உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
குறளோவியம்/பகுதி 245
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 245 · 245 / 300

என்ற குரல் கேட்டு, வயலூரான் திரும்பினான். இரண்டு கால்களுமற்ற ஒரு நொண்டி, பக்கத்துக் குடிசையிலிருந்து இந்த விளக்கத்தை அளித்துக் கொண்டிருந்தான். வள்ளலுக்குச் சினம் பொங்கியது. நொண்டியை முறைத்துப் பார்த்துவிட்டு வேகமாக அந்த இடத்தைவிட்டுப் போய்விட்டான்.

“என்னய்யா! வள்ளல் கதை எப்படியிருக்கு பார்த்தீங்களா?”

எனக் கேட்டுக்கொண்டே நொண்டியிடம் ஓர் இளைஞன் வந்தான்! இளைஞன் பெயர் செம்மல்!

“என்னப்பா செய்றது! விளம்பர வள்ளல்களின் காலம் இது! இங்கேயொரு நூறுபேர் கூடியிருந்தால் உடனே அந்த வள்ளல், இந்த அனாதைக் குழந்தையை எடுத்து அணைத்துக்கொண்டு, இறந்துபோனவளின் இறுதிச் சடங்குகளையும் முன் நின்று நடத்தியிருப்பான்” என நொண்டி முணுமுணுத்தான்.

அங்கிருந்து விரைந்து அகன்ற வள்ளல், ஆலயத்தில் நடைபெற்ற இசை விழா ஒன்றுக்குச் சென்றமர்ந்தான்.

பல இசைவாணர்கள் இசை மழை பொழிந்தார்கள்! இறுதியில் ஒருவன் இசை பாடிட மேடையில் தோன்றினான். அவன் பாடத் தொடங்கி சில விநாடிகள் கூட ஆகவில்லை; வள்ளல் வயலூரான், “போதும் நிறுத்து! உன் பாட்டுக்கும் இசைக்கும் ஒன்றோடொன்று பொருந்தவே இல்லை!”

என்று உரத்த குரல் எழுப்பினான்.

“ஆமாம்! உமது கண்ணுக்கும் கருணைப் பண்புக்கும் எப்படிப் பொருத்தமில்லையோ, அதைப் போல இந்தப் பாட்டுக்கும் இசைக்கும் பொருத்தமில்லை!”

எனக் கூறியவாறு, வள்ளலின் தோளில் கைவைத்தான் இளைஞன் செம்மல்! வள்ளல் திடுக்கிட்டுத் திரும்பினான். செம்மலின் கையில் அந்தத் தாயை இழந்த குழந்தை இருந்தது.

“அய்யா வள்ளலே! அங்கே கண்டீரே, அவலக்காட்சியொன்றை! தாய் பிணமாய்க் கிடக்கவும் - குழந்தை பசியால் துடிக்கவும் - எவ்வளவு பெரிய துயரக்காட்சி! உமக்குக் கண்ணிருந்தும் கருணை பிறக்காத காரணத்தால் அந்தக் கண்களால் பயன் என்ன? பாட்டும் இசையும் பொருந்தாவிடில் பயன் இல்லாதது போலவே கண்ணும், கருணையும் பொருந்தாவிடில் பயன் ஏதுமில்லை என்பதை உணர்வீராக!”

செம்மல் இதைச் சொல்லிவிட்டு, அந்தச் சின்னக் குழந்தையுடன் சென்று விட்டான். வள்ளல் வயலூரான் திகைத்து நின்றான்.

“பண்ணென்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்ணென்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்”

அதிகாரம் - 58 - கண்ணோட்டம்; பாடல் - 573

கண்ணோட்டம் = அருள், இரக்கம், கருணை

என் திருவிழிகளே! நீங்கள் எல்லை கடந்து ஆடிய ஆட்டத்தின் விளைவைக் கண்டீர்களா? எதற்கும் ஓர் அளவு வேண்டும் என்பதை மறந்து நீங்கள் குதித்ததற்கு இதோ உங்களுக்குத் தண்டனை கிடைத்துவிட்டது.

பக்கத்து வீட்டுத் தோட்டத்தில் சிட்டுக் குருவியொன்று கொய்யாமரத்துக் கிளைகளில் தாவித்தாவி சதிராடித் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. பதுங்கிப் பதுங்கி வந்த பூனை, திடீரெனப் பாய்ந்தது. கட்டுக் கடங்காத களிப்பிலாடிய குருவியின் “கீச்! கீச்!”

ஒலி மட்டும் காற்றோடு கலந்தது. பாவம்; சிட்டுக்குருவி!

நீராடிவரக் குளத்திற்குச் சென்றேன். சின்னஞ்சிறு சேல்கள் இரண்டு; என் கண்களே - உங்களைப் போலத்தான் இருந்தன! நீரில் எழும்பி எழும்பிக் குதித்துக் கும்மாளம் போட்டுக்கொண்டிருந்தன! எவ்வளவு உயரம்தான் எழும்பிக் குதிப்பது? அதற்கோர் வரம்பு வேண்டாமா? நீரிலிருந்து உயரத்திற்குப் பாய்ந்த அந்தச் சேல்மீன்கள், திடுமெனக் கரையில் விழுந்தன! துடித்தன! துவண்டன! காப்பாற்ற ஓடினேன்! அதற்குள்