உதயக் கதிர்
தலைப்பு 28 · 28 / 29
இதேபோன்று பரலி நெல்லையப்பர் அவர்களுக்கும் உதவித் தொகை வழங்கி வருகிறோம். அது மட்டுமல்ல கட்ட பொம்மன் சிலையைத் திறந்து வைத்ததான் அவர்கள் பொறுப்பிலே தவிர, முதலமைச்சராக இருந்தபொழுது கட்டபொம்மன் இருந்தானும் கெட்டான் போ என்று சொல்லி விட்டார்கள்.
இப்பொழுது கட்டபொம்மன் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழக அரசு உதவிப் பணம் கொடுத்து வருகிறது.
இவையெல்லாம் சாதனையல்லவா?
என்ன சாதித்து விட்டார்கள், என்ன சாதித்து விட்டார்கள் என்று கேட்டார்கள். சேலம் இரும்பாலைத் திட்டத்தைப் பெற்றது சாதனையல்லவா? அது காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலே திட்டமிடப்பட்டிருக்கலாம். அதற்காக திரு. வெங்கட்டராமன், நிதியமைச்சராக இருந்த திரு. சுப்பிரமணியம் ஆகியவர்களுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். திரு. காமராஜ் அவர்கள் ஒத்துழைத்ததற்காக நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் வராமலிருந்த அந்தத் திட்டத்தை வரக்கூடிய அளவிற்குச் செய்த பெருமை எங்களுடையதுதானே.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகமாக இருந்தது, ஆழ்கடல் துறைமுகமாக மாற்றப்பட்டது. எங்கள் காலத்தில் தானே, முன்னேற்றக் கழகமும், தோழமைக் கட்சிகளும் எழுச்சிநாள் போராட்டம் நடத்தி, பிறகு தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் அல்ல அது, உரத் தொழிற்சாலை ஏற்படவில்லையா? கல்பாக்கத்தில் இரண்டாவது கட்டமாக 200 மெகாவாட் அதிகமாகப் பெறவில்லையா?
இப்பொழுது உணவு அமைச்சரவர்கள் ஒரு தகவலைத் தருகிறார்கள். நீண்ட காலமாக கேட்டு வந்த, அலமாதி என்ற இடத்தில் முர்ரா எருமைப் பண்ணை அமைக்க வேண்டுமென்று கேட்டு வந்து, அதற்கு இப்பொழுது மத்திய சர்க்காரின் ஒப்புதல் கொடுக்கப்பட்டிருக்கிறது. 4 ஆண்டுகளுக்கு 82.91 இலட்சத்திற்கு மத்திய சர்க்காரும் ஒப்புதல் கொடுத்திருக்கிறது. இதை
யும் முன்னேற்றக் கழகத்தின் சாதனை என்று நீங்கள் ஒப்புக் கொள்ள மாட்டீர்களா?
சற்றே விலகியிரும் பிள்ளாய்
ஆகவே, இவைகளெல்லாம் நாங்கள் முழுத் திருப்தி அடைந்து விட்டோமா என்றால் இல்லை. இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் ஏராளம் இருக்கின்றன. ஆனால் அவைகளுக்கு, இருக்கின்ற அதிகாரங்கள் போதாது என்பதுதான் எங்களுடைய வாதமும், தமிழரசுக் கழகத்தலைவர் சிலம்புச் செல்வர் திரு. ம.பொ.சி. அவர்களின் வாதமும் ஆகும். அதிகாரங்கள் வேண்டுமென்று கேட்டால் கூடாது, கூடாது என்று சொல்கிறீர்களே ஏன்? வறட்சி நிவாரணத்திற்காகப் பணம் கொடுக்காதே, கொடுக்காதே என்று சொல்கிறீர்களே ஏன்?
அதிகாரங்கள் கொடு என்று கேட்டால் கொடுக்காதே கொடுக்காதே என்று ஏன் இந்த சுக்கிராச்சாரியார் வேலை செய்கிறீர்கள்? சுக்கிராச்சாரியார் தாரை வார்க்கும் பொழுது கெண்டியில் அடைத்துக் கொண்டு, தர்ப்பையினால் குத்தி என்ன ஆனார்? உதாரணத்திற்காகப் புராணக் கதையைச் சொல்லுகிறேன். உதாரணங்கள் எங்களுக்கும் கை வந்த கலை. ஆகவே ஏன் இப்படி இடையிலே நின்று கொடுக்காதே கொடுக்காதே என்று சொல்ல வேண்டும். வழி மறைத்திருக்கிறது, சற்றே விலகியிரும் பிள்ளாய்.
அதிகாரம் வேண்டுமென்று கேட்டிருக்கிறோம் என்றால் அது உங்களுக்கும் சேர்த்துத்தான், வருங்கால சந்ததியினருக்கும் சேர்த்துத்தான்; 4½ கோடி தமிழக மக்களுக்கும் சேர்த்துத்தான் கேட்டிருக்கிறோம். தனிக்கொடி கேட்டதைப் பற்றிக் கூறுகிறார்கள். மலேயாவிலிருந்து இவைகளெல்லாம் வந்திருக்கின்றன. பாருங்கள். தமிழகத்தைவிட குறைவான மக்கள் கொண்டது மலேசியா. அந்த மலேசியாவிலிருந்து வந்த கடிதத்திலே, தமிழகத்தைவிட சற்று கூடுதலான நிலப்பரப்பையும், தமிழகத்தின் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியை மட்டுமே மக்கள் தொகையாகக் கொண்ட - சின்னஞ்சிறிய நாடாகிய எங்கள் மலேசிய நாட்டில் பதிமூன்று மாநிலங்கள் இருக்கின்றன.
ஒவ்வொரு மாநிலமும் சற்றேறக்குறைய தமிழகத்திலுள்ள ஒரு மாவட்ட அளவுக்கு சின்னஞ்சிறியதாக இருக்கும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி முதலமைச்சர்கள், அமைச்சர்கள் இருக்கிறார்கள். தனித்தனி சட்டமன்றங்கள், தனித்தனிக் கொடிகள்,
