உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
ஒரே முத்தம்/காட்சிகள் (30 + நகைச் சுவைப் பகுதி 3) 27
நாடகங்கள்

ஒரே முத்தம்

காட்சிகள் (30 + நகைச் சுவைப் பகுதி 3) 27 · 27 / 33

அநியாயக்காரா? அரைக்கணங்கூட உங்களுடைய அக்கிரம உடல்கள் இந்த உலகத்தில் இருக்கக்கூடாது. சுட்டுச் சாம்பலாக்க வேண்டும்.

அந்தச் சாம்பலைக்கூடக் கடலில் கரைத்துவிட வேண்டும் மகாராஜா!

மகாராஜா!

மந்திரியாரே! மூவருக்கும் தூக்கு. இதுவே தீர்ப்பு.

(அரசன் சென்று விடுதல்)

(ஆவலோடு இளவரசரைக் கட்டிப்பிடித்து) இளவரசே!

என்ன இளவரசே!..... உம். இழுத்து வாருங்கள்.

(மிடுக்காகச் செல்கிறான், சபை கலைகிறது)

(மகாராஜா மாடியில். மக்கள் தெருவில்)

தீர்ப்பு தெரியுமா?

என்ன? என்ன?

இளவரசருக்குத் தூக்குத் தண்டனை.

ஆ!......

(இருவரும் ஓடுகிறார்கள்)

(இரு பெண்கள்)

இளைய ராஜாவுக்குத் தூக்கா? அட அநியாயமே!

அநியாயமா? அனர்த்த காலம் வந்துட்டுது......

(ஓடுகிறார்கள்)

(வயலிலிருந்து கலப்பை சுமந்துகொண்டு வருபவன் "இளவரசருக்குத் தூக்கு" என்ற ஒலி கேட்டு, கலப்பையைப் போட்டுவிட்டு ஓடுகிறான். பெரிய மக்கள் கூட்டம் பரபரப்போடு ஓடுகிறது. மகாவீரரும், விபீஷணரும் இதைக் காணுகிறார்கள்)

எல்லோரும் கொலைக்களத்திற்குத்தான் போகிறார்கள்.

காரணம்?

ஏதாவது புரட்சி ஏற்படலாம்.

புரட்சியா?

அவர்களை பலாத்காரமாக விடுவிப்பார்கள்.

ஆ!

அடுத்தபடி அரண்மனையிலும் நுழையலாம். மகாராஜா! இந்தச் சிறு புரட்சியிலேயே நம் சிம்மாசனத்தைக் கைப்பற்றி விடுவார்கள்.

இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். விபீஷணரே! வேண்டிய ஏற்பாடுகள் செய்யுங்கள்.

ஏற்பாடென்ன? ஈட்டி முனையைக் காட்டினால் இந்தப் புரட்சியெல்லாம் பொங்கிவிடும். முதலில் பட்டாளத்தை அனுப்புகிறேன்.

உம். அனுப்புங்கள்.

அதைத் தொடர்ந்து நானும் செல்ல வேண்டும்.

ஆகட்டும் புறப்படுங்கள்.

(வேகமாகப் போகிறான் விபீஷணன்)

(மக்களை சிப்பாய்கள் தடுத்து ஆவலை அதிகப் படுத்துகிறார்கள். ஒரே பரபரப்பு. கூச்சல் தூக்கு மேடையில் மூவரும்)

அமைதியாயிருங்கள். நான் சாகும்போது உங்கள் அமைதியையாவது காண்கிறேன். (கூட்டத்தில் ஒருவன்) இளைய மகாராஜா! இந்த அநியாயத்தை நாங்கள் காணவேண்டுமா?

காணவேண்டாம். போய்விடுங்கள். இன்னும் சிறிது நேரத்தில் சாகப்போகும் நாங்கள், இந்தக் குழப்பத்தால் இப்பொழுதே செத்துவிடுவோம். உங்கள் ஆத்திரத்தால் எங்கள் உயிரைக் காப்பாற்ற முடியாது உங்கள் அனுதாபத்தால் எங்கள் லட்சியத்தைப் பூர்த்தி செய்யுங்கள். பேதமற்ற பெருவாழ்வு சீமான், ஏழை என்ற நிலை ஒழிந்த சிங்கார வாழ்வு; சமத்துவ வாழ்வு. சமாதான வாழ்வு, இதற்காக அடிகோலினோம். அழியப்போகிறோம், இதோ ஒரு தீண்டத்தகாதவன்; சாதி கெட்டவன்; அவளும் நானும் ஒன்றாக உயிர் விடுகிறோம்.

