சங்கத் தமிழ்
வாசிப்புப் பகுதி 83 · 83 / 104
கதிர் உறங்கும்! கருமுகில் மெத்தையிலே கண்ணயர்ந்து நிலவுகூட சற்றுறங்கும்! காசினியில் உயிரினங்கள் அனைத்தும் உறங்கும், மாசில் வீணையும் என்விரல் படாது வீட்டில் உறங்கும்!
ஊர் உறங்கும் வேளையிலே - நான் ஒருத்தி மட்டும் உறங்கவில்லை!
(தொடுப்பு -2)
அன்றில் பறவையினம் புன்னை மரத்தில் உறங்கும் அலைமோதிச் சிதறி அரும்பிய நீர்ப்பரப்பும் ஆழ்கடலோரம் உறங்கும்! சென்றான் எனைப் பிரிந்தென்று சிந்தை மிக நோகும் செந்தாமரை இமைகள் மூடமுடியாமல் போகும்!
ஊர் உறங்கும் வேளையிலே - நான் ஒருத்தி மட்டும் உறங்கவில்லை!
(முடிப்பு)
வரம்பொன்று வேண்டுமடி காதலுக்கென்றார் வராமலா போய்விடுவான் உன் தலைவனென்றார். ‘சுள்’ என்று என்மீது சுற்றத்தார் காய்ந்து விழுந்தார். நள்ளிரவில் அவர்கள்கூட நன்றாகத்தான் உறங்குகின்றார்!
ஊர் உறங்கும் வேளையிலே - நான் ஒருத்தி மட்டும் உறங்கவில்லை!
[Full-page illustration; no printed body text.]
உண்ணக் கொடுத்த பழச்சுளைகள் உதட்டைத் தாண்டி இறங்கவில்லை!
*
குறுந்தொகைப் பாடல்கள்
“அதுகொல், தோழி! காமநோயே வதி குருகு உறங்கும் இன்நிழற்புன்னை, உடை திரைத் திவலை அரும்பும் தீநீர், மெல்லம் புலம்பன் பிரிந்தெனப் பல் இதழ் உண்கண் பாடுஒல் லாவே?”
(பாடியவர் : நரிவெரூஉத் தலையார் பாடல் : 5)
“நள்ளென் றற்றே யாமம்; சொல் அவிந்து இனிது அடங்கினரே, மாக்கள், முனிவு இன்று நனந்தலை உலகமும் துஞ்சும் ஓர் யான் துஞ்சா தேனே”
(பாடியவர் : பதுமனார் பாடல் : 6)
பொருள் விளக்கம் :
வதி = தங்கியுள்ள. குருகு = அன்றில் பறவை. உடை திரைத் திவலை அரும்பும் தீநீர் = அலைகளால் உடைந்து, சிதறிய நீர்த்துளிகளால் அரும்பிய இனிய நீர்ப்பரப்பு. மெல்லம் புலம்பன் = நெய்தல் நிலத் தலைவன். பாடுஒல்லா = தூக்கமில்லாமையாயின. நள்ளென் றற்றே யாமம் = ‘நள்’ எனும் ஓசையுடைய நடு இரவு. சொல் அவிந்து இனிது அடங்கினர் மாக்கள் = புறங்கூறிச் சுற்றியிருந்த மனிதர்களும் இனிதாக உறங்கினர். முனிவின்று = வெறுப்புச் சொற்களை விடுத்து.
ஓர்யான் மன்ற = நான் ஒருத்தி மட்டுமே.
*
நெஞ்சம் இனிக்கிறது; தஞ்சம்புகத் துடிக்கிறது!
(இசைப்பாடல் தாளம் - ஆதி இராகம் - மிசிரபீலு)
(எடுப்பு)
நெஞ்சம் இனிக்கிறது - உன்பால் தஞ்சம் புகத் துடிக்கிறது! வெஞ்சமரில் வெல்லும் உன் தடந்தோள் கண்டு அஞ்சுவர் பகைவர்; எனப் பெரும் புலவர், கொஞ்சுதமிழில் உன் கொற்றம் வாழ்த்துதல் கேட்டு மிஞ்சுது காதல்; அதனால் நெஞ்சம் இனிக்கிறது - உன்பால் தஞ்சம் புகத் துடிக்கிறது!
(தொடுப்பு)
வஞ்சி எனக்கோர் வரம் தரவேண்டுமென கெஞ்சியுன்னைக் கேட்கின்றேன் - என்பால் எஞ்சியுள்ளது உயிர் ஒன்றுதான்; எனினும் வஞ்சமின்றி வழங்கிடுவேன் உனக்காகக் கண்ணா! - உன் மஞ்சத்து மயிலாக எனை ஆக்கிடுக மணிவண்ணா! அதை நினைத்தாலே - கனவில் வந்து நீ எனை அணைத்தாலே; நெஞ்சம் இனிக்கிறது - உன்பால் தஞ்சம் புகத் துடிக்கிறது!
(முடிப்பு)
மலைச்சாரல் காட்டோரம் ஒரு நாள் - மனம் மயக்குகின்ற மாலை நேரம் சென்றேன். குலையாகப் பழம் தொங்குகின்ற மரத்தின்
[Full-page illustration; no printed body text.]
