காகிதப்பூ
காட்சி 22 · 22 / 23
திர:— அதை ஏன்ய்யா இப்ப சொல்றே?
தசா:— அதுக்கும் அரிசிச் செலவு இருக்கே... வாய்க்கரிசி.
திரவி:— ஓ... அதுக்காகச் சொன்னியா? பரவாயில்லை. அப்புறம் பாருங்க... பஸ் தொழிலை தேசீயமயமாக்கு—பாங்குகளை தேசீய மயமாக்கு—பஞ்சாலைகளைத் தேசீயமயமாக்கு... அப்பத்தான் சோஷவிசங்கிறான்... முடியுமா? இப்பவே நம்ப சர்க்கார் நடத்துற பஸ்தொழிலிலே லட்சக் கணக்கிலே நஷ்டம். கேவலம், ஒருபால்பண்ணை மாதவரத்திலே! அதில் 40 லட்சம் நஷ்டம்... என்னாமயம் வேண்டியிருக்கு... பொதுவா... நம்ப எலக்ஷனுக்கு... ஒரு மந்திரம் மாதிரி சோஷலிசம் சோஷலிசம்னா?
கருப்பா? சிவப்பா? பச்சையா? நீலமா?... காங்கிரஸ் சோஷலிசம் இருக்கே; அது ஒரு பாரிஜாதப்பூ!... அதை யாராலும் பறிக்க முடியாம இருந்தது... அதை ரொம்பபிரயாசைப்பட்டு பறிச்சிட்டு வந்தவர், காமராசர்! இதோ பாருங்க... அந்தப்பாரிஜாதப்பூவை... உங்களுக்குக்காட்டுரேன்...
[ஒருவன் வெள்ளித் தட்டில் ஒரு பெரிய பூவுடன் வருகிறான்]
திர:— பார்த்தீர்களா... பாரி ஜாதப்பூவை! காங்கிரஸ் சோஷலிசப் பூவை!... இதைப்பற்றி வர்ணிக்க எனக்குத் திறமையில்லை... நாட்டுக்கே நறுமணம் வீசும் இந்தப் பாரிஜாதப்பூவைப் பற்றி இப்போது கண்ணன் பேசுவார்...
கண்:— (பூவை வாங்கிக்கொண்டு பேசுகிறான்) ஆகா!... பாரிஜாதப் பூவே!... காங் கிரசிலேயள்ள கனதனவான்களுக்குக் கருணை கட்ட வந்த பாரிஜாதப் பூவே! ஏழை எளியவர்களின் ரத்தத்தை எடுத்துச் சிவப்பு வர்ணம்பூசிக்கொண்ட பாரிஜாதப்பூவே!... பாட்டாளிகளை—உழவர்களை—நெசவாளிகளை—நித்த நித்தம் வேலை செய்து ரத்தக்கண்ணீர்வடிப்பவர்களை கீழ்மட்டத்தில் வீழ்த்தி விட்டு, பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கும் பாரிஜாதப்பூவே! ஆலை அரசர்களை—ஐஸ்வர்யச் சீமான்களை—வட்டிக்கடை வேந்தர்களை—குட்டிக் குபேரர்களை இன்பபுரியில் மிதக்கவிடும் பாரிஜாதப் பூவே!
திரவி:— (திகைப்புடன்) ஏ, ஏ... என்ன பேசுறே!...
புறப்படுங்கள், காங்கிரஸ் எனும் சிலந்திக் கூட்டை விட்டு! நான் வெளியேறி விட்டேன். இந்த வேஷக்கார சோஷலிசவாதிகளின் கூடாரத்திலிருந்து வெளியேறி விட்டேன். நீங்களும் புறப்படுங்கள்... உண்மையான சோஷலிச முகாம்... அறிவொளிவீசும் அண்ணாவின் தலைமையில் இயங்கும் திராவிட முன்னேற்றக் கழகம்தான்... வாரீர், வாரீர்!
காகிதப்பூ!...
மற்றவர்கள்:— மணக்காது!
கண்:— காங்கிரஸ் சமதர்மம்
மற்:— இனிக்காது!
(கூட்டம்கலைகிறது; திரவியமும்தசாவவதாரமும் கட்டிக்கொண்டு அழுகிறார்கள்)
[விவசாயி, நெசவாளி, ஏனைய தொழிலாளர்களை சந்தித்துக் கண்ணன் பிரச்சாரம் செய்தல்...]
காவேரி வீடு
[காவேரி மரகதம்... இருக்கிறார்கள்.]
மரகதம்:— எப்படியம்மா; நான் சொன்னதை நிறைவேற்றி விட்டேனா இல்லையா?...
காவேரி:— மரகதம்! எனக்கொரு மகள் இல்லாத குறையை நீ போக்கி விட்டாய்... வீரத்தந்தையை இழந்து விட்ட கண்ணனுக்கு உன்னைப்போல ஒரு வீரத்தங்கை கிடைப்பதென்றால் அது அவன் செய்த பாக்கியந்தான்.
காவேரி:— அம்மா! கண்ணன் காங்கிரசை விட்டு வெளியியேறியது... தாங்கிரஸ்காரர்களைவிட வேற சில பேருக்கு ரொம்ப ஆத்திரமா இருக்கும்மா!...
காவேரி:— என்ன செய்றது... உண்மையைச்சொல்றதுக்கு ஊருக்குப்பயந்தா முடியுமா?... கள்ள மார்க்கெட்காரன் கறுப்புச் சந்தைக்காரன் எல்லாருமே கண்ணனுக்கு விரோதிதான்—கண்ணனோ அல்லது கழகமோ, தங்கள் புழைப்பிலே மண்ணைப்போடு துன்னா; இப்படிப்பட்டவர்களுக்கு ஆத்திரம் வரத்தானே செய்யும்...!
(மாலா ஓடிவருகிறாள்)
மாலா:— அம்மா! அம்மா! மரகதம்! ஆபத்து! கண்ணனுக்கு ஆபத்து!...
காவேரி:— ஆ!
மாலா:— ஆ!... என்ன மாலா?
மாலா:— நம்ப ஊர்க் கோடி பாழடைஞ்ச மண்டபத்துக் குள்ளே நாலைஞ்சு பேர் பேசுனது என் காதில்விழுந்தது... ராத்திரி கண்ணன், கூட்டம் முடிச்சிட்டு திரும்பி வரும் போது கொலை செய்கிறதா திட்டம் போட்டிருக்காங்க...
காவேரி:— ஆ!...
மர:— ஒருத்தன் கையில் துப்பாக்கியைக் கூட நான் பார்த்தேன்... என்னைப் பாத்துறபோராங்கண்ணு ஓடிவந்துட்டேன்...
காவே:— ஆ! கண்ணா!... மரகதம்... நான் என்ன செய்வேன்...
மரக:— பதறாதிங்கம்மா... வாங்க அந்த இடத்துக்குப் போவோம்... மாலா!... நீ போயி... பக்கத்து போலீஸ் ஸ்டேஷன்ல தகவல் கொடு...
(மூவரும் புறப்படுகிறார்கள்)
பாழடைந்த மண்டபம்.
