உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

அண்ணா கவியரங்கம்

பகுதி 16 · 16 / 16

பெற—ரகுமான்

தலை நிமிர்ந்து பாடவந்தார்—

தளையறுத்த ஏறு போலத்

தமிழ்ச் சொல்லால் ஆடவந்தார்—

ஆளவந்தார் அண்ணாவை

கூளம் குப்பை ஏதும் செய்தல் முடியாதென்று

கூறுகின்ற சிம்மம் போல்; வந்து விட்டார்;

வீறு புகழ் கொண்ட கவி—கனிச்

சாறு நிகர் தமிழ் தரவே—இந்த

அரங்கேறப் போகின்றார்—

என் நண்பர் ரகுமான்—ஆமாம்

அப்துல் ரகுமான்—

முதலமைச்சர் அண்ணா அப்துல் ரகுமான் பாடுதல்.

மு. க.

தலைவரென்றார், தத்துவ மேதை யென்றார்,

நடிகர் என்றார், நாடக வேந்தர் என்றார்

சொல்லாற்றச் சுவை மிக்க எழுத்தாற்றல்

பெற்றார் என்றார்;

மனிதர் என்றார்; மாணிக்க மென்றார்

மாநிலத்து அமைச்சரென்றார்—

அன்னையென்றார் அருமொழிக் காவல் என்றார்

அரசியல் வாதி என்றார்—அத்தனையும் தனித்

தனியே சொல்வதற்கு

நேரமற்றோர்; நெஞ்சத்து அன்பாலே

அண்ணா என்று ஒரு சொல்லால்

அழைக்கட்டும் என்றே—அவர் அன்னை

பெயரும் தந்தார்—வாழ்க அண்ணா! வாழ்க நன்றே!