உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சங்கத் தமிழ்/வாசிப்புப் பகுதி 87
இலக்கிய உரை

சங்கத் தமிழ்

வாசிப்புப் பகுதி 87 · 87 / 104

கடைக்கணால் கொல்வான்போல் நோக்கி, நகைக்கூட்டம் செய்தான், அக் கள்வன் மகன்!”

*

(கலித்தொகை : பாடல் : 51 பாடியவர் : கபிலர்)

பொருள் விளக்கம் :

சிற்றில் = மணல் வீடு. அடைச்சிய கோதை = கூந்தலில் வைத்த பூ. பரிந்து = பறித்து. சிறுபட்டி = கட்டுக்கடங்காக் காளைப்பருவத்தினன். சிரகம் = நீர் அருந்தும் கலம். வாக்கி = வார்த்தல். தெருமருந்திட்டு = மிரண்டுபோய். நீவ = வழித்துவிட. நகைக்கூட்டம் = இன்பப் புன்னகை புரிதல்.

*

இருவிழி மழையும் இதய மகிழ்வும்!

(இசைப்பாடல்) இராகம் : சிந்து பைரவி தாளம் : ஆதி

(எடுப்பு)

என் இருவிழி மழைதனைக் காணுதீர்; என் இதயம் மகிழ்வதைக் காண்பீரோ!

போர்வாளேந்தி என் மகன் பொன்முடி; புல்லரை வீழ்த்தி உயிர் துறந்தான்; என் இருவிழி மழைதனைக் காணுதீர்; என் இதயம் மகிழ்வதைக் காண்பீரோ!

(தொடுப்பு 1)

மார்பில் விழுப்புண் பெற்ற மகன் - இந்த மண்ணை மீட்டதால் வாழ்த்துகிறேன்; அவன் என் மடியில் தவழ்ந்து வளர்ந்ததை எண்ணி மனம் வாடுகிறேன்! மனம் வாடுகிறேன்!

(எடுப்பு)

என் இருவிழி மழைதனைக் காணுதீர்; என் இதயம் மகிழ்வதைக் காண்பீரோ!

(தொகையறு)

துள்ளிவரும் பகையின் - தலைகளைக் கிள்ளிவரும் வீரன்தான் பிள்ளையாய்ப் பெற்றிருந்தேன்; பெருமகிழ்ச்சி கொண்டிருந்தேன்! ‘களம் சென்று வருகின்றேன் அம்மா’ என்று; கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தான் அன்று! கட்டித்தழுவி என் வீரக்கருஞ்சியத்தை தட்டிக் கொடுத்து ‘வென்று வா மகனே’ என்றேன்

வெட்டி வருவான் பகையை என வழிபார்த்து நின்றிருந்தேன் கொட்டிக் கிழங்குகளே மிதிப்பது போல் கொடும் பகைவர் உடல் மிதித்த மகன்; குன்றுமொன்று சாய்ந்ததுபோல் சாய்ந்துவிட்டான்; குன்றுப்புகழ் கொண்டு இந்தக் குல வரலாற்றில் குடியேறிவிட்டான்

(எடுப்பு)

என் இருவிழி மழைதனைக் காணுதீர்; என் இதயம் மகிழ்வதைக் காண்பீரோ!

(தொடுப்பு 2)

மானம்; என் மகன் கேட்ட தாலாட்டு; மரணம் அவன் ஆடிய விளையாட்டு! பால் குடிக்கும் குழந்தையாய் இருந்தபோதே வேல் பிடிக்கும் வித்தையினைக் கற்றுத் தந்தேன் ஆல் விட்ட விழுது போல் தந்தைக்கு மகனை - ஆட்டு வால் போலக் குட்டை மனம் கொண்ட பகை; நம் கோல் பறிக்கக் கூடாதென்று கொந்தளித்து; அவர், தோல் உரித்துத் தூத்துவிட்டுப் போரில் மாளுகிறான்; பெரும் புகழை ஆளுகிறான்!

(எடுப்பு)

என் இருவிழி மழைதனைக் காணுதீர்; என் இதயம் மகிழ்வதைக் காண்பீரோ!

(தொகையறு)

கொக்கின் சிறகாய் நரைத்துவிட்ட என் கூந்தல் தடவி; உன் போக்கை வாய் திறந்து வாழ்த்தம்மா எனக் கேட்ட வடிவழகன்; பொருதடக்கை வாளிங்கே; போருக்கு வந்த பகை எங்கே? எனப் பொங்கும் கடலாய் ஆர்ப்பரித்தான்! ‘போய் வா மகனே’ என்றுரைத்தேன்; ‘போனான், வரவில்லை - என் செய்வேன்?

புதுமழையின் உச்சியிலே கொடி போட்டான் என்று புன்னகையோ மின்னவிடும் என் முகத்தில்! விழிகளில் ஒளிவீசும் மகிழ்ச்சியுடன் பொங்குகின்ற கண்ணீரோ; ஓங்கி வளர்ந்துயர்ந்த மூங்கில் மரங்களிலே தேங்கி வழிகின்ற மழைத்துளியை வென்றிடுமாம்!

[Full-page illustration; no printed body text.]

(எடுப்பு)

என் இருவிழி மழைதனைக் காணுதீர்; என் இதயம் மகிழ்வதைக் காண்பீரோ!