உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சங்கத் தமிழ்/வாசிப்புப் பகுதி 93
இலக்கிய உரை

சங்கத் தமிழ்

வாசிப்புப் பகுதி 93 · 93 / 104

“எற்றமிகு உறையூர் நாடிழந்த என் தலைவன்; எளிய உணவருந்தி வாழ்கின்றானெனினும், எதிரிகள் அஞ்சியோடும் வலிய தோளுடையான்! என் மனையோ அவன் வாழுமிடத்திற்கு அருகிருந்தும் என்ன பயன்? என் மென்றோளில் அவன் மேனிபடுவதற்கு வழியில்லை! அந்நாளே எதிர்பார்த்து என்னுடல் மிக வாடிப் பொன்போலும் பசலை நிறம் படர்ந்ததுவே! ஒப்பில்லா என் தலைவன் போருக்குச் சென்றுளே; உப்பு வணிகர்களைப் பயந்தோட வைக்கின்றமெனத் தற்பெருமையாய்ப் பேரூர்ப் போர் விழாவில்

தருக்கித் திரியும் வீரர்கள் சிலர்; தம் வலியைத் தாமே இழப்பது போல் என் தலைவன் முன்னே வீரர்கள் வந்திடுவர் அன்றே? எதிர்த்தரப்பு வீரர்களே வருத்துதல் போல் என்னையும் என் தலைவன் வருத்துதல் நன்றே?”

இவ்வாறு; நற்கண்ணை எழுதியிருந்த பாடலிலே நயம் மட்டும் காணவில்லை நற்கிள்ளி! அவள் சொற்கண்டு சொக்கிவிட்டால் சிக்கிக்கொள்வோமென்று பயமுறுத்தி நெஞ்சத்தை அடக்கிவைத்தான்! “போர் வாளைத்தான் நான் காதலிக்கின்றேன்; பூவிதழை அல்ல! அல்ல! அல்லவே அல்ல!”

என்றோங்கி உயர்த்திப் பிடித்தான் வாளை - ஒரு குன்றேறி நின்று வீரர்களை அழைத்திட்டான் - அந்தக் காலை!

பொருள் விளக்கம் :

எஞ் = என் தலைவன். புற்கை = எளிய உணவு. புறஞ்சிறை = அருகில் உள்ள இடம். பொன்னன் நம்மே = பொன்னிறமாய்ப் பசலை படர்ந்ததே. ஏமுற்றுக் கழிந்த மள்ளர் = தமது வலியைத் தாமே புகழ்ந்து இறுமாப்புற்று வலியை இழந்திடும் வீரர்கள். உமணர் = உப்பு வியாபாரம் செய்வோர்.

*

[Small floral ornament below the separator.]

ஒருதலைக் காதல்

4

ஆமூர்ப் பெருமக்களே; ஆர்த்தெழுவீர் போருக்கு! அதிரட்டும் முக்காவல் நாட்டுக் கோட்டை முரசங்கள்!

நாப்பறை கொட்டி நம்மண் மீது காலூன்றும் பகையைப் போர்ப்பறை கொட்டிப் புழுதி மேடாக்கிடுவோம்!

கருவாகி உருவானூர் ஒரு பெண் வயிற்றில்; கல்லறை வடிவானூர் இந்த மண் வயிற்றில்!

நிறைவான வாழ்வு எனல் நூறாண்டு வாழ்வதல்ல! குறைவான வயதில் மாய்ந்திடினும்; அஃதோர் குறிக்கோளுக்காக எனில் - அதனைவிட நிறைவான வாழ்வெதுவும் மானமுள்ளோர்க்கில்லே!

மணிமகுடம், மாணிக்கச் சிம்மாசனம், மஞ்சம், கொஞ்சல், பணிபுரியப் பன்னூறு ஆளும், தேனும் கைகட்டிநின்று - கெஞ்சல்!

இவையனைத்தும் பெறல் எளிது இவ்வையகத்தில்! இளித்தும், நெளித்தும், ஏற்றியும் போற்றியும்,

இங்கிதம் அறியாதவனே இணையிலா ஏந்தலென்றும் இன்சொல் பயிலானே நன்னெறி ஆசான் என்றும்,

பண்பாடு மறப்போனே, பார்புகழ் மேதை யென்றும் பழிவாங்கும் குணத்தோனே, பரந்தமனச் சான்றோன் என்றும்

நாயினும் கீழாய்ப் பிறரை மதிப்பவனேத் தாயினும் சாலச் சிறந்தோன் என்றும்,

கல்லா மூடனைக் கற்றறி பெரியோய் என்றும், பொல்லாக் கயவனைப் புவிக்கோர் நல்லாய் என்றும்,

இல்லாச் சிறப்பெல்லாம் எழுதியும் பேசியும் எல்லாம் பெறுவது எளிதே இவ்வையகத்தில்! - ஆனால்;

மானமொன்றே நல்வாழ்வெனக் கொண்டு மரணம் தழுவினும் களத்தினில் சிரித்து,

மார்பினில் விழுப்புண் தாங்கியே வீழ்ந்து, மாப்புகழ் எய்திடல் மாணப்பெரிதே!

குலமகள் ஒருத்தியைப் புணர்ந்து குலாவிக் கொள்ளே இன்பம் பெறுவதைக் காட்டிலும் - நம்

நிலமகள்; பகைவர்க்கு அடிமையாகாமல் தடுத்திடும் போரில் நம்முயிர் தந்து - அவள் நெடுமடிதனிலே நீள்துயில் கொள்ளலே நீடித்த இன்பம், நிலைத்திட வழியாம்!

இமிழ் கடலின் அலைபோல எழுந்தும் வீழ்ந்தும், தமிழ் இனத்தின் வரலாறு தடுமாறிப் போகாமல்;

கமழ்சோலை மணம்போல காசினியில் பரவதற்கு அமிழ்தான உயிர்க் கொள்கை மானமொன்றே! அக்கொள்கையினை யாரிடமோ அடமானம் வைத்துவிட்டு அணிமணிகள், அரண்மனைகள் தக்கவைக்கும் மனிதர்களேத் “தத்தை மனிதர்” என்போம்! தமிழரென ஒப்பமாட்டோம்! எனவே,

கார்காலத்து மழைத்தூறல் எனக் கண்கள் வந்து தைத்திடினும், கழனி மடைகளிலே துள்ளுகின்ற கெண்டைமீன்களென வேல்கள் வந்து பாய்ந்திடினும்,

முகபடாம் பூண்டு சினந்தோடி வரும் யானைகளின் முரட்டுத் தந்தங்கள் குத்திக் கிழித்திடினும்

மங்கையொருத்தியின் இழையையும் வெல்லும், மரணத்தின் தழுவல் என்று; போர்ச் சங்கை எடுத்து முழங்கிடுக! - களத்தில் நம் பங்கைச் செலுத்திட முன்வருக!”