உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
மனோகரா/காப்பக வழிசெலுத்தல் பகுதி 45
திரைக்கதை & வசனம்

மனோகரா

காப்பக வழிசெலுத்தல் பகுதி 45 · 45 / 57

[சிறைச்சாலையின் தாழ்வாரம்]

காவலன் : ஏ அந்தப் பக்கம் போகாதே... விஜயாம்மா... பிரசவ வேதனைப் படுறாங்க...

ஆள்......அப்படியா......

(சிறைக்குள்ளே)

பத்மா : (குழந்தையிடம் குனிந்தபடி) என் செல்வத்துட் செல்வமே! தாதியர் ஆயிரம் பேர் தமிழிசை கேட்டு வைரமணித்தொட்டிலிலே உறங்கவேண்டிய நீ இப்படி வைக்கோல் நிறம்பிய கொட்டிலிலே உருண்டு கொண்டிருப்பாய் என்று நினைக்கக்கூட இல்லையே...

விஜயா : அத்தே!......

பத்மா : கண்ணே... பாண்டிய ராஜன் பெண்ணே...... நீ இப்படி கஷ்டப்படவா என் மருமகளாக வந்தாய்......

விஜயா : நான் வந்த பிறகுதான் அத்தை - உங்களுக்கும் உங்கள் அன்பு மகனுக்கும் இத்தனை வேதனைகள்...... எல்லாம் இந்தப் பாவி அடியெடுத்து வைத்த பிறகு தான்........

பத் : விஜயா!... இல்லையம்மா... உன் மலரடி பட்டால் மண்ணும் பொன்னாகும்... பொன் மாடத்தை தூசி மேடாக்கியவள் நீயல்ல... அவள் வாழ்கிறாள் ஆனந்தத்தோடு......