உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சங்கத் தமிழ்/வாசிப்புப் பகுதி 66
இலக்கிய உரை

சங்கத் தமிழ்

வாசிப்புப் பகுதி 66 · 66 / 104

இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை அதூவும் சாலும், நற் றமிழ் முழுது அறிதல்; அதனொடும் அமையாது, அணுக வந்து, நின் மதனுடை முழுவுத்தோள் ஒச்சித், தண்ணென வீசி யோயே, வியலிடம் கமழ, இவண்இசை உடையோர்க்கு அல்லது, அவணது உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை விளங்கக் கேட்ட மாறுகொல், வலம்படு குருசில், நீ ஈங்குஇது செயலே?

*

(புறநானூறு பாடல் : 50 பாடியவர் : மோசுகீரனார்)

பொருள் விளக்கம் :

விசித்த = வலித்துப்பிணைத்த. வார்புறுவள்பின் = வாரப்பட்ட வாரையுடைய. மைபடுமருங்குல் = கருமரத்தால் செய்த உறுதி வாய்ந்த முரசின் பகுதி. மஞ்ஞை = மயில். மண்ணி வாரா அளவை = நீராடி வருவதன் முன்னே. மென்பூஞ்சேக்கை = மெல்லிய பூக்களையுடைய கட்டில். தெறு = வெகுளல். இருபாற்படுக்கும் = இரு கூறாகப் பிளக்கும். மதனுடை = வலிமை வாய்ந்த. தண்ணென வீசியோய் = சாமரங்கொண்டு குளிர வீசினாய். வலம்படு குருசில் = வெற்றியுடைய தலைவனே.

அடையாளம் தெரியாமல் அலையுதோ நெஞ்சம்!

“தமிழ்மண்ணின் மானம் காத்துப் பெருமை சேர்க்கக் கனல் உமிழ்கின்ற கண்களுடன் களம் புகுந்தார் அவரும்! கனக விசயர்களின் தலை நொறுங்கக் கல்லேற்றிக் கண்ணகிக்குச் சிலை வடிப்பேன் வஞ்சியிலே என்று, கடுஞ்சபதம் மேற்கொண்டு வடபுலமே சென்று கொடுஞ்சொல் கயவர்களைப் புறங்கண்டு வென்று செங்குட்டுவ மாமன்னன் வெற்றிக் கீர்த்தியினை அங்குற்ற இமயத்து நெற்றியிலே வில்லாகப் பொறிக்கப் பொங்குற்ற சிங்கமாகப் போருக்குப் போனார் என் தங்கம் இங்குற்ற பெண் எனக்குப் பூரிக்குதங்கம் - எனினும்; சங்கொத்த என் கழுத்தை வளைத்துப் - பனையின் நுங்கொத்த உதடுகளால் என் கன்னத்தில் முத்தம் பதித்து;

“கண்ணே நீ கலங்காதே கனகவிசயர்களை வென்றவுடன் - சேர மன்னருடன் புறப்பட்டு விரைந்தோடி வந்துன் மடியினிலே வீழ்வேன்! புண்களையே போரில் அணிகளாய்ப் பெற்ற என் மார்பில் - உன் பூவிதழை ஒத்தியெடுத்துக் காயம் ஆற்றிடுவாய்! விடை கொடு விழியாலே மொழியாலே;” என்று - சேரரின் படை வீரர்களில் ஒருவராய் அவர் பயணப்பட்டபோது; அணுப்பொழுதும் பிரிந்திருக்க மாட்டேன் என்றுரைத்து என்நெஞ்சம்

[Full-page illustration; no printed literary text.]

அடம் பிடித்து அப்போதே அவரை நிழலாகத் தொடர்ந்ததம்மா! உச்சிமுதல் உள்ளங்கால் வரையில் வீணைமீட்டி - என் கச்சவிழ்த்துக் களிநடம்புரியக் கட்டிய மணாளன்தான் வரவில்லை; அதனாலே, கட்டிலுக்குத் துன்பமில்லை - என் கண்களுக்கும் தூக்கமில்லை! வட்டிலிலே நாழிக்கணக்கு பார்க்கும் வேலையையும் விட்டுவிட்டேன்! தொட்டிழுத்தென்னை இன்பத்தேனில் தோய்ப்பவரைக் கிட்டிகட்டி இழுத்துவரும் என்நெஞ்சம் என்றிருந்தேன்! தான் மட்டும் தனித்துவரக் கூடாதென்று - என்நெஞ்சம் தலைவனுடன் சேர்ந்து வர எண்ணித் தங்கிவிட்டதோ; அன்றி அன்பிலாதார் அவர் என்று கண்டு, கவலை மிகக்கொண்டு தெம்பின்றி மெதுவாக எனைநோக்கி வருகின்றதோ?

