உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
மனோகரா/காப்பக வழிசெலுத்தல் பகுதி 34
திரைக்கதை & வசனம்

மனோகரா

காப்பக வழிசெலுத்தல் பகுதி 34 · 34 / 57

பத்மாவதியின் அறை.

பத்மாவதி : அமைச்சரே! மகாராஜாவையே கேளுங்கள், என்ன சொல்கிறாரென்று!

சத்யசீலா : மகாராஜா இதையெல்லாம் கவனிக்கவே மாட்டார்—

பத் : மனோகரனை நினைத்தால் எனக்கு பயமாயிருக்கிறது.

சத் : பயப்படத்தேவையில்லை-நான் பார்த்துக்கொள்கிறேன்.

[அரசனும், வசந்த சேனையும் ஒளிந்திருந்து, கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்]

வ. சே : மகாராஜா கவனிக்கமாட்டார்... மனோகரனுக்கு பயப்படத் தேவையில்லை

(அரசர் பத்மாமீது சந்தேகம்கொண்டு திரும்புகிறார்)

[தனியிடத்தில்]

அரசர் : (நிலவைப் பார்த்தபடி) களங்கம்...களங்கம்! என் பரம்பரையிலேயே இல்லாத களங்கம்! பாதகி!

[பக்கத்திலிருந்த பத்மாவதியின் சிலையை உடைத்தெறிகிறார்.]

வ. சே : ப்ரபு! அமைதியாக இருங்கள்...

அர : அமைதி! அவளுடைய சாவிலேதான் எனக்கு அமைதி!

வ. சே : இதைக் கேளுங்கள் மகாராஜா! மகாராணி......

அர : மகாராணி......மறுபடியும் சொல்லாதே! மானமிழந்தவள்! நாடோடி...வேசி! வசந்தி! நீயே உத்திரவிடு! அவளைப் பாதாள சிறையில் போடவேண்டும்.

வ. சே : ராணியைச் சிறையில் போடுவதால் உங்கள் ஆத்திரம் அடங்கும். வசந்த விழாவில் தாயைக் குறை கூறினேன் என்று தாண்டி விழுந்தானே, மனோகரன்! இப்போது என்ன சொல்கிறான்? மன்னிப்பு கேட்டுக்கொள்வானா என்னிடம்...

அர : கேட்கச் சொல்லுகிறேன்... உன்னை எதிர்த்துப் பேசியதற்கு கொலு மண்டபத்திலேயே மன்னிப்பு கேட்கச் சொல்லுகிறேன். பத்மாவதிக்குச் சிறைச் சாலை! மனோகரன் வசந்த சேனையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்......