மந்திரி குமாரி
பாடல்/நடனக் காட்சி 11 · 11 / 15
புது—மனமே தருமா மலரே இதுதான் நீயே பார்
மலரே இதுதான் நீயே பார்
ஒரு ஜோடி மாடப்புறா!
இணைபிரியோமே கூரைமீதிலே
பாடுதுபாரே ஆசைகொண்டுதான்!......ஆ......
ஆசைக்கொள்ளாதே ஐயா எந்தன்மேலே
கோவங்கொள்வாங்க இந்தராணி உன்மேலே
மோகம் பொல்லாதே வேறே பெண்மேலே?
ராஜாத்தி பாரிதோ ரோசாப்பூ போலே......
மீசை உள்ள ராஜா கள்ளத்தனமே
கூடாது சாமி வீணே பேராசையாலே
மோசம் செய்யாதே ஆகாதுதானே!
வாலிபம் நில்லாதே எந்நாளும் தானே
தீதெண்ணிடாதே கண்ணான என் வீரா!
ஊரெல்லாம் நீயே சென்றாலும் தானே
அம்மா போலே அழகு எங்கேயேனும் காணவும்
ஆகுமோ சாமி!
