மனோகரா
காப்பக வழிசெலுத்தல் பகுதி 12 · 12 / 57
மாளிகையை அடுத்த நந்தவனம், இரவு நேரம்......
வசந்த சேனை, தனியாக மறைந்து மறைந்து யாரையோ எதிர் பார்க்கிறாள்......
வசந்த சேனையின் தோழி வருகிறாள்.
வசந்தா : எங்கேயடி பெளத்தாயனார்?
[ஈனக் குரலில்]......
தோழி : மெதுவாக இதோ... [மெதுவாக]......
தோழி சுட்டிக் காட்டவே—பெளத்தாயனன் வந்துகொண்டிருக்கிறான்...
வசந்தா : சரி...நீ போ ;...
வசந்தா : பெளத்தாயனரே...இரவே புறப்படுகிறீரா......
பெளத்தாயன் : ஆமாம்...ஏன்?...
வசந்தா : தந்திரமாக நடந்து கொள்ளும்......
பெளத்தாயன் : அவனை திரும்பாமல் செய்துவிடுகிறேன், நீங்கள் கவலையை விடுங்கள்.
வசந்தா : அவன் தலை என் காலடியில் கிடக்கவேண்டும்.
பெளத்தாயன் : ஊஹூம்...தலையைக் கொண்டுவந்தால் நமக்கு ஆபத்து. அவனை யுத்த களத்திலேயே கொன்று அவனுடைய போர்வாளை உங்களிடம் காட்டுகிறேன்.
வசந்தா : ஆமாம்—பழியை பகைவர்கள்மீது போட்டுவிட வேண்டும். மனோகரனின் சாவு மர்மமாகவே இருந்து விடும்—
பெளத்தாயன் : ஓ!
வசந்தா : உமக்கு ஆயிரம் பொன் பரிசு!......
பெளத்தாயன் : அம்மணி, நான் போர் வாளைக் கொண்டு வருவேன், நீங்கள் பொன் மூட்டையை......
வசந்தா : பூரிப்பான செய்தி—கொண்டுவரும்—பொன் என்ன, வைரங்களை அள்ளித் தருகிறேன்.
பெளத்தாயன் : சரியம்மா...
வசந்தா : ஜாக்கிரதை......
