மனோகரா
காப்பக வழிசெலுத்தல் பகுதி 14 · 14 / 57
(விஜயாவின் அந்தப்புரம்.)
அமைச்சர் : அஸ்தமித்து விட்டதம்மா!
விஜயா : ஆ!
அமை : வேந்தர் வெற்றிப் புன்னகையோடு வீர மரணத்தை அணைத்துக் கொண்டார்.
விஜ : அப்பா!......
அமை : அமைதியாக இருங்கள்...
விஜ : அமைதியா? தந்தை பிணமானார்...கொடி சாய்ந்தது...முடி வீழ்ந்தது... வெற்றிசபதம்! இன்றைக்கே முடிவு கட்டுகிறேன்! இன்றிரவே!
