தின் சின்னமாய்

நாட்டினர் நெஞ்சிலே ஓவியமே ஆகினாய்!

காண்பவர் யாருமே பெண்களின் தீரமே

உணர்ந்திட நீயுமே ஓவியமே ஆகியே!

தீயோன்மேல் காதல் கொண்டே இல்லற வாழ்விலே

தீராத துயரம் கண்டாய் வீண்பழி மேவினாய்!

தேசம் தன்னையே பாதுகாக்கவே

நாதனைக் கொன்றுமே நீதி தனை நாட்டினாய்!

நாட்டுக்கே பாடம் தன்னை போதிக்கும் தியாகச்சின்னம்

நாளும் உன கல்லறை மீதில் நாங்களும் கண்ணீர் சிந்தி

மலர்கள் தூவியே மானசீகமாய்!

அன்பு செய்வதன்றியே கைமாறு வேறில்லையே!