இரத்தக் கண்ணீர்
காட்சி 30 · 30 / 61
★
[திருசங்கு வீடு
சுமதி ஓடிவந்து நுழைகிறாள். அவளுடைய வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் முத்தாயி, கண்கள் ஒளிவிட—அவளையே பார்க்கிறாள்.
முத்தாயி!
சுமதி, என்ன ஆயிற்று கொடுத்துவிட்டாயா?
நல்லவேளை. நான் கொஞ்சம் வேகமாக ஓடியிராவிட்டால் இந்நேரம் அவரைக் கொண்டு போயிருப்பார்கள்.
என்ன—என்ன?
ஆமாம்—படையிலிருந்து வருகிறேன் என்று அவர் கூறியதும் உடனே பாதுகாப்பில் வைத்து விட்டார்களாம். தலைநகரிலிருந்து தளபதியைப் புறப்படும்படி உத்திரவும் வந்துவிட்டதாம். எல்லோரும் கிளம்பிவிட்டார்களாம்; அவரையும் அழைத்துக் கொண்டு!
பயப்படாதே! அந்த நேரத்தில் நான் போய் வேதாளத்தைச் சந்தித்து, தண்டப் பொன்களைக் கொடுத்தேன். இல்லாவிட்டால், உன்னுடையவரை விடுதலை செய்திருக்க முடியாது. அந்த வேதாளம் மிகவும் நல்லவர்.
பிரியமுள்ள தோழி! உன் உதவியை என்னால் மறக்கவே முடியாது.
[தழுவுகிறாள்]
அப்பப்பா! இப்படியா கட்டிப் பிடிப்பது. அவரிடம் கற்ற வித்தையை என்னிடமே காட்டுகிறாயே!
ஸ்... குறும்புக்காரி!
வா, வேடிக்கைப் பார்க்கலாம்; வெற்றிவேலனின் பவனி வீதி வழியே வருகிறதாம்! வாவா!
வெற்றிவேலர் பவனிதானே!
ஓகோ—உனக்குப் பிடிக்காது. உங்கள் இருவரின் பவனியை நான் பார்க்கவேண்டும். அப்போதுதான் உனக்கு உவகை பூக்கும்—உள்ளம் மணக்கும்—உற்சாகம் பொழியும். சரிதான் வா, இதையும் பார்ப்போம்.
இருவரும் வாயிற் பக்கம் வருகிறார்கள்.
★
[பழுதூர் வீதி
இப்படி எத்தனையோ முறை அவள் அழுதிருக்கிறாள். அப்போதெல்லாம்—அவள் அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தது—காதல் புறாக்கள், கன்றை நாடும் பசு, மான்தோலில் வேங்கை, ஆகிய மூன்று சிலைகளும் இப்போதும் அவளைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தன.
ஊர்வலமோ போய்க்கொண்டிருந்தது—திருசங்கு வீட்டின் வாயிலில் நின்று, வேடிக்கை பார்க்கத் தயாராக இருந்தார்கள்—சுமதியும் முத்தாயியும்!
ஊர்வலமும் அவர்களிடம் நெருங்கிவிட்டது. யுத்த வாத்தியங்கள் அவர்கள் வீட்டினின்றும் அகன்றுவிட்டன. படையில் சேர்ந்த ஆட்கள் அமர்ந்துள்ள பல்லக்கு வண்டிகளும் வீட்டைத் தாண்டி விட்டன. அடுத்து, வெற்றிவேலன்—வேதாளம் அமர்ந்துள்ள வண்டி அவர்களை நெருங்கியது. வண்டியிலிருந்தபடியே வேதாளம்—தளபதிக்கு முத்தாயியைக் காட்டி,
வீரம் நிறைந்த பிரபு! அதோ நிற்கிறாளே அந்தப் பொன் வார்த்துதான் நான் குறிப்பிட்ட முத்தாயி!
