மனோகரா
காப்பக வழிசெலுத்தல் பகுதி 20 · 20 / 57
[வசந்தசேனை அந்தப்புரம்]
[பெளத்தாயனன் மனோகரனின் போர் வாளுடன் பிரவேசிக்கிறான்.]
வசந்தா : பெளத்தாயன...
பெளத்தாயன : கொண்டு வந்தேன், போர்வாளை!
வசந்தா : சபாஷ்!...
பெளத் : அம்மணி!... வெற்றி கண்ட மனோகரன்... விஜயாளை விவாகம் வேறு செய்து கொண்டான்...
வசந் : அப்படியானால்...
பெளத் : கேளுங்கள் - நீச்சல் விளையாட்டு நடத்தினார்கள் விஜயாளை விதவையாக்கிவிட்டு, வாளோடு வந்து விட்டேன்.
வசந்தா : மனோகரன் இறந்துவிட்டானா?...
பெளத் : நிச்சயமாக!... அம்மணி! பரிசுத் தொகை!
வசந் : இதோ!...
[பொன் மூட்டையை அவனிடம் கொடுக்கிறாள்.]
பெளத்தாயனரே!... இன்னொரு காரியம்... ஒரே குறியில் இரண்டு வேட்டை!
பத்மாவதியிடம் இந்த செய்தியைச் சொன்னால் நெஞ்சு வெடித்து செத்துவிடுவாள்... பிறகு... நான் தான் ராணி!... நீர்தான் பிரதம மந்திரி!...
பெளத் : பிரதம மந்திரியா?... அப்ப எது வேண்டுமானாலும் செய்கிறேன்...
