உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

குணநாயகர் நேரு

பகுதி 1 · 1 / 7

முன்னை இருள் விலக்குதற்கு

முயல்கின்ற தமிழ் அரசு

முதுபெரியோன் காந்தியாரின்

முத்த பிள்ளை நேருவுக்கு...

முத்தமிழால் கவி தொடுக்கும்,

புவியரங்கில் புகழ்குவித்த பண்டிதர்க்குக்

கவியரங்கில் மாலை சூட்டும்...

பூத்திருக்கும் தோட்டத்தில் புகுந்துவிட்ட என்னுக்குக்

காத்திருந்த காட்சியொன்றைக் கவியாக்கித் தருகின்றேன்,

சிரிக்கின்ற மல்லிகையின் காதுகளில் செண்பகந்தான்

ஏதோ சேதி தனைக் சொல்ல;

சேர்ந்திருவர் சாமந்தியிடம் ஓடி...

அவள் செவியில் வாய் வைத்தார்...

பின்னர்

மூவருமே முல்லையிடம் முனகிவிட்டு

அவளோடு

நால்வருமே நந்தவனம் முழுவதும்

நடைபோடத் தொடங்கி விட்டார்

யாரைத்தான் தேடுகின்றார் பூப்பெண்கள்?

கட்டுதற்கு

நாரைத்தான் தேடியலைகின்றாரோ-என எண்ணி

நான் வியந்தேன் ...

தென்றலிலே மணம் பரப்பித் தேடுகின்றார்

தேடுகின்றார்