மணிமகுடம்
காட்சி 46 · 46 / 47
அதுவரை உம்மை விட்டுவைக்க உத்தேசமில்லை! உம்! இப்போதே இவரையும் கைது செய்யுங்கள்!
(உலகப்பன் கைது செய்தல்.)
அட, ஆண்டவனே! பரமசிவம்! ஓடிவந்து என்னைக் காப்பாற்று!
ம்.. அவரால் ஓடிவர முடியாது! ரிஷப வாகனத்துக்குக் கால் ஒடிந்து விட்டதாம்!
அட முருகா! இந்த நாஸ்திகனிடமிருந்து என்னைக் காப்பாற்று!
ம்.. அவர் எங்கேயிருக்காரோ? வள்ளி வீடோ? தெய்வயானை வீடோ? இந்தக் கத்தல் காதில் விழற நேரமோ, என்னமோ?
மகாவிஷ்ணு - நீயாவது வாடப்பா!
ஊஹூம் அது அவசரத்துக்கு நடக்காது! கருடன் மலையில் மோதிக்கிட்டு ரெக்கை ஒடிஞ்சு போச்சாம்!
இழுத்துப் போங்கள். எல்லாரையும்! மந்திரி - அரிஹரநாதன் - இந்தக் கொலைகாரன் மூவரும் ஒரே கூண்டில் கிடக்கட்டும் - ம்.. கொண்டு போங்கள்.
(உலகப்பன் மூவரையும் ஒன்றாகக் கட்டி இழுத்துப் போகிறான்.)
என்ன செய்யவேண்டுமென்று அரசர் விரும்புகிறார்?
சீமான்கள் சபை கலைக்கப்படவேண்டும்! அரசன் முடி துறக்க வேண்டும்!
என்ன?
இது முடிகிற காரியமா?
அரசர் கூறுவதனைத்தும் சரியானதுதான்! புரட்சி வெள்ளம் கரை புரண்டு நிற்பதும் உண்மைதான்!
அதைத் தடுக்க அரசரே ஒரு வழி சொல்லட்டும்!
சொன்னேனே - முன்பே! ஒரே வழி! அறிஞர் வகுக்கும் வழி! அரசைப் பொதுவாக்குவதுதான்!
அதற்கு மாற்று?
மாற்று என்ன? - பொதுத் தேர்தல் நடத்த வேண்டும்! அதிலே போட்டியிட்டு வெற்றி பெறுகிறவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும்!
நிலைமை அதுவானால் - அதுவே உகந்த வழியானால் - அரசர் இஷ்டப்படி நடப்பதே நல்லது!
எல்லோர் அபிப்பிராயமும் அதுதானே?
ஆமாம்! (கைதூக்கல்)
கை தூக்கி விட்டீர்கள்! மக்களின் கை நம்மை நோக்கித் தூக்கப்படுவதற்கு முன் - எச்சரிக்கையாக இப்போதே கை தூக்கி விட்டீர்கள்! மகிழ்ச்சி! நாளைக் காலையிலே - இந்த நாடு நல்ல செய்தி கேட்கும்! இன்றிரவு நான் நிம்மதியாகத் தூங்குவேன்!
(மாளிகையின் ஒரு பகுதி - அல்லி ஒளிந்து ஒளிந்து வருகிறாள்.)
(மாளிகையின் ஒருபகுதி - உலகப்பன் காவல் புரிந்தபடியிருக்கிறான் - யாரோ வருவதைப் பார்க்கிறான், தனக்குள்)
ஓகோ - அல்லியம்மாளா - காதலரைத் தேடிக் கொண்டு அந்தப்புரத்திற்கே வர ஆரம்பிச்சாச்சா? ஆமாம் - இது எப்பவே பிடிச்சு நடக்குது? அரசர் அவங்ககிட்ட உண்மையைச் சொல்லிவிட்டாரா? இல்லாமலா, அம்மா இங்கேயே வருவாங்க? சரி.. சரி.. நம்ப இங்க இடைஞ்சலா நிற்பானேன்! ஒதுங்கிக்குவோம்!
(போகிறான் அதைவிட்டு. அல்லி மெதுவாக அந்த இடத்தைக் கடந்து மாளிகைப் பக்கம் நுழைகிறாள் - பயங்கர இசை)
(அரசன் தூங்குகிறான். படுக்கையில் கொசுவலை கட்டப்பட்டிருக்கிறது. அல்லி வருகிறாள். கீழே தடுக்கி குப்புற விழுகிறாள். துப்பாக்கி கீழே விழுகிறது. அரசன் விழித்துக் கொண்டு எழுந்து விடுகிறான். அவள் அவசரமாக எழுந்து போய் கைத்துப்பாக்கியை கையில் எடுப்பதற்கு முன்பு, அவள் கையைப் பிடித்துக் கொள்கிறான். அவள் கையிலே துப்பாக்கி இருந்தும் சுட சுட முடியாமல், அவளது கை அவன் கையில் அகப்பட்டு விடுகிறது.)
அல்லி! எங்கே வந்தாய்?
தெரியவில்லை! உம்மைக் கொல்வதற்காக வந்தேன்!
என்னைக் கொல்லவா? ஏன்
எவ்வளவு நாளைக்கு எங்களை கொன்று வாழ முடியும் - கொலைக் கருவி கொலுமண்டபத்துப் பக்கமும் திரும்பும் என்பதைக் காட்ட வேண்டாமா, அதற்காக!
