உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 37 · 37 / 300

அழகனின் சொற்கள் செவியில் விழுந்ததும் ஓவியன், சிற்பியைப் பார்த்து, “நீர் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை” என ஒத்துக் கொண்டான்.

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை யற்று.

அதிகாரம் - 41 - கல்லாமை; பாடல் - 407

Colour illustration above the prose showing a woman standing opposite a reclining/seated man.

எலுமிச்சம் பழத்தைச் சுவைக்காமலிருக்கும்போதே - நேரிலே காணும் போதே நாவிலே நீர் ஊறுகிறது; புளிப்பு உணர்ச்சியால் ஆட்கொள்ளப் படுகிறோம். ஆனால், மனிதனை நிலை தடுமாறச் செய்யும் சக்திபெற்ற மதுவை நினைப்பதாலோ - நேரில் காண்பதாலோ ‘போதை’ உணர்ச்சி அவனை ஆட்டிப் படைப்பதில்லை. அதை அருந்திய பிறகே மயக்கமும் அது தரும் மன உற்சாகமும், இன்பவெறியும் தலைபெடுக்கிறது. அதிகப் போதையில் வீழ்ந்தவனையும் நிமிரச் செய்யும் வல்லமை எலுமிச்சைக்கு உண்டு என்பார்கள்.

எலுமிச்சை, மதுவை வெல்லக் கூடியது; மதுவின் ஆதிக்கத்தை முறியடிக்கக் கூடியது. கள்ளைப் போலன்றிக் கண்ட மாத்திரத்தில் நாவில் புளிப்பு உணர்ச்சியைப் பொழியும் தன்மை வாய்ந்தது!

‘எலுமிச்சையைப் போன்றதே காமம்’ என்பதை வள்ளுவர் சொல்லாமற் சொல்லுகின்றார். இன்ப விருந்தளிக்கும் எழில் நிறை பெண்ணாளை - அவள் இடை காட்டும் நெளிவை - இதழ் காட்டும் சுவையை - இருவிழி காட்டும் குளிரை - பிரிந்திருக்கும் காதலன், தொலைவிலிருந்து எண்ணிப் பார்த்தே களிப்படைய முடியும். விரக விருந்தளிக்கும் பாவை விழியெதிரே நிற்பதைக் கண்டாலே மகிழ்ச்சி பொங்கும். இந்தப் பெருமை, வெறியூட்டும் மதுவுக்குக் கிடையாது; மங்கை தரும் சுகத்திற்கே நினைத்துக் களித்தலும், கண்டு மகிழ்தலுமான சிறப்புக்கள் உண்டு என்று செந்நாப்போதார் சித்திரத் தமிழில் தீட்டுகின்றார்.

அதனால்தான் போலும் பெண்களை எலுமிச்சம்பழம் எனவும் சிறப்பிக்கின்றனர். இரண்டுமே கண்டவுடன் உணர்ச்சியூட்டுவன அல்லவா!

கண்டவுடன் உணர்ச்சி கிளப்பும் எலுமிச்சம்பழம், மதுவை வெல்கிறது.

அந்த எலுமிச்சையை, நேரில் கண்டவுடன் மட்டுமின்றி நினைத்தவுடன் மகிழ்ச்சியூட்டும் காதற் பெண்டிர் வெல்லுகின்றனர்.

அந்தச் சிறப்புக்கு இதோ குறள் :-

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்(கு)இல் காமத்திற்(கு) உண்டு.

அதிகாரம் - 129 - புணர்ச்சி விதும்பல்; பாடல் - 1281

Large colour illustration showing Valluvar teaching a student while a hunter stands at the hut entrance and a spotted deer appears behind them.

வழக்கம்போல், வள்ளுவர் தம் மாணாக்கனுக்குத் தமிழ் இலக்கணம் கற்றுக் கொடுக்கும் நேரம். அவரது அகன்ற நெற்றியில் தேக்கப்பட்ட சிந்தனைப் பெருவெள்ளம், ஒளிவிழி மடைகளின் வழியாகப் பாய்ந்து கொண்டிருந்தது. அப்போது அழகிய மான் குட்டியொன்று அச்சத்தால் நடுக்குற்றுத் தன் இனத்துக்குரிய இயல்பான வேகத்தை இரட்டிப்பாக்கிய வண்ணம் வள்ளுவரின் குடிலுக்குள் ஓடி

ஒளிந்து கொண்டது. குறளாரின் குளிர்ப்பார்வை அந்த இளம் மானின் மீது படுவதற்குள் வில்லும் அம்பும் தாங்கிய வேடன் ஒருவன் விரைந்து வந்து, வள்ளுவருக்கெதிரே நின்றான். “இந்தப் பக்கம் ஒரு மான் ஓடி வந்ததே! கண்டீர்களா? கண்டிருந்தால் சொல்லி விடுங்கள்; அது என் அம்புக்குத் தப்பிய மான்! ஒருவேளை உமது இல்லத்திற்குள் நுழைந்து விட்டதோ?”

என்று பரபரப்புடன் கேட்டான்.