உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
மனோகரா/காப்பக வழிசெலுத்தல் பகுதி 52
திரைக்கதை & வசனம்

மனோகரா

காப்பக வழிசெலுத்தல் பகுதி 52 · 52 / 57

சிறைச்சாலை

மனோ : எங்கே! அந்தக் குழந்தையைக் கொஞ்சம் கொடுங்கள்!

: மனோகரனுடைய குழந்தைக்கு நான் ஒரு முத்தம் கூட கொடுக்கக் கூடாதா?

விஜயா : அத்தே... நீ போகிறாயா? இல்லையா? சூழ்ச்சிக்காரா?

மனோ : இல்லை விஜயா என்னைத் தெரியவில்லையா உனக்கு

[தன் பொய்த்தாடியைக் கலைக்கிறான்.] விஜயா என்னைத் தெரியவில்லை. உனக்கு......

சேனா : பிடியுங்கள் இவனை; மனோகரா!... இந்த முறையும் நீ தப்ப முடியாது.

மனோ : பார்ப்போமடி அதை...

[கட்டாரியை சேனமீது வீசக் குறி வைக்கிறான்]

சேனா : ஆ!

பத்மாவதி : மனோகரா!...... (தடுக்கிறாள்)

[மனோகரன் சிலையாகிறான். உக்ரசேனன் கட்டாரி ஒன்றை எறிய அது மனோகரன் கையில் பாய்கிறது.]

மனோ : நாசமாகி விட்டது! எல்லாம் நாசமாகிவிட்டதம்மா!

சேனா : நாசமா?

: அதற்கும் நாள் குறித்திருக்கிறேன் மனோகரா!

: அந்த மகத்தான சம்பவம் நாளைக் காலையில், ராஜ மாளிகையில்! உன் குழந்தைக்கு மரணாபிஷேகம்!!

விஜயா : அத்தே!... அத்தே!...

பத் : விஜயா!

மனோ : அம்மா, அப்பா சிறையிலே பூட்டப்பட்டு விட்டார். உங்கள் ஆணையை மீறமுடியாத நான் இந்தப் பாதகியின்

உத்திரவுக்குப் பணிந்தேன். இந்தப் பாவியின் கரங்களால் பாதாள சிறையில் பூட்டினேன்.

சேனா : இழுத்துச் செல்லுங்கள்.

மனோ : அம்மா... உண்மையை உணர்ந்துகொண்ட தந்தை உங்களையும் என்னையும் காணத் துடிக்கிறார். இறந்து போன கொடுமைகளை எண்ணி எண்ணி கண்ணீர் வடிக்கிறார். கலங்கித் தவிக்கிறார்... கலங்கித் தவிக்கிறார் அம்மா...அம்மா...அம்மா...

பத்மாவதி : மகாராஜா உண்மையை உணர்ந்து கொண்டார்! என் மகுடபதி உண்மையை உணர்ந்து கொண்டார். உண்மையை உணர்ந்து கொண்டார்.

விஜயா : அத்தே!... என்ன அத்தே!

பத் : இருள் நீங்கிவிட்டது. இன்பம் உதயமாகிறது.

விஜ : இன்பம்...! நமக்கா?... இந்த நிலையிலா?

பத் : மகாராஜா உணர்ந்துவிட்டார் என் மகுடபதி உண்மையை உணர்ந்துவிட்டார்.