உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
மந்திரி குமாரி/பாடல்/நடனக் காட்சி 12
திரைக்கதை & வசனம்

மந்திரி குமாரி

பாடல்/நடனக் காட்சி 12 · 12 / 15

ஓ......ராசா எந்நாளும் இன்பமாகவே ஒன்றாய் வாழுவீரே!

ஊருக்கு உழைப்பவண்டி

ஒரு குற்றம் அறியானடி

உதைப்பட்டு சாவானடி—எருமைக்கண்ணுக்குட்டி

நல்லதுக்கு காலமில்லே

நடப்பதெல்லாம் வெளிப்பகட்டு

சொல்லப்போனால் வெட்கக்கேடு—எருமைக்கண்ணுக்குட்டி

ஏச்சிப்பொழைக்கிறவன்

ஏழடுக்கு மாளிகையில்

எகத்தாளம் போடுறானே

அவன் பேச்சை மறுக்கிறவன்

பிச்சை எடுக்கிறானே—எருமைக்கண்ணுக்குட்டி

நாட்டுக்குத் தலைவனென்று நம்பும்படி பேசிவிட்டு

வேணசெல்வம் வாரியே போவாரடி

நாடுசெழிக்க யெண்ணி நாளெல்லாம் பாடுபடும்

ஏழைக்கிக்காலமில்லே எவனெவனோ வாழுகின்றார்—