ஒருவேளை எனைநாடி வந்து எனை உற்றுப்பார்த்து; பசலைபாய்ந்து உடல் இளைத்துத் துரும்பான என் உருமாற்றத்தாலே; அடையாளம் தெரியாமல்; “இவள் யாரோ ஒருத்தி” என்றும் “அயலாள் இவள்” என்றும் திரும்பிப்போய் எனைத்தேடி அலைகின்றதோ? நானறியேன்!”

வண்டுகள் மொய்த்துக் கிளறிய நறுமணத்தை மென்காற்று மொண்டெடுத்துக் கொணர்ந்திங்கே வீசி மகிழ்வித்தபோது வளையல் நெகிழ்ந்துவிழப் பிரிந்துபோன கணவன்; மானமறவன் வரவில்லையின்னும் என்ற வாட்டத்தோடும் - அவனோடு தொடர்ந்திட்ட தனது அன்பு நெஞ்சம் கூடச் சோகம் படர்ந்திட்ட அவளுக்கு ஆறுதல் அளிக்கவில்லையெனும் ஏக்கத்தோடும், ‘நற்றிணை’யில் ஒரு நங்கை வெளியிட்ட பிரிவுத்துயரை விற்றொழில் வேந்தன் செங்குட்டுவன் படையெடுப்புக் காதையுடன்

இணைத்தளித்தேன்! இன்புற்றேன்! நான் சுவைத்த இந்த இனிப்புத்தமிழ்ப் பழக் குலையை எளிய நடையில் உமக்கும் தந்தேன்!

*

“குறுநிலைக் குரவின் சிறுநனை நறுவீ வண்டுதரு நாற்றம் வளிகலந்து ஈயக் கண்களி பெறூஉம் கவின்பெறு காலை எல்வளை ஞெகிழ்த்தோற்கு அல்லல் உறீஇச் சென்ற நெஞ்சம் செய்வினைக்கு அசாவா ஒருங்குவரல் நசையொடு வருந்தும் கொல்லோ? அருளான் ஆதலின், அழிந்திவண் வந்து, தொன்னலன் இழந்தஎன் பொன்நிறம் நோக்கி, ‘ஏதிலாட்டி இவள்’ எனப் போயின்று கொல்லோ நோய்தலை மணந்தே?”

*

(நற்றிணை : பாடல் : 56 பாடியவர் : இளம் பெருவழுதி)

பொருள் விளக்கம் :

குரவு = குராமரம். சிறுநனை நறுவீ = சிறிய அரும்பு முதிர்ந்த நறிய மலர். வளி = தென்றல்காற்று. எல்வளை = ஒளிமிக்க வளையல். அல்லல் உறீஇயர் சென்ற = துன்பமுற்று அவர்பால் சென்ற. உசா ஆய் = துணையாயிருந்து. நசை = விருப்பம். தொன்னலன் = பழைய நலன் (எழில்). ஏதிலாட்டி = அயலாள்.

*

கள் உண்ட கடுவன்!

கடுவன் என்றால் ஆண்குரங்காம்; மந்தி எனிலோ பெண்குரங்காம்! கடுவன் ஒருநாள், கற்பாறைச் சுனையருகே கள்ள மதுவருந்திக் கண்ணுறங்கும்போது, கபிலர்; அவ்வழி வந்தவர் கண்ணில் பட்டதாம்!

“ஆண்குரங்கா? மதுவருந்தியா? அதுவும் அரசின் அனுமதியில்லாத் திருட்டு மதுவா? இக்கணமே அதனை இழுத்துச் சென்று இடுக சிறையில்!” எனச் சீறுகின்ற சட்டம் எதனையும் அரசு இயற்றி - அதனைத் தன் இட்டம் போல் வளைத்துக் கொள்ளும் காலமல்ல அது!

