உதயக் கதிர்
தலைப்பு 29 · 29 / 29
தனித் தனிச் சின்னங்கள் இருக்கின்றன. மைய அரசுக்கென்று தனிக்கொடி - தேசியக் கொடி, தனிச்சின்னம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். இதோ இருக்கிற கொடிகள், இங்கே அடித்தது அல்ல, மலேசியாவில் அடித்தது.
ராஜாஜிக்கு வேண்டுகோள்!
சீமைச்சாமி அவர்கள் கூட கோபமாக, இனிமேல் நீங்கள் இந்திரா காந்தியை ஆதரித்தால் நாங்கள் உங்களோடு இருக்க மாட்டோம் என்று சொல்லி விட்டார்கள். திரு ராஜாஜியிடம் அனுமதி வாங்கித்தான் சொன்னேன் என்று கூறியிருக்கிறார்கள். திரு. ராஜாஜி கூட குறிப்பிட்டிருக்கிறார். நான் மிகுந்த பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன். சீமைச்சாமி அவர்களே! சுதந்திராக் கட்சியின் தலைவர் என்ற முறையில், இங்கே இருக்கும் தலைவர் என்ற முறையில், அவர்களையும், மூத்த தலைவர் திரு.
ராஜாஜி அவர்களையும் கேட்டுக் கொள்கிறேன். 200 பேர் ராஜாக்கள். அந்த ராஜாக்களுக்கு மானியம் கொடுக்க வேண்டுமென்று மட்டும் சொன்ன குற்றத்திற்காக திரு. மு. க.வுடன் சேர மாட்டோம் என்று சொல்லி விட்டு, சிண்டிகேட்டுடன் சேரும் ராஜாஜி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். 4½ கோடி தமிழ் மக்களின் வாழ்வை, மொழியை, உரிமையை, அவர்களின் வளத்தை, அவர்களின் எதிர்காலத்தை, நாட்டை அழிக்கும் இந்த அதிகாரத்திற்கு ஓட்டுப் போட்ட சிண்டிகேட்டோடு சேர ராஜாஜி அவர்கள் முன்வருவார்களா?
200 ராஜாக்களுக்கு மானியம் வேண்டாமென்று நாங்களும், இடது சாரிக்கட்சிகளும் அங்கிருக்கும் இந்திரா காந்தி அம்மையாரை ஆதரித்தது சரியா தவறு என்று சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன். ராஜாஜி அவர்கள் இதைப் பற்றி ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
திரும்பப் பெறுவீர்!
நம்முடைய கருத்திருமன் அவர்கள் கொண்டு வந்திருக்கும் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் உள்ளபடியே இந்தச் சபையில் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. அவரே கூட ஒருவேளை நல்ல மனம் வைத்து, இவ்வளவு விளக்கத்திற்குப் பிறகு, இவ்வளவு சாதனைகளைக் கேட்ட
பிறகு, அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டாலும் கொள்ளலாம் என்று கருதுகிறேன்.
போலீஸ் துறையைப் பற்றி இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியினரும், மற்ற இடதுசாரிக் கூட்டணியிலேயுள்ளவர்களும் பேசினார்கள். அவர்களும், திரு. பூவராகன் போன்றவர்கள் எடுத்துச் சொன்ன கருத்துக்களும் ஆராயப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆகவே, திரு. சங்கரய்யா அவர்களையும், கண்டனத் தீர்மானத்தைத் திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
---
