உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
மனோகரா/காப்பக வழிசெலுத்தல் பகுதி 2
திரைக்கதை & வசனம்

மனோகரா

காப்பக வழிசெலுத்தல் பகுதி 2 · 2 / 57

வசந்த சேனையின் சிரிப்புடன் அரண்மனையில் காட்சி ஆரம்பமாகிறது.

வசந்தசேனை : பைத்தியக்காரி! இப்போது நினைத்தாலும் நான் பட்டமகிஷி ஆக முடியுமடி!......

தோழி : அதுதாம்மா எனக்கும் ஆசை. ஆனால் மகாராணியும், இளவரசரும் உயிரோடு இருக்கும்போது ...

வச : மகாராணி-இளவரசர்...இரண்டும் உயிர்ப்பிணங்கள் நான் சிரித்தால் போதும், சிம்மாசனமே கிடைக்கும். மயக்குகின்ற ஒரு பார்வை - இந்த மண்டலமே என் காலடியில்! மகாராஜாவின் பிரேமை ராணியடி நான்! நினைத்தால் போதும் - வசந்த சேனை ராணி! அவள் மகன் வசந்தன் இளவரசன்!