உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கலைவாணர்/பகுதி 2
சொற்பொழிவுகள்

கலைவாணர்

பகுதி 2 · 2 / 2

நமது கொள்கைகளைப் பரப்பப் பாடுபட்டோர், பணியாற்றியோர் அனைவரையும் கௌரவிக்கும் செயலை அண்ணாவின் வாரிசுகள் நிச்சயம் செய்து காட்டுவார்கள் என்பதற்கு ஓர் எடுத்துக் காட்டுத்தான் இந்த நிகழ்ச்சி!

கலைவாணரும், உடுமலை நாராயணக் கவியும் இணைந்து தமிழுக்கத்தில் ஒரு கருத்துப் புரட்சியை உண்டாக்கினார்கள்.

அந்தக் காலத்து உத்தமபுத்திரன் படத்தில் கலைவாணர் அய்யராக வருவார். அவர் காதலிப்பதோ - பூங்காட்டுச் சுமக்கும் ஆதிதிராவிடப் பெண்ணை! அதனால் பல கதாறாக்கள் ஏற்பட்டுக் கடைசியில் அந்தப் பெண்ணையே உயர்ஜாதிக்காரனுக்குக் கட்டி வைக்கும் சூழ்நிலையை ஏற்படுத்திக் காட்டுவார் அந்தப் படத்தில்!

இன்றைக்குச் சமூக சீர்திருத்தம் எளிதாகப் பேசி விடலாம்; ஆனால் அன்றைக்கு இதற்காகக் காட்சிகளைத் துணிந்து இணைத்தவர் கலைவாணர்!

அவரது அருமையான நகைச்சுவைக்கு இன்னொரு எடுத்துக்காட்டு.

தந்தை வெளியூர்! மகளோ அறையில்! அவளை அடைய நினைக்கும் வாலிபன் (கலைவாணர்) இடையில்!

“உள்ளே போய் உங்கள் மகளிடம் மாங்கனி பெற்றுக் கொள்கிறேன்” என்பார் கலைவாணர்.

“சரி” - என்று தந்தை கூறிவிட்டு - உள்ளே இருக்கும் மகளிடம் “இந்தாம்மா, இவன் வருவான், ஒண்ணு கொடுத்திடு!” என்பார்.

கலைவாணர் உள்ளே சென்று அந்தப் பெண்ணிடம் ஒரு முத்தம் கேட்பார்! அவள் மறுப்பாள்!

உடனே கலைவாணர் வெளியே எட்டிப் பார்த்து, “கொடுக்க மாட்டேன்னு என்கிறாள்; உங்கள் மகள்!” என்பார்.

தந்தையோ “ஒண்ணு குடும்மா!” என்பார் - கலைவாணர் முத்தம் பெற்றுக் கொள்வார்.

எப்படிப்பட்ட நகைச்சுவை? இப்படிப்பட்ட நகைச்சுவை கலைவாணர் ஒருவரின் சிந்தனையில்தான் வரும்!

எப்பேர்ப்பட்ட புராணப் படத்தில் அவர் நடித்தாலும் - படம் பார்த்துவிட்டு வெளியே வருவோர் பக்தர்களாக வரமாட்டார்கள், பகுத்தறிவாளர்களாக வருவார்கள்! அந்த அளவுக்குக் கலைவாணரின் கருத்துக்கள் இருக்கும்!

‘பூம்பாவை’ படத்தில் நடிப்பிசைப் புலவர் திருஞான சம்பந்தராக வருவார். திருஞானசம்பந்தர் ஐந்து வயதிலேயே பாட்டுப் பாடினார் என்பது கதை!

ஐந்து வயதுப் பாலகன் எப்படி பாட முடியும் - என்று சிந்தித்துத் தடு எடுக்க நினைத்த கலைவாணர் அந்தப் படத்திலேயே ‘ஐந்து வயது பாலகன் பாடினான் பாட்டு, எனப் போடுகிறாயே ஒரு வேட்டு’ என்று பாடுவார்.

உடுமலை நாராயணகவி அவர்களால் இயற்றப்பட்ட “மெய் கண்டானை மக்கள் மேன்மை கண்டான் தனை மேதினி போற்றுமடா!” என்னும் பகுத்தறிவுப் பாடல் அன்றைய தினம் மேடைகளில் ஒலித்தது.

இன்றைக்கு அவர் எழுபது வயதை அடைந்து இருந்தாலும் 18 வயது வாலிபரைப் போல காதற் பாடல்களை இயற்றுவார்.

தமது இளம் (?) மனைவியுடன் வருடந்தோறும் குற்றாலம் சென்று உல்லாசம் அனுபவிப்பார் உடுமலைக் கவிராயர்.

அத்தகைய பெரியவருக்குப் பொற்கிழி தந்திருக்கிறோம். அது சாதாரணமானதுதான் என்றாலும் அதை பெரிதாகக் கருதக்கூடிய பெருந்தன்மை மிக்கவர் அவர்!

கலைவாணருக்குச் சிலை அமைத்தோம். அவரோடு பணியாற்றிய உடுமலை நாராயணக் கவிக்குப் பொற்கிழி அளித்தோம்!

அத்தோடு - இந்தச் சிறுவர் அரங்கத்தில் எவ்வளவு பெரிய நிகழ்ச்சிகள் நடந்தாலும் - எவ்வளவு பெரியவர்கள் கலந்து கொண்டாலும் - சிறுவர் அரங்கில் நடைபெறும் விழா என்றே குறிப்பிடப்படுகிறது.

ஆகவே இந்த அரங்கம் கலைவாணர் அரங்கம் என்று நாளை முதல் அழைக்கப்படும்.

1972-ஆம் ஆண்டு செப்டம்பர் 4-ஆம் நாள் சென்னை சிறுவர் அரங்கத்துக்குக் கலைவாணர் அரங்கம் என்று பெயர் சூட்டிக் கலைவாணர் விழாவில் பேசியது.

முதற் பதிப்பு : மே 2000