சேரன் செங்குட்டுவன்
காட்சி 1 · 1 / 4
சேரன் செங்குட்டுவன்
நான்கு காட்சி நாடகம்
கலைஞர் மு. கருணாநிதி
செங்குட்டுவனின் தம்பி இளங்கோவடிகள் தீட்டிய சிலப்பதிகாரத்தில் ஒரு பொன்னேடு!....
கண்ணகி சிலை நாட்டுவதற்கு வடநாட்டிலே இருந்து கல் கொண்டு வந்த கதை !
தமிழகத்துப் பழம்பெரும் சரித்திரத்தைச் சொல்லும் வீர வரிகள்!
அன்றொரு நாள்! அணிதேர்ப்புரவி ஆட்பெரும்படையோடு நாம் அரசு கட்டிலில் அமர்ந்திருந்த நாள்!
அப்போது வடபுலத்திலே....கனகவிசயர் சபையில்...
தீராதிதீர தீன தயாபர தெய்வீக புருஷ வேதாந்த சாகர வேந்தர்குலதிலக உத்திரதேசத்து மன்னாதிமன்னர்கள் கடவுள் அவதார கனக விஜயர் பராக்! பராக்!
நமஸ்கார்!
நமஸ்கார்!
நமஸ்கார்!
சுயம்வரத்துச் சுந்தரிக்காகக் காத்துக் கொண்டிருக்கிறீர்கள் போலும் ஹி! ஹி!...
ஆமாம், நீங்கள் இருவருமே வந்து விட்டீர்களே! சுயம்வரப் போட்டியில் உங்களில் ஒருவர் ஜெயித்துவிட்டால், அந்தப் பெண்ணை நீங்கள் இருவரும் எப்படிப் பங்கு போட்டுக் கொள்வது?
பிறகு பாரதந்தான்.
விஜ. யாரப்பா நீ? என்ன பேசுகிறாய்?
தமிழ்! செந்தமிழ்! உலகத்தோடு பிறந்த தமிழ்! கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த தமிழ்!
சுயம்வர மண்டபத்தில் உனக்கென்ன வேலை?
உம்; விசித்திரமான கேள்வி வேந்தரே! சுயம்வர மண்டபத்தில் வயதான உங்களுக்குத்தான்வேலை; வாலிபர்களாகிய என் போன்றவர்களுக்கு வேலை இல்லை என்பது.
குறும்பு தேவையில்லை. நீ யார் என்று கூறு!
நானோர் தமிழ்ப்புலவன்—வடநாட்டு யாத்திரை வந்தேன்.
புலவனா? கவிதை புனையத் தெரியுமா உனக்கு?
கவிதை புனையத் தெரியாத புலவன்—கத்தி தூக்கத் தெரியாத வீரன்—இவர்களைத் தமிழகம் இதுவரை கண்டதே இல்லை.
அதையும் பார்த்து விடுவோம். எங்கே, உடனே, ஒரு கவிதை சொல்லு!
