மனோகரா
காப்பக வழிசெலுத்தல் பகுதி 51 · 51 / 57
அரண்மனை.
சிப்பாய் : மகாராஜா! அக்ஷயன் வந்திருக்கிறார். பார்க்க வேண்டுமாம்.
வ. சே : வந்துவிட்டானா?...இங்கே வரச்சொல்.
: வெற்றிச் செய்தியோடு வந்திருப்பான். விஜயாவின் குழந்தையைக் கொன்று விட்டுவந்திருப்பான். அவனுக்காக இந்தப் பரிசு
: உங்கள் தளபதி மிகவும் தந்திரசாலி.
உக்ரசேனன் : அதில் சந்தேகமென்ன? ஓ... வா... அக்ஷயா வா...
: என்ன அக்ஷயா? [உண்மை அட்சயன் வருகிறான்]
சேனா : யார் இவரு அக்ஷயன்?
உக் : ஆமாம்.
சேனா : ஆ! இல்லை.
அட்சயன் ; நான் தான் உண்மையான அக்ஷயன், உங்களை இது வரை ஏமாற்றியது போலி அக்ஷயன் அம்மணி!
: ஆமாம்...மகாராஜா! என்னைக் கட்டிப் போட்டார்கள். இப்போதுதான் தப்பி வந்தேன்.
உக் : கட்டிப் போட்டார்களா? யார்?
அட் ; மனோகரன்!
சேனா ; ஆ! மனோகரன்! அப்படியானால் இங்கு இருக்கிற அக்ஷயன்?
அட் : மனோகரன்!
உக் : எங்கே அவன் இருக்கிறான்......
சேனா : சிறைச்சாலைக்குத் தான் போயிருக்கிறான்.
உக் : விடக்கூடாது.
