மனோகரா
காப்பக வழிசெலுத்தல் பகுதி 47 · 47 / 57
[பூஜை அறையின் ஜன்னலுக்கு வெளியே]
வசந்தன் : வைத்தியா! வைத்தியா! வைத்தியா!
மனோ : என்ன?
வச : அம்மாவும், சாமியாரும் சொர்க்கலோகத்துக்குப் போய்க்கொண்டிருக்காங்க! வா! வா! போய அம்மாவைக் காப்பாற்றுவோம்.
மனோ : நீ போய் உடனே மகாராஜாவை அழைத்துக் கொண்டுவா!
வச : ஆ! அதுதான் சரி... சந்தேகமில்லே! சந்தேகமில்லே.
* * *
[அரசர் அறை]
வசந்தன் : அப்பா! அப்பா!
அர : என்னடா இது?
வச : அம்மாவும், சாமியாரும் சொர்க்கலோகத்துக்குப் போகிறாங்களாம்!
அர : ஆ.........!
வச : வாப்பா......வா......
