பொருட்பால் · குடியியல் · நல்குரவு
குறள் 1046
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்சொற்பொருள் சோர்வு படும்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்சொற்பொருள் சோர்வு படும்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அரிய பல நூல்களின் கருத்துக்களையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும், அதனைச் சொல்பவர் வறியவராக இருப்பின் அக்கருத்து எடுபடாமற் போகும்.