உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

அண்ணா கவியரங்கம்

பகுதி 1 · 1 / 16

காவிரியப் பூவிரியும்

காவிரியும்

தாவி எடுத்துக் கார் குழலில்

ஒரு கைவை! வைகை!

தாவி எடுத்துக் கார் குழலில் ஒரு கைவக்கும்

காவிரியப் பூவிரியும்

தாவி எடுத்துக் கார் குழலின்

ஒரு கை வைக்கும்

ஓவியத்துப் புதுப்பாவை தமிழ்ப் பெண்ணைத்

(பெண்ணையாறு)

தாயாக்கிப் பாலாறு பருகுகின்ற

சீராரும் தென்நிலமே—

போரார்வப் பெருங்குன்றே

நீராளும் பொறுப்புடனே

காராளும் பொறுப்பு மேற்று—இன்று

பேரார்வக் கலைத் தொழிலைப் பிரிந்து நிற்கும்

அடியேன் என் வணக்கம் ஏற்பீர்...

இமிழ்கடல் வேலித் தமிழகம் ஈன்ற

என்னுயிர் அண்ணன் அன்னையர் தந்தையர்

பொன்னொளிச் சோதரர் புகழ்மிகு பாவலர்

கண்மணித் தமிழின் காவலர் யாவரும்

இன்றைத் திருநாள் ஏற்பீர்; வணக்கம்.

புவிவாழ்வின் உச்சியிலே

புதுமைதனைப் பொறித்திடுவோம்

என்று சிலிர்த்துப் பொங்கி எழுந்த

தமிழகம் தந்த விடுதலை மறவர்