மனோகரா
காப்பக வழிசெலுத்தல் பகுதி 46 · 46 / 57
[பூஜை அறை]
வ. சே. : திராட்சை எப்படி இருக்கிறது?
உக் : உன் விரல்பட்ட இடமெல்லாம் இனிக்கிறது.
சேனா : என் இதழின் சுவையைவிட மட்டந்தானே இந்தக் கொய்யா?
உக் : அதில் என்ன பொய்யா?
சேனா : அன்பா எத்தனை நாட்களாகின்றன இந்த ஆனந்தம் அனுபவித்து?
உக் : மீண்டும் உன்னைப் பார்க்கப் போகிறேன் என்று ஏங்கி தவித்தேன் ஏந்திழையே!
சேனா : சுவாமி!
உக் : வசந்தி!
சேனா : பிரபோ! இப்போது நாம் எங்கிருக்கிறோம்?
உக் : சொர்க்கலோகத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறோம், கண்ணே!