இருப்பினும் கபிலருக்கோர் ஆசை; இக் கடுவன் எங்கிருந்து திருடியது மதுவை என அறிவதற்கு ஆவலுற்றார்! எழுப்பிக் கடுவனையே கேட்டுவிடலாமா என எண்ணினார் எனினும் அஃதியலவில்லை! ஏனெனில் அப்பொல்லாக் கடுவன்; எண்ணிறந்த நாட்கள் அங்கே பொன்னிற மலர்கள் உதிர்ந்துதிர்ந்து கண்கவர் வண்ணம் உயர்ந்திருந்த கவினுறு பூ மெத்தை யொன்றில் உலகம் ஒன்றிருப்பதையே மறந்துவிட்டு உடல் கிடத்தி மயங்கிப்போய் உறங்கியதாம்!

சலசலக்கும் அருவியோரம் மலைமீது சந்தன மரக் கிளைகளிலே கடுவனும் மந்தியும் ‘சடுகுடு’ ஆட்டம் போட்டுப் பின்னர் சங்கமித்தல் கண்டுள்ளார் - இன்றோ; மந்தியும் கடுவனும் தாவிக் கொஞ்சி அந்தி சாயும் நேரத்தில் போடும் ஆட்டம் மறந்தது ஏனென்று வியந்து பார்த்தார்! காலை முதல் கடுவனும் மந்தியும் காடெல்லாம் காதல் புரிந்தலைந்து

[Full-page illustration; no printed literary text.]

மாலையிலே களைப்பு போக்க மந்தியைத் தனிவிடுத்துக் கடுவன் மட்டும் மயக்கத்தில் ஓய்வு கொள்ள மருந்தொன்றைத் தேடிப்பிடித்து மலைமீது குவிந்திருந்த மலர்மிசையில் மல்லாந்து தூங்கியதாய்க் கருதிக் கொண்டார்!

மந்திக்குக் கடுவன் மதுவருந்தும் சேதி தெரிந்தால் நிந்தித்துத் தன்னருகே அதனை நெருங்காதே எனத் தடுக்கும்! அறிவுரைகள் கூறி அறவழி தவறாமல் நடப்பதற்கு அடிக்கடி வற்புறுத்தி அதனாலே ஊடல் கொள்ளுகின்ற மனைவிக்கு அஞ்சுகின்ற கணவனாக இருந்ததாலே மந்திக்குத் தெரியாமல் கடுவன் மதுவருந்திக் கிடந்ததங்கே!

கடுவன் மதிமயங்கிக் கிடந்திட்ட காரணத்தைக் கபிலர் கற்பனையால் ஊகித்தார் எனினும், காரூரும் வானம் சுழல்வது போலும் நீரூரும் நில முழுதும் பறப்பது போலும் தேரூர்ந்து வருகின்ற தென்றலென வந்து - நினைவின் வேரூர்ந்து தடுமாறச் செய்கின்ற ‘தேறல்’தனை கடுவனுக்குக் காய்ச்சிக் கொடுத்துக் காசினியை மறக்கச் செய்ததுதான் யாரோ - இந்தக் கடும் போதை ஏறுதற்குப் பயன்பட்டக் கனிவகை, மரப்பட்டை எதுவோ எனக் கபிலர் திகைத்தார்!

கால் வலிக்க நின்று கடுவனின் ஆராய்ச்சியிலே கனத்த சிந்தனையை ஓடவிட்ட காரணத்தால், கபிலருக்குச் சற்றே தாகம் எடுக்க; அருவியின் நீரையள்ளிக் கையளவு அருந்தித் தன் நாவை நனைத்தபோது; புரியாமல் கிடந்த புதிருக்குப் புலவர் விடை கண்டாரம்மா! சுனைநீரில் சிறிதளவே பருகினார் எனினும் அச் சுவைநீரோ அவர் நாடி நரம்பெல்லாம் “சுதி”யேற்றி மயக்கமெனும் “சொர்க்க”த்தின் மாளிகைக்கதவு வரை இழுத்தேகிற்று! பெரும்பாடுபட்டுத் தன்னை விடுவித்துக்கொண்டு, அரும்பாடல் ஒன்றியற்றி அகப்பாடல் தொகுப்பில் சேர்த்தார்!

குறிஞ்சி நாட்டுக் கொற்றவன் ஒருவனின் கோலஞ்செய் மலைவளத்துச் சிறப்பைக் குறிக்கின்ற