மணிமகுடம்
காட்சி 9 · 9 / 47
(பொன்னழகன் போகிறான்; அல்லி வாட்டம் அடைகிறாள்)
(அரசன் மாளிகை - வாயிற்புறத்தில் மெய்க்காப்பாளன் உலாவிக் கொண்டிருக்கிறான். குள்ளமான உருவமும், குறுகுறுப்பான பார்வையுமுடைய அவன், அங்கு யாரோ வருவதைக் கவனித்து விட்டு, உஷாராக நிற்கிறான். அமைச்சர் குணசீலர் வருகிறார். மெய்க்காப்பாளன் வருகிறான்)
அரசரைப் பார்க்க வேண்டும் என்று சொல்!
அதிகாரப்பூர்வமாகவா... அல்லது...
அதிகாரப்பூர்வமாகத்தான்...
இதோ ஓடிப்போய் சொல்லுகிறேன்...
(உள்ளே போகிறான், மீண்டும் வெளியேவந்து)
இதோ, இப்போதே வருவதாகச் சொல்லுகிறார் - தாங்கள் இங்கே அமர வேண்டுகிறேன்.
(அமைச்சர் உட்கார்கிறார்)
என்ன புதிய விஷயமோ...?
நீ அரசருக்கு மெய்க்காப்பாளன் தானே?
ஆமாம்...
அந்தக் காரியத்தோடு இரு! இதிலெல்லாம் தலையிட்டுக் கொண்டு தவிக்காதே! என்ன விஷயமாக நான் வந்தால் உனக்கென்ன?
அபச்சாரம், மன்னிக்கவும் - குஷிமிக்க வேண்டும்! இல்லை... அந்த தேவாலயம் கட்டுவதைப் பற்றி...
ஆமாம் - அதைப் பற்றித்தான் - நீயா கட்டப் போகிறாய்... (கோபமாக)
அய்யோ நானா! அதெல்லாம் கட்டுவதற்கு கொத்தனார்கள் இருக்கிறார்கள்; குடியேற குருநாதர்கள் இருக்கிறார்கள்!
ஏய் உலகப்பா! நீ வரவர தலைகீழாய்த்தான் நிற்கிறாய்...மரியாதையாக இரு.
அய்யோ-நான் தலைகீழாய் நிற்பதே இல்லிங்க பிரபு; சிரசாசனம் செய்கிற நேரத்தைத்தவிர!
மரியாதையாக இரு!
மண்டியிட்டு, அனுமார் போலவா?
(அதுபோல பாவனை செய்கிறான்)
மன்னிடம் பணி செய்கிறோம் என்ற மமதை - இரு இரு! அவளிடமே கூறி உனக்கு சரியான...
வேண்டாம்... வேண்டாம்.. பிரபு! என்னை மன்னித்து ஆட்கொள்ளுங்கள்... ஏதோ சிறுகுத்தனமாக சொல்லி விட்டேன். அரசருக்கு இதுமாதிரி நான் செய்யும் வேடிக்கையெல்லாம் மிகவும் பிடிக்கும்.. உங்களுக்கும் ஏதோ பிடித்திருக்கிறது என்று நினைத்து,...
எனக்கென்னடா பிடித்திருக்கிறது பேயா? பிசாசா?
இல்லீங்க.. நான் எது சொன்னாலும் தப்பு எடுக்கிறீங்களே; என்னை மன்னித்து விடுங்க பிரபு! என் வேலைக்கு வெடி வைத்து விடாதீர்கள் சாமி! அபச்சாரம்! அபச்சாரம்... அடியேன் சிறியேன் - இனி பிழை புரியேன்!
(கன்னத்தில் போட்டுக் கொள்கிறான்)
உன்னை மன்னிக்கிறேன். போய்த் தொலை! இனிமேல் இப்படியெல்லாம் செய்யாதே! போய்ப் பார் அரசர் வருகிறாரா என்று!
உத்திரவுங்க...
(என்று தனக்குள்ளாகவே அமைச்சரை கிண்டல் செய்து கொண்டே, உள்ளே போகிறான். அமைச்சர் காத்திருக்கிறார். மெய்க்காப்பாளன் வந்து)
பிரபு! அரசர் வருகிறார்!
(அமைச்சர் எழுந்து நிற்கிறார். அரசன் வருகிறான். அழகான அரும்பு மீசையும், கம்பீரமான உருவமும் கொண்ட அரசன் மணிமாறன். ஏறத்தாழ புதுமைப் பித்தனின் சாயல் பொருந்தியவனாகவே இருக்கிறான். பெருமிதத்தோடு நடந்து வரும் அரசனை அமைச்சர் வணங்குகிறார். அரசனும் வணங்கி விட்டு, ஆசனத்தில் அமருகிறான்)
குணசீலரே! என்ன விசேஷம்? எல்லாரும் நலம்தானே? கலாராணி செளக்கியமா?
