பொருட்பால் · அரசியல் · ஒற்றாடல்
குறள் 582
திருவள்ளுவர் இயற்றிய குறள்
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்வல்லறிதல் வேந்தன் தொழில்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்வல்லறிதல் வேந்தன் தொழில்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நண்பர், பகைவர், நடுநிலையாளர் ஆகிய எல்லாரிடத்திலும் நிகழும் எல்லா நிகழ்வுகளையும், எல்லாக் காலங்களிலும் ஒற்றரைக் கொண்டு விரைவாக அறிந்து கொள்வது அரசுக்குரிய கடமையாகும்.