சங்கத் தமிழ்
வாசிப்புப் பகுதி 36 · 36 / 104
அதற்கு அவன்;
(1) காலையும் பகலும் கதிர்சாய் மாலையும் கண்ணுறங்கும் இரவும் கருக்கல் வேளையும் காதலர்க்குப் பகுத்துணர முடியுமாயின் அக்காதல் போலிக் காதல் என்பேன்! அதனால்தான் பொழுதுபற்றிக் கவலையின்றி அவளை எண்ணி அலைகின்றேன். அடைவதற்கு வழியில்லையென்றால், பனைமடலால் செய்திட்ட பரியொன்றில் ஏறிக்கொண்டு
மடலூர்வேன் மங்கைக்காக! - அந்த மாபழிதான் அவள் தலையில் வீழும்! பாவம், இந்த இளைஞனது காதலைத்தான் பாவிமகள் புறக்கணித்தல் பெருந்தீது என பார்ப்பவர்கள் பதைத்துப்போய் பறைசாற்றி வசை பொழிவர் - அந்த ஊர் தூற்றல் அவளுக்கு வேண்டாமெனில் நான் உயிர் துறத்தல் ஒன்றே உயர் வழியாகும்” என்றான்.
சாதலுக்கும் துணிந்த காதல் கொண்டவன்பால் இனி மோதல் கூடாதென முடிவெடுத்து முறுவலித்தாள்! தலைவியிடம் அவன் தூய காதல் கூறித் தலையசைத்துச் சம்மதிக்க வைத்தாள்! பிறகென்ன? பெரியோர்கள் முன்னிலையில் பெற்றார் உற்றார் மகிழ்ந்திடவே நிறைவேறிற்று மணவிழா நிகழ்ச்சியெலாம்!
கற்றார்கள் இன்பத்துப் பாடம், கட்டிலறைப் பள்ளியிலே கற்பிக்கத் தயாரானார், அற்புதக் கலைகள் எல்லாம்; பின்னர் ஒருவருக்கொருவர் உயிராகி; உறவாடி!
*
இடையிலோர் நாள் இராப்பொழுதெல்லாம் இன்பத்தில் மிதந்து ஆழ்ந்தவளைக் காலையிலே தோழி கண்டு “கடந்துபோன இரவு; கனிச்சாறா? தேன்பாகா?” என்றாள்! கன்னத்தில், கழுத்தில் பற்குறியும் - நகச் சின்னத்தை அதற்குக்கீழும் மறைப்பதற்கு முயன்றவாறு நாணத்தால் தலைவி முகம் சிவக்க, முன்னிரவு நடந்த கதை முழுக்கதையும் சொல்லாமல்,
(2) “வேதனையைக் கேளடி தோழி! விடியாமலிருக்கும் பொழுதென்று எண்ணி விளையாடிக் கொண்டிருந்தோம்! விடிந்ததென்று கோழி ‘குக்கூ’ என்றவுடன் தோள் தோயக் கிடந்த காதலனைப் பிரிக்க வாள் போல வைகறையும் வந்ததடி!” என்றாள்.
இவ்வாறு கண்கலங்க உரைத்திட்ட தலைவிதனைத் தேற்றி “காதல் எனில் கசக்குதென வெறுத்திட்டாய் அன்று;
காலைப்பொழுது கண்டு கடுங்கோபம் கொள்கின்றாய் இன்று! வசை பாடாதே வைகறையை! இன்ப இசை பாட மீண்டும் இரவு வரும்!” என்றாள் தோழி! “அருவிக்குச் செல்லலாமா குளிக்க?” என்றாள் தலைவி! “அங்கு நான் எதற்கு? அவர் இருப்பார் உனக்குத் துணைக்கு” என்றாள் தோழி!
*
(1) காலையும், பகலும் கையறு மாலையும், ஊர்துஞ்சு யாமமும், விடியலும், இன்றுஇப் பொழுதுஇடை தெரியின், பொய்யே காமம்; மாவென மடலொடு மறுகில் தோன்றித் தெற்றெனத் தூற்றலும் பழியே; வாழ்தலும் பழியே - பிரிபுதலை வரினே!
(குறுந்தொகை : பாடல் : 32 பாடியவர் : அள்ளூர் நன்முல்லையார்)
(2) குக்கூ என்றது கோழி; அதன்எதிர் துட்கென் றன்றுஎன் தூய நெஞ்சம் - தோள்தோய் காதலர் பிரிக்கும் வாள்போல் வைகறை வந்தென்றால் எனவே!
(குறுந்தொகை : பாடல் : 157 பாடியவர் : அள்ளூர் நன்முல்லையார்)
பொருள் விளக்கம் :
(1) ஊர்துஞ்சுயாம = ஊர் உறங்குகிற இரவுப்பொழுது. பொழுதிடை தெரியின் = பொழுதுகளின் தன்மை தெரியுமானால். மா = பரி அல்லது குதிரை. மடல் = பனைமடல். மறுகில் = தெருவில்.
(2) துட்கென்று = அதிர்ச்சியால் திடுக்குற்று. தோள்தோய் = தோளைத் தழுவிக்கிடத்தல். வைகறை = விடியற்காலை.
*
கவிஞர்கள்
தெளித்த பன்னீரும் வடித்த கண்ணீரும்!
பார்முழுதும் தலைகீழாய்த் திசைமாறிக் கவிழ்ந்தாலும் பாதகராம் நன்றியினைக் கொன்றோர் வாழ்வு பாழ்பட்டே நாசமாகு”மென்று - அவன்பால் பரிசுபெற்ற ஆலத்தூர்கிழார் எனும் பாவாணர், பரிவுடனே நன்றிகூறி நல்வாழ்த்துச் சொன்னார்.
கருவூரைக் கிள்ளி மன்னன் முற்றுகையிட்டபோது, “காவல் மரங்கள் சாய்கின்ற ஒலி கேட்டு; அரண்மனைக்குள் ஒளிந்துகொண்டு அஞ்சி நடுங்கும் ஆண்மையற்ற கோழையினை வெற்றிகொளல் பெருமையாமோ?”
கிள்ளிவளவன் முன் சென்று அந்த ஆலத்தூர்கிழார் அள்ளிப் பொழிந்த அறிவுரைப் பாடல் கேட்டு துள்ளி வந்த படையுடனே திரும்பிச் சென்றான்
என
உறை விட்டெழுந்தது வாள் என்றால், ஒரு பகைப்புலம் ஒழிந்தது பார் என்று உறையூரில் ஆண்ட மன்னன் - தமிழ் உலகு புகழ் சோழ மன்னன்!
கண்ணில்
வளமுற்ற பொன்னி நிலப் பெருவேந்தன் குளமுற்றொருவர் வந்துவிட்டால் உளமுருகி வரவேற்று அளவற்ற பொற்குவியல் கொடையாய் வழங்கிடுவோன் குளமுற்றம் எனும் ஊரில் இயற்கை எய்தியதால் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என வாழும் வரலாற்று இலக்கியத்தில் நிலைத்திருப்போன்!
புறநானூறுக் கருவூலத்தில் இவன் பெருமைதனைப் பாடுகின்ற புகழ்க் கவிதை பல உண்டு! பாடிய புலவர்களும் பலராவர்!
