மனோகரா
காப்பக வழிசெலுத்தல் பகுதி 35 · 35 / 57
பத்மாவதியின் அறை.
மனோ : மாதா சிறை செல்ல வேண்டும்... மனோகரன் மன்னிப்புக் கேட்கவேண்டும்!
ராஜப்பிரியன் : அதுவும் கொலு மண்டபத்தில்; அந்தக் குப்பை மேட்டுக் கோட்டானிடம்!
மனோ : ஆணையிடுவது தந்தை!
பத் : ஆமாம் கண்ணே! அதை மறந்துவிடாதே, உன்னைப் பெற்ற தந்தை.
ராஜப் : தந்தை...அஞ்சா நெஞ்சனை மகனாகப் பெற்றார்... அருங்குணவதியை மனைவியாகப் பெற்றார்... அவர் பெற மறந்தது ஒன்றுண்டு, தாயே! அறிவு! அறிவு! அதைத் தான் பெற மறந்தார்!
மனோ : மறந்ததை நினைவூட்டுகிறேன்...
பத் : உன்னால் முடியாது என்று சொல்கிறேன் தங்கமே! அவசரத்தில் அப்பா தவறியிருக்கலாம்...எதற்கும் நீ போய் காரணம் கேள்!
மனோ : காரணம் கேட்பதா?
விஜயா : அத்தே...வேண்டாம்... அவரை அனுப்பாதீர்கள்...வேண்டாம் அத்தே...அனுப்பாதீர்கள்...வேண்டாம் அத்தே...அதுதான் நீங்கள் போக வேண்டாம்...
பத் : வீரமகனே...போய்வா...
விஜ : வேண்டாம் அத்தே!
பத் : விஜயா!
மனோ : போய் வருகிறேன் [பத்மாவதியைக் கைது செய்ய வந்திருக்கும் சிப்பாய்களை நோக்கி] ஜாக்ரதை! நான் திரும்பும் வரையில் நெருங்கக்கூடாது, என் அன்னையிடம்...
[விஜயாவை நோக்கி]
விஜயா! பார்த்துக்கொள்...வருகிறேன்