எங்கள் பிணங்களைக் கண்ட பிறகாவது சாதி உணர்ச்சி ஒழியட்டும். எதிர்காலத்தில் எங்கள் கல்லறைகளின்மீது சாதி உணர்ச்சி ஒழியட்டும். எதிர் காலத்தில் எங்கள் கல்லறைகளின் மீது சாதியை விரட்டிய சமரசக் காதலர்கள் சாந்திகீதம் பாடட்டும்.

(ஒரே அமைதி)

இளவரசே! கடைசியாக சொல்லவேண்டியது.

எதை......? யாருக்குச் சொல்லப் போகிறேன்! என் நாட்டு மக்களுக்குச் சொல்லவேண்டியதைச் சொல்லி விட்டேன். ஏ! தூக்குமேடையே! நீதியின் முன்னே நிறுத்தப்பட்டு மரணதண்டனை பெற்ற எத்தனையோ துரோகிகளின் பிணங்களை

முத்தமிட்டிருக்கிறாய். இன்றைக்கு இந்த நிரபராதிகளின் பிணங்களுக்கும் பஞ்சணையாகப் போகிறாய்! சதி செய்தவர்கள்-கொலை புரிந்தவர்கள்-ராஜத்துரோகிகள் இத்தனை பேரையும் கழுத்தை நெறித்திருக்கிறாய். இன்றைக்கு எங்களையும் கட்டித் தழுவப் போகிறாய். கோரமான குற்றவாளிகளின் உன் கோரப் பசிக்கு இரையாகிக் கொண்டிருக்கிறாய். இந்நாட்டில் கொந்தளிப்பை ஒழிக்கப் புறப்பட்ட எங்களையும் சுவை பார்க்கப் போகிறாய். சுவைத்துப் பார்!

எங்கள் ரத்தத்தில் துரோக உணர்ச்சி இருக்கிறதா என்று சுவைத்துப்பார்! எங்கள் இருதயத்தில் சதியாலோசனை தேங்கியிருக்கிறதா என்று சுவைத்துப்பார்! எங்கள் எலும்புக் கூட்டில் சூழ்ச்சி எண்ணம் ஒட்டிக்கொண்டிருக்கிறதா என்று சுவைத்துப்பார்!!

(யாளித்தத்தரிடம்) நீங்கள் ஏதாவது?

இளவரசரோடு சாகிறேனே என்ற பெருமை. மகாராஜாவின் தீர்ப்புக்கேற்ப மடிகிறேனே என்ற திருப்தி என் நாட்டு தமிழர் முன்னிலையில் என் உயிர் விடை பெறுகிறதே என்ற ஆறுதல் சேதியாரே! சாவற்குமுன் ஒரு வேண்டுகோள். இளவரசருக்குமுன் நான் சாகவேண்டும். அந்த உத்தமரின் உயிர் தூக்குமரத்தில் துடிப்பதை நான் காணமாட்டேன். வாகை மாலை சூடவேண்டிய அவர் கழுத்தில் சாவுக்கயிறு இறுக்கப்படுவதை நான் காணமாட்டேன். சிம்மாசனத்தில் அமர வேண்டிய இவர் பொன்மேனி சவமாக இந்த மண்ணில் சாயும் கோரத்தை நான் காணமாட்டேன்.

நானே முதலில் சாகிறேன்.

நானே முதலில் சாகிறேன். இளவரசரைத் தூக்குமேடையில் நிறுத்தியது நான்! நாணில்லாவிட்டால் இந்த நாட்டுக்கே இந்த நாசம் வந்திருக்காது. என்னுடைய காதல், இளவரசரின் பலிபீடம். நான் ஒருத்தி நாட்டில் பிறந்தேன். ஆம்! இந்த நாட்டையே அழிக்கப் பிறந்தேன். நானே முதலில் சாகிறேன்.

"யாரும் சாகவேண்டியதில்லை"

(என்ற குரல்கேட்டு எல்லோரும் திரும்புதல். குமரி பிரவேசித்தல். எதிர்ப்புறத்தில் மகாவீரர், விபீஷணர் பிரவேசித்தல்)

நிறுத்துங்கள். அவர்களைத் தொடாதீர்கள்